Showing posts with label VILLAIN. Show all posts
Showing posts with label VILLAIN. Show all posts

Monday, 12 April 2021

S.V.RAMDASS ,VILLAIN ACTOR BORN 1934 AUGUST 23

 


S.V.RAMDASS ,VILLAIN ACTOR 

BORN 1934 AUGUST 23



S.V.ராமதாஸ்-வயது-83. பழம்பெரும் நடிகர்.தமிழ், தெலுங்குப் படங்களில் வில்லனகவும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். கொஞ்சும் சலங்கை, ஆசைமுகம், படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், தங்கை, திருடன், வசந்த மாளிகை, கழுகு, இராணுவ வீரன், மூவேந்தர், உயிர் மேல் ஆசை, இதோ எந்தன் தெய்வம், இதயக்கனி, சங்கிலி, கொஞ்சும் குமரி, அறிவாளி, தேடி வந்த லட்சுமி, புன்னகை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். திரையுலகில் பீடி, சிகரெட், மதுப்பழக்கம், பெண் சகவாசம் என்று எந்த கெட்டப் பழக்கத்திற்கும் அடிமையாகாத ஒரு நடிகர் இவர்.


சூப்பர்வைசராகயிருந்து நடிகரானவர் எஸ்.வி.ராமதாஸ். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன்கள் பட்டியலில் எஸ்.வி.ராமதாசுக்கும் ஓர் இடமுண்டு.


அந்த கணீர் குரல், வில்லன்களுக்கே உரிய கம்பீர உடல்வாகு இதெல்லாம் இவரை நிரந்தர வில்லனாக்கியது. இவரது தாய் மொழி தெலுங்கு. 23.8.1934 அன்று ஆந்திராவிலுள்ள சின்ன கிராமம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் பி.ஏ., வரை தமிழில் பட்டப்படிப்புப் பயின்றவர். நடிப்பாசை காரணமாக 20 வயதிலேயே சென்னைக்கு வந்தார். ஹார்பரில் சூப்பர் வைசர் வேலை பார்த்துக் கொண்டே பட வாய்ப்புக்களைத் தேடினார். ஹார்பரில் நடக்கும் நாடகங்களில் இவர் நடித்தார். இதே ஹார்பரில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் நடத்தினார். அதில் இவருக்கு ராமர் வேடம். மனோகர் இராவணன். இந்நாடகத்தை அந்நேரத்தில் ஏவி.எம்மில் சீப் எடிட்டராகயிருந்த பிற்கால இயக்குநர் எம்.வி.ராமன் பார்த்தார். இவரது நடிப்பு அவருக்குப் பிடித்துப்போக ஏவி.எம் தயாரித்த பிரமாண்ட வண்ணப்படமான ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவருக்காக சிபாரிசு செய்து வாய்ப்பு வழங்கினார். அப்படத்தில் ஜெமினிகணேசனின் அப்பாவாக வயதான கெட்டப்பில் நடித்தார். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். இந்தப் படம் வெளிவந்த பிறகு அடுத்த படமுடனே கிடைத்தது. ஜோசப் தளியத் எடுத்த படமான விஜயபுரி வீரன் படமே அது.இப்படம் ரசிகர்களிடையே இவரை அடையாளம் காணச் செய்தது. அடுத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய வீரத்திருமகன்’ படத்தில் ராஜா தர்பாரில் சர்வாதிகாரியாக-வில்லனாக நடிக்க வைத்தார். ஏவ்.எம்மில் நிறைய செலவு செய்து எடுத்தப்படமான இப்படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும் வீரத்திருமகன் வெளிவந்த நேரத்தில் ஒரு பத்திரிகை இப்படி விமர்சனம் செய்தது. “படத்தில் நடித்தவர்கள் பலர்.நடித்திருப்பவர் ஆந்திர வில்லன் எஸ்.வி.ராமதாஸ்”.இது இவரது நடிப்புக்குக் கிடைத்த பெரிய வெகுமதி.





இவர் நடிகர் எஸ்.ஏ.அசோகனின் உதவியுடன் எம்.ஜி.ஆருடன் அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் இவரது முதல் படம் ‘ஆசை முகம்’.அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் கன்னித்தீவின் சர்வாதியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் 3000/- ரூபாய்.  சிவாஜிகணேசனுடன் ‘கர்ணன்’ படத்தில் தேவேந்திரன் வேடம் ஏற்றார். இப்படத்தில் கர்ணனை ஏமாற்றி கவச குண்டலங்களை வாங்கும் வசனங்களைக் கேட்ட விமர்சகர் ஒருவர் “இனி இவர் ராமதாஸ் இல்லை, குரல் தாஸ்” என்று புகழ்ந்தார். இதுவும் இவரது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாகும்.


எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா, ரிக்‌ஷாக்காரன், குடியிருந்த கோயில், நம்நாடு, நாளை நமதே போன்ற எண்பது படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜிகணேசனுடன் 20 படங்களில் நடித்துள்ளார். இவர் எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும் சில மனநிறைவான படங்கள் உண்டு. அதிலொன்றுதான் டி.ராமாநாயுடு தயாரித்து பி.மாதவன் இயக்கிய “குழந்தை உள்ளம்”.கல்லுக்குள்ளும் ஈரமுண்டு என்பதுதான் கதையின் மூலக்கரு. பேபி ராணி அனாதை குழந்தையாக நடிக்க மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ் மூவரும் கொள்ளைக்காரர்களாக நடித்தனர். கொடூர குணங்கொண்ட 3 கொள்ளைக்காரர்களும் அந்த குழந்தையின் அன்புக்கு எப்படி கட்டுப்படுகிறார்கள் என்கிற அந்தக் கதையில் இவர் ரொம்பவே அனுபவித்து நடித்திருந்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.


இவர் சொந்தமாக நாடக்குழுவும் வைத்திருந்தார். இவர் நடித்த கடைசி படம் சரத்குமாருடன் மூவேந்தர். இதில் சரத்குமாரின் தந்தையாகவும் நம்பியாரின் மகனாகவும் லெட்சுமியின் கணவராகவும் நடித்திருந்தார். இப்படத்தில் எம்.என்.நம்பியாரும் பூச்சி என்ற பெயருடன் இவரும் வரும் காட்சிகளெல்லாம் திரையரங்குகளில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவை ததும்ப நடித்திருந்தார். இராணுவ வீரன் படத்தில் மில் முதலாளியாக நடித்திருந்தார்.


இவர் ”சேவல் கூவுகிறது ஞாயம் பிறக்கிறது” என்ற ஒரு சொந்த படத்தைக் கருப்பு-வெள்ளையில் தயாரித்தார். அப்படம் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த தருவாயில் கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்திற்குப் படங்கள் முற்றிலும் மாறியிருந்த காலம். அதனால் விநியோகஸ்தர்கள் எவரும் திரைப்படத்தை வாங்காததால் திரைக்கு வராமலேயே டப்பாவுக்குள் முடங்கியது. இதனால் பல இலட்சங்களை இழந்து பரிதவித்தார்.


இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டார். அக்காலத்தில் நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், பார்த்திபன் போன்றோர் சென்று பார்த்து வந்தனர். பார்த்திபன் திரைப்படத்தில் நடிக்க வரும் முன் ராமதாஸின் நாடகக்குழுவில் இருந்தார். பார்த்திபன் ரூ-10000/- கொடுத்து உதவியதோடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ராமதாசின் உடல் நிலை குறித்து கடிதமெழுதினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா அதிமுக-வின் சார்பில் ரூ-1,04,000/- உதவியளித்தார். இருந்தும் சிகிட்சை பலனின்றி 08.08.2004 அன்று தனது 83-ஆவது வயதில் காலமானார்.


இராமதாஸிற்கு சந்திரா என்ற மனைவியும் லெட்சுமணசாமி, இராதாகிருஷ்ணன், வேணுகோபால் என்ற 3 மகன்கள். மனைவி சந்திரா 2003-இல் மரணமடைந்துவிட்டார்.


நன்றி: தினத்தந்தி 10.12.2000, 9.08.2004 நாளிட்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பெற்றது.


இராணுவ வீரன் படத்தில் ராமதாஸ் தனித்தும் ரஜனிகாந்துடனும்

Sunday, 7 February 2021

SASIREKHA ,NEW ACTRESS GOT MURDERED BY VILLAIN ACTOR RAMESH SANKAR

 

SASIREKHA ,NEW ACTRESS GOT MURDERED 

BY VILLAIN ACTOR RAMESH SANKAR




நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தின் கதாநாயகியான சசிரேகாவை தலை துண்டித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 5ம் தேதி இளம்பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராயலாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 30 நாட்களுக்குப்பிறகு கொலை செய்யப்பட்ட பெண் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை சசிரேகா (39) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது கணவர் சினிமா வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் (40), கேரளாவை சேர்ந்த லக்கியா (25) இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். சசிரேகா ஏற்கனவே திருமணம் ஆனவர். 8 வயதில் ஒரு மகன் உள்ளான். அவரது கணவர் சாலமன் பிரபு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நான், சசிரேகா, அவரது மகன் மூவரும் மடிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம்.


இந்நிலையில் எனக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த லக்கியா (22) என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் சசிரேகாவுக்கு தெரியவந்ததும் என்னிடம் தகராறு செய்தார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மகனை நான் கடத்தி சென்று விட்டதாக செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறையினர் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானமாக பேசி சேர்த்து வைத்தனர். இதனையடுத்து நான் மனைவி சசிரேகா உடன் குன்றத்தூர் அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கினேன். லக்கியாவின் தொடர்பை விடமுடியாததால் மனைவி இல்லாத சமையத்தில அவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவேன். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன்.

அன்றைய தினம் இரவு லக்கியா உடன் சேர்ந்து எனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்" என்று ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடைக்குள் கிடந்த சசிரேகாவின் தலை

இந்த கொலை வழக்கில் சசிரேகாவின் தலையை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் அதனை தேடும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். தலையை வெட்டி வீசியதாக கொலையாளி ரமேஷ் சங்கர் சொன்னதன் பேரில் கெருகம்பாக்கம் ஏரியில் சென்று காவல்துறையினர் தலையை தேடினர். ஆனால் தலை கிடைக்கவில்லை. தலையை தேடும் பணியில் மோப்பநாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கொளப்பாக்கம் ராமமூர்த்தி அவென்யூவில் உள்ள ஒரு பாதாள சாக்ககடைக்குள் மனித தலை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது சசிரேகாவின் தலை என்பது தெரியவந்தது. 

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தில் சசிரேகா கதாநாயகியாக நடத்துள்ளார். அதே படத்தில் ரமேஷ் சங்கர் வில்லனாக நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த லக்கியா துணை நடிகை ஆவார். 

1.சசிரேகா 

2 ரமேஷ் சங்கர் - லக்கியா

Wednesday, 30 September 2020

MADANPURI HINDI VILLAIN BORN SEPTEMBER 30,1915 - 1985 JANUARY 13

 

MADANPURI HINDI VILLAIN BORN 

SEPTEMBER 30,1915 - 1985 JANUARY 13



.Madan Puri (1915 – 13 January 1985) was an Indian actor of Hindi and Punjabi films. His brother was Amrish Puri. As a character actor mainly in negative roles (villain), he acted in about 430 films in a career spanning fifty years


Early life

Madan Lal Puri was born in Rahon, Nawanshahr, British India to Nihal Chand Puri and Ved Kaur. He studied in Rahon. He was the second of five children, with elder brother Chaman Lal Puri, younger brothers Amrish Puri and Harish Lal Puri and younger sister Chandrakanta Mehra.[3]


Career

Puri was one of the doyens of the Indian film industry in the late 1960s and early 1970s. He was the first cousin of the singer K. L. Saigal,[1] with whose help he started to make a mark in Bollywood. Once Puri was an established star he did the same for his brother, Amrish Puri, by helping him in establishing himself in the movie world.




Puri had an acting career which spanned over 40 years from the 1940s through to the mid-1980s. He appeared in more than 430 films. His film debut was titled Ahinsa in 1946. Madan made an average of eight films per year, playing villains and negative characters and the hero's or heroine's uncle, father or elder brother, grandfather, police officer and politician. He starred in a number of Punjabi films throughout his career such as Jatti, Jatt Punjabi and so on.[citation needed]


He died in 1985 of a heart attack at the age of 69.[4] He was a resident of R P Masani Road in Matunga, Mumbai, also known as Punjabi Galli, with other actors of that era including the Kapoors. Several films were released after his death until 1989 with his final being Santosh.[citation needed]


Personal life




Puri's wife, Sheela Devi Puri (Wadhera), died a few years after him. He is survived by three sons.[citation needed] Pravesh Puri, Lt. Col. (Dr.) Kamlesh K. Puri and Ramesh Puri. His son Kamlesh has published a book about the life and times of Madan Puri titled My Father, the Villain.


Selected filmography

Khazanchi (1941)

Ahinsa (1946)

Sona (1948)

Vidya (1948) as Harilal (Harry)

Dil Ki Duniya (1949)

Jeet (1949) as Ratan

Namoona (1949) as Madanpuri

Singaar (1949)

Anmol Ratan (1950)

Adaa (1951)

Deewana (1952)

Goonj (1952)

Raag Rang (1952)

Munna (1954)

Shri Chaitanya Mahaprabhu (1954)

Bhagwat Mahima (1955)

Jhanak Jhanak Payal Baaje (1955)

Aabroo (1956)

Heer (1956)

Baarish (1957)

Ek Saal (1957)

Mirza Sahiba (1957) as Shamir

Nau Do Gyarah (1957) as Radhey

Dilli Ka Thug (1958)

Howrah Bridge (1958) as John Chang

Kabhi Andhera Kabhi Ujala (1958)

Taqdeer (1958)

Trolley Driver (1958)

Insan Jaag Utha (1959) as Mohan Singh

Kanhaiya (1959) as Mano

Nai Raahen (1959)

Chaudhary Karnail Singh (1960) as Boota Singh

Jaali Note (1960)

Kala Bazar (1960) as Ganesh

Kiklee (1960)

Singapore (1960) as Chang

Pyaar Ka Saagar (1961)

Tel Malish Boot Polish (1961)

Bees Saal Baad (1962) as Dr. Pandey

China Town (1962)

Rakhi (1962) as Mr. Choudhury Bhagwandas

Gehra Daag (1963)

Godaan (1963)

Shikari (1963)

Sunheri Nagin (1963)

Ek Raaz (1963) as Chunilal

Ayee Milan Ki Bela (1964) as Ratanlal

Cha Cha Cha (1964)

Kashmir Ki Kali (1964) as Shyamlal

Kohraa (1964)

Mr. X in Bombay (1964)

Ziddi (1964) as Moti

Gumnaam (1965) as Dr. Acharya

Mohabbat Isko Kahete Hain (1965)

Neela Aakash (1965)

Shaheed (1965) as Jailor

Waqt (1965) as Balbir

Love in Tokyo (1966) as Asha's uncle

Main Wohi Hoon (1966) as Jagdish

Phool Aur Patthar (1966) as Boss (as Madanpuri)

Sawan Ki Ghata (1966)

Thakur Jarnail Singh (1966)

Yeh Zindagi Kitni Haseen Hai (1966)

Aag (1967) as Kallu Singh

Aamne Samne (1967)

Baharon Ke Sapne (1967) as Ranjeet

Gunehgar (1967)

Hamraaz (1967) as Captain (Rajesh's friend)

Johar in Bombay (1967) as Gopal

Shagird (1967)

Upkar (1967) Charan Das as Madanpuri

Aankhen (1968) as Captain

Duniya (1968)

Hai Mera Dil (1968)

Humsaya (1968)

Juaari (1968)

Ittefaq (1969) as Public Prosecutor Khanna

Aradhana (1969) as Prison Warden

Aadmi Aur Insaan (1969) as Sabharwal

Pyar Hi Pyar (1969) as Dindayal

Oos Raat Ke Baad (1969)

Pyar Ka Mausam (1969) as Shankar Kumar

Shatranj (1969) as Comrade Chang

Talash (1969) as Peter

The Train (1970) as No.1

Aag Aur Daag (1970)

Bhai Bhai (1970)

Choron Ka Chor (1970)

Devi (1970) (as Madanpuri) as Joginder

Kati Patang (1970) as Vshnu Prasad

My Love (1970)

Prem Pujari (1970) as Chang

Purab Aur Paschim (1970) as Preeti's dad

Yaadgaar (1970) as Madan Singh

Amar Prem (1971)

Caravan (1971) as Mithalal Tota

Ek Paheli (1971) as Shankarlal

Elaan (1971) as Mr. Verma

Guddi (1971) as Lambhardara

Haathi Mere Saathi (1971) as Ratanlal

Hulchul (1971) as Mahesh Jetley

Lakhon Mein Ek (1971) as Jaggu

Nadaan (1971) as Manghu

Paras (1971) as Thakur Prithvi Singh

Rakhwala (1971)

Ramu Ustad (1971)

Woh Din Yaad Karo (1971)

Apna Desh (1972) as Satyanarayan

Apradh (1972) as German Doctor

Dastaan (1972)

Double Cross (1972) as Maganbhai

Gora Aur Kala (1972) as Raja Zohravar Singh (Anuradha's Father)

Haar Jeet (1972)

Janwar Aur Insaan (1972)

Samadhi (1972)

Sazaa (1972)

Shehzada (1972) as Chanda's maternal uncle

Shor (1972) as Factory owner (Guest Appearance)

Wafaa (1972) as Zamindar

Sanjog (1972) as Shiv Dayal (Asha's Father)

Joshila (1973)

Loafer (1973)

Dhund (1973) as Inspector Joshi

Bada Kabutar (1973) as Ghaffoor

Bandhe Haath (1973) as Shyamu's mentor

Black Mail (1973/I) as Dr. Khurana

Daag: A Poem of Love (1973) as K.C. Khanna

Dharma (1973) as Mangal Singh

Gaddar (1973)

Nafrat (1973)

Naya Nasha (1973)

Anuraag (1973) as Amirchand

Majboor (1974) as Mahipat Rai

Benaam (1974) as Gopal

Ajanabee (1974) as Mr. M.M. Puri

Jab Andhera Hota Hai (1974)

Chor Machaye Shor (1974) as Seth Jamunadas

Bidaai (1974) as Dharam Das

Manoranjan (1974) as Police Inspector

Pran Jaye Par Vachan Na Jaye (1974) as Jagmohan

Roti Kapda Aur Makaan (1974) as Nekiram

Zehreela Insaan (1974)

Dharmatma (1975)

Zameer (1975) as Daku Maan Singh

Dafaa 302 (1975) Indian Penal Code Section 302 (Section of Murder) as Inspector General of Police

Deewaar (1975) as Samant (as Madanpuri)

Geet Gaata Chal (1975) as Sohan Singh

Ponga Pandit (1975) as Shambhu Nath

Rafoo Chakkar (1975) as Prakash

Raftaar (1975) as Rita's dad

Saazish (1975)

Warrant (1975) as Prof. Ashok Verma

Fakira (1976) as Chiman Lal

Mehbooba (1976) as Sardar

Bhanwar (1976) as John D'Souza / Johny

Aaj Ka Ye Ghar (1976) as Sajjan's Father-in-law

Aap Beati (1976)

Bairaag (1976)

Daaj (1976)

Kalicharan (1976) as Jaagir Singh

Khalifa (1976)

Aaina (1977) as M.B. Patil

Chakkar Pe Chakkar (1977)

Darinda (1977)

Dulhan Wahi Jo Piya Man Bhaye (1977)

Kasum Khoon Ki (1977)

Paapi (1977) as Harnamdas (Aasha's father)

Ram Bharose (1977)

Shirdi Ke Sai Baba (1977) as Ranbir Singh

Vishwasghaat (1977) as Uday's dad

Ghar (1978) as Vikas' Father

Aahuti (1978) as Heeralal

Ankhiyon Ke Jharokhon Se (1978) as Mr. Mathur (Arun's dad)

Chor Ho To Aisa (1978) as Chinaramu "Ramu"

Heeralaal Pannalaal (1978)

Naya Daur (1978)

Swarg Narak (1978) as Lala Lalchand

Vishwanath (1978) as Pukhraj

Raadha Aur Seeta (1979)

The Great Gambler (1979) as Ratan Das

Gautam Govinda (1979) as Bagha

Aur Kaun? (1979)

Jaan-e-Bahaar (1979) as Ajit's maternal uncle

Jaani Dushman (1979) as Blind Vaidji (Reshma's dad)

Jatt Punjabi (1979)

Muqabla (1979)

Noorie (1979) as Lala Karamchand

Aap To Aise Na The (1980)

Humkadam (1980) as Hari Harprasad

Alibaba Aur 40 Chor (1980) as Fatima's dad

Abdullah (1980) as Military Commander

Bandish (1980/I)

The Burning Train (1980) as Ashok's dad

Ek Baar Kaho (1980) as Dr. Puri (Rajni's father)

Ek Gunah Aur Sahi (1980)

Judaai (1980) as Dubey/Mamaji

Patita (1980)

Swayamvara (1980) as Makhanlal

Yeh Kaisa Insaaf (1980)

Khuda Kasam (1981) as Kishanlal (Guest Appearance)

Prem Geet (1981) as Mr. Bhardwaj

Dulha Bikta Hai(1981)

Dahshat (1981) as Sameer's Father

Itni Si Baat (1981) as Darbarilal (as Madanpuri)

Mangalsutra (1981)

Kranti (1981) as Sher Singh

Nakhuda (1981) as Jagannath Gupta

Poonam (1981)

Pyaasa Sawan (1981) as Prabhudas

Sharada (1981) as Mr. Kohli (Anita's dad & Inder's boss)

Haathkadi (1982) as Harimohan's boss

Apradhi Kaun? (1982) as Rai Bahadur Din Dayal

Badle Ki Aag (1982) as Mohanlal Verma (uncredited)

Dulha Bikta Hai (1982) as Seema's dad

Ghazab (1982) as Jatha Shankar

Pyaas (1982)

Sawaal (1982) as Govindram

Vidhaata (1982) as Khushiram Khusal Singh (K.K.)

Agar Tum Na Hote (1983) as Shakur Ahmed

Sweekar Kiya Maine (1983)

Bade Dil Wala (1983) as Makhanlal

Nastik (1983) as Police Inspector Ganga Ram

Andha Kanoon (1983) as Jailor Gupta

Avtaar (1983) as Seth Jugal Kishore (Guest Appearance)

Dharti Aakash (1983) (TV) as Jagdish

Hero (1983/II) as Bharat

Humse Na Jeeta Koi (1983) as Girdhari

Main Awara Hoon (1983)

Mazdoor (1983) as Daulatram (Hiralal's Manager)

Naukar Biwi Ka (1983) as Movie Director

Painter Babu (1983) at Mali Kaka

Woh Jo Hasina (1983)

Lorie (1984) as Mr. Kapoor (Father of 12 kids)

Baazi (1984)

Asha Jyoti (1984) as Seth Badri Prasad

Mashaal (1984) as Tolaram

Aaj Ka M.L.A. Ram Avtar (1984) as Makhanlal Kesri

Awaaz (1984) as Mirchandani

Khazana (1984)

Raaj Tilak (1984) as Ranjeet

Waqt Ki Pukar (1984) as Subedhar

Yaadon Ki Zanjeer (1984)

Cheekh (1985) as Thakur

Babu (1985) as Shambhu Nath

Jhoothi (1985) as Professor Puri

Bepanaah (1985)

Yodh (1985) as Dayal

Jawaab (1985) as Lakhani

Lavaa (1985)

Maujaan Dubai Diyaan (1985)

Ulta Seedha (1985) as Colonel Khurana

Yaadon Ki Kasam (1985) as Bishambarnath Kapoor

Khel Mohabbat Ka (1986) as Rehman Khan

Madadgaar (1987)

Vishaal (1987) as Laawaris

Santosh (1989) as Kaka

References

Thursday, 17 September 2020

COMEDY VILLAIN M.R.RADHA DIED 1979 SEPTEMBER 17

 





உள்ளொன்றும் புறமொன்றும் பேசியறியாத
பிரபல காமெடி வில்லன் நடிகர் எம் .ஆர் .ராதா
1979 செப்டம்பர் 17 இல் காலமானார்


நடிகவேள் எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர். அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர். அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா. 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும் நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்.
தன் மனதில் பட்டதை, தயக்கமின்றி சொல்லி, தான் நினைத்தபடி வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. அதனால், கலகக்காரன் என்ற பெயர் எடுத்தவர். தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தை காட்டினாலும், சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வர காரணமாக இருந்தவர். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். திரைத்துறையில் அப்போது ஆட்சி செலுத்திய எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜிக்கு சமமான ஆளுமைப்பண்பை பெற்றிருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பாகவும், சுவையாகவும் தொகுத்திருக்கிறார் முகில்.

தேனாம்பேட்டை போயஸ் சாலை; நேரம் காலை, 10:00 மணியை தாண்டியிருந்தாலும், வெயில் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. அந்த வீட்டின் கதவுக்கு அருகே, நாற்காலியை கொண்டு வந்து போட்ட பணியாள் ஒருவர், அதை தன் மேல் துண்டால் ஒருமுறை துடைத்து விட்டு உள்ளே சென்றார்.
முட்டிவரை நீண்ட அண்டர்வேர், வெள்ளை நிற முழுக்கை பனியனோடு, வீட்டை விட்டு வெளியே வந்தார் எம்.ஆர்.ராதா. முதுமையின் ஆக்ரமிப்பு அவரது தேகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சிறை அவருக்கு புதிதல்ல என்றாலும், கடந்த இரு முறை அனுபவித்த நீண்ட சிறை தண்டனைகள், அவரது கம்பீரத்தை கொஞ்சம் களவாடி போயிருந்தன. மெதுவாக நடந்து வந்து, அந்த நாற்காலியில் அமர்ந்தார்.
தெருவில் வருவோர், போவோரெல்லாம் அவரை பார்த்து வணக்கம் கூறினர். பதிலுக்கு இவரும் வணக்கம் கூறினார்.
'அண்ணே... நல்லாயிருக்கீங்களாண்ணே?' - ராதாவின் அருகில் மிகவும் பவ்யத்துடன் வந்து நின்றார் ஒருவர்.
'வாய்யா... என்னய்யா இன்னிக்கு நாடகம் எதுவும் இல்லையா?'
'இல்லண்ணே...'
'சாப்பிட்டியா?'





'அது....'
'சரி சரி... உள்ள போய் சாப்பிடு...' வந்த நபரை உள்ளே அனுப்பிய ராதா, வாசல் பக்கம் திரும்புகையில், கதவருகே ஒரு பெண் வந்து நின்றார்.
'வாம்மா லலிதா... என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்...எப்படி இருக்க?'
'அண்ணா... சுகமாயிருக்கீங்களா?'
லலிதாவை, கருப்பு வெள்ளை காலத்தவருக்கு தெரிந்திருக்கும். தாம்பரம் லலிதா என்று கூறினால், 'பளிச்'சென்று புரிந்து விடும். முன்னாள் கதாநாயகி; வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட சில படங்களில் நடித்திருப்பதுடன், நாடகக் குழு ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தார். மிகவும் நலிந்து போயிருந்தார். எனவே, எம்.ஆர்.ராதாவிடம் உதவி கேட்டு வந்திருந்தார்.
'என்னம்மா நீ... நான் நல்லாயிருந்த காலத்துல எல்லாம் விட்டுட்டு, இப்ப வந்து உதவி கேட்குறியே?'
'இல்லண்ணே... நீங்க வந்து நாடகம் போட்டீங்கன்னா, அதுல வர்ற நிதியில...'
'சரி... நாடகத்தை எப்போ வச்சுக்கலாம்... கஜபதி இங்க வாய்யா...'
ராதாவின் ஒப்பனையாளரும், மேலாளருமான கஜபதி, வீட்டின் உள்ளிருந்து வேகமாக வந்தார். அடுத்த மாதம் திருக்கோவிலூரில் நாடகம் என்று முடிவு செய்யப்பட்டது; நன்றி சொல்லி கிளம்பினார் லலிதா.
அடுத்த நாள் நாடகம் -
திருக்கோவிலூருக்கு கிளம்பிக் கொண்டிருந்த லலிதா, அதற்கு முன் ராதாவை பார்த்து விடலாம் என்று தேனாம்பேட்டை வீட்டுக்குச் சென்றார்.
'அண்ணன் ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்காரு...' என்று பணியாள் சொல்ல, மாடிப்படி ஏறி, அவருடைய அறைக்குள் நுழையும் போதே ஏதோ மருந்து வாசனை.
கட்டிலில் அமர்ந்திருந்தார் ராதா. லலிதாவை பார்த்தவுடன், புன்னகையுடன் வரவேற்ற ராதாவின் முகத்தில் வலியால் உண்டாகும் வேதனையின் பிரதிபலிப்பு; லலிதாவின் முகத்தில் கலவரம்.
'என்னண்ணே ஆச்சு?' - கண்களில் நீர்முட்டிக் கொண்டு நின்றது.
'அது ஒண்ணுமில்லம்மா... ஏதோ கட்டி வந்துருச்சு; டாக்டருக்கிட்ட காண்பிச்சேன்... வைத்தியம் செய்யுறேன்னு சதையை தோண்டி எடுத்துட்டான்...' என்றார்.
ராதா தன் வலது தொடையில் இருந்த காயத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்துக் காட்டினார். தோண்டப்பட்ட சதையின் வழியாக எலும்பு தெரிந்தது. அவருக்கு சர்க்கரை வியாதி என்பதால், தையல் எதுவும் போட முடியாத நிலை.
லலிதாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
'அட... நீ ஏம்மா அழுவுற?'
'அண்ணே... இந்த நிலைமையில...'
'நாளைக்கு தானே நாடகம்; நீ போம்மா நான் வந்துடுவேன்!'
'வேண்டாம்ண்ணே... நாடகத்தை கேன்சல் செய்துடலாம்!'
'அதெல்லாம் செய்யாதே... நாளைக்கு நாடகம் நடக்கும்...' என, உறுதியான குரலில் கூறினார் ராதா. அவர் சொல்லி விட்டால், அதை எதிர்த்து பேச யாராலும் முடியாது.
லலிதா கண்களை துடைத்தபடி அங்கிருந்து கிளம்பினார்.
'நடிகவேள் எம்.ஆர். ராதா நடிக்கும், ரத்தக்கண்ணீர் இன்று மாலை, 7:00 மணியளவில்' என திருக்கோவிலூர் எங்கும் போஸ்டர்கள். நாடகத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை தாங்குவதால், கூடுதல் பரபரப்பு. ராதாவின் நாடகம் என்பதால், திருவிழாவையும் மிஞ்சும் கூட்டம். மணி மாலை, 6:30 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நாடக மேடை தயாராக இருந்தது.
சின்ன உறுமலுடன் வந்து நின்றது ராதாவின் கார். அதிலிருந்து மெதுவாக இறங்கிய ராதாவை, ஓடிச்சென்று வரவேற்றார் லலிதா. அவ்வளவு நேரம் தேங்கியிருந்த பயம், லலிதாவின் கண்களிலிருந்து விலகியது. ஒருவரது தோளைப் பிடித்தபடி, மேக்-அப் அறையை நோக்கி, கொஞ்சம் சிரமப்பட்டு நடந்தார் ராதா. ரத்த கண்ணீர் நாடகத்துக்காக வேடம் போட ஆரம்பித்து, அப்போது, 25 ஆண்டுகள் நிறைவாகி இருந்தன. டாம்பீக கோட், சூட் நவநாகரிக தோற்றத்தில், மோகன் என்ற கதாபாத்திரமாக மாறியிருந்தார் ராதா.
'மணி, 7:00 ஆகப் போகுது; ஆரம்பிக்கலாமா?' எனக் கேட்டார் ராதா.
அண்டர்வேர் அணிந்திருந்தால், காயத்தின் மேல் படாமல் வசதியாக இருக்கும். ஆனால், அரிதாரம் பூசியாயிற்று. இனி, வேறெதையும் நினைக்கக் கூடாது என நினைத்து, மேடையை நோக்கி கிளம்பினார்.
கடந்த ஆண்டுகளில் எத்தனை மேடை ஏறியிருப்பார். நாடக மேடைகள் அவரது சுவாசம். 'நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, என் உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்...' என்று எத்தனையோ முறை கூறியிருக்கிறார்
எம்.ஆர்.ராதா. ஆனால், இன்று? மேடையேறுவதற்கு முன் உயிர் போய் விடும் போலிருந்தது. பாழாய்ப்போன காயம், படியில் காலெடுத்து வைக்க முடியவில்லை. அருகில் நின்ற இருவரை அழைத்தார். அவர்கள் தோள் கொடுத்தனர். சிரமப்பட்டு மேடை மேல் ஏறி நின்றார். திரை விலக்கப்பட்டது.
மக்களின் ஆரவாரம். மேடை மேல் கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீமான் மோகன், தொழிலாளர்கள் மத்தியில், கர்வத்துடன் பேசும் காட்சி ஆரம்பமானது...
'லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்...'
அதே குரல், அதே வேகம், அதே துணிச்சல். அவ்வளவு நேரம் முகத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த வலியின் பிரதிபலிப்பை காணவில்லை. ராதா அங்கில்லை; அவருக்குள் மோகன் இறங்கியிருந்தான். மக்களின் வழக்கமான கை தட்டலும், விசில்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு காட்சியாக முடிந்தது. காட்சிகளுக்கிடைப்பட்ட நேரத்தில் ராதா, வேகவேகமாக காயத்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை மாற்றிக் கொண்டார். ரத்தக் கசிவு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. நாடகம் ஆரம்பித்தபின் அதையெல்லாம் யோசிக்க தோன்றுமா என்ன?
மோகன், குஷ்டரோகி ஆகிக் கொண்டிருந்தான்...
அடுத்த காட்சியாக, கதாநாயகி காந்தா, போலீசார் மூலம் குஷ்டரோகி மோகனை வீட்டை விட்டு அடித்துக் துரத்தும் காட்சி. அக்காட்சியில் கொஞ்சம் அதிகமாக விழுந்து புரண்டு நடிக்க வேண்டியிருக்கும். காட்சிப்படி மரம் ஒன்று சாய்ந்து விழும்.
'அண்ணே... அந்த மரம் விழுறதெல்லாம் வேண்டாம்ண்ணே... தவறுதலா உங்க மேல விழுந்துட்டா கஷ்டம்...' என, கெஞ்சலாக கேட்டார் லலிதா.
'என்னை நம்பி காசு கொடுத்து நாடகம் பார்க்க வந்திருக்கிற மக்களை நான் ஏமாத்த மாட்டேன்; 'முன்னாடியெல்லாம் என்னமா நடிப்பாரு தெரியுமா... இப்போ வயசாயிருச்சு; அதான் அவரால முடியல'ன்னு சொல்லிடுவான்; அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ போ...' என்றார் ராதா.
ராதாவின் குரலில் கண்டிப்பு இருந்தது.



"கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார்.
தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது.
எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது"
- எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள்
ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு
101வது பிறந்த நாள் விழா.
எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை...
12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச் சுட்டார்கள் என்பதில் பிரச்னை. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா தவிர வாசு என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். இவர்கள் மூவரையும் தவிர சுட்டதை நேரில் பார்த்தவர் வேறு எவரும் இல்லை. அரசுத் தரப்பு வாதம் - லைசென்ஸ் காலாவதியான துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டார், பின் தன்னையும் சுட்டுக்கொண்டார் என்பது. எம்.ஜி.ஆர், வாசு இருவரும் இதைத்தான் சொன்னார்கள். எம்.ஆர்.ராதா தரப்பு வாதம் - எம்.ஜி.ஆர் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார், தொடர்ந்து நடந்த கைகலப்பில் எம்.ஆர்.ராதா அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது.
முதலில் சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்த வழக்கு, பின் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் சென்றது. அங்கு எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
-*-
தீர்ப்புக்குப் பின்...
ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.
திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.
இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.
விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.
அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.
வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.
சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.
'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.
தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.
அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.
ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.
ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.

Image may contain: 1 person, smiling, closeup
Image may contain: 1 person
Image may contain: 2 people
Image may contain: 2 people

Monday, 27 July 2020

AMJAD KHAN ,HINDI VILLAIN ACTOR BORN 1940 NOVEMBER 12 - 1992 JULY 27


AMJAD KHAN ,HINDI VILLAIN ACTOR BORN 
1940 NOVEMBER 12 - 1992 JULY 27




அம்ஜத் கான் (12 நவம்பர் 1940 - 27 ஜூலை 1992) ஒரு இந்திய நடிகர் மற்றும் இயக்குனர். [1] ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நீடித்த ஒரு வாழ்க்கையில் 130 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். இந்தி படங்களில் வில்லத்தனமான பாத்திரங்களுக்கு அவர் புகழ் பெற்றார், 1975 கிளாசிக் ஷோலேயில் [2] சின்னமான கபார் சிங் மற்றும் முகாதர் கா சிக்கந்தரில் (1978) திலாவர் ஆகியோர் பிரபலமானவர்கள்.
ஆரம்ப கால வாழ்க்கை
அம்ஜத் கான் பிரிட்டிஷ் இந்தியாவின் பெஷாவரில் புகழ்பெற்ற நடிகர் ஜெயந்திற்கு ஒரு பஷ்டூன் குடும்பத்தில் பிறந்தார். [3] அவரது சகோதரர்கள் நடிகர்கள் இம்தியாஸ் கான் மற்றும் இனாயத் கான். கான் பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். அவர் ஆர் டி தேசிய கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார், மிக உயர்ந்த மாணவர் அமைப்பின் பிரதிநிதி.
அம்ஜத் கான் படங்களுக்கு வருவதற்கு முன்பு, அவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். அவரது முதல் பாத்திரம் நஸ்னீன் (1951) படத்தில் இருந்தது. அவரது அடுத்த பாத்திரம் 17 வயதில் ஆப் தில்லி துர் நஹின் (1957) படத்தில் இருந்தது. [4] அவர் ஒரு சில படங்களில் தந்தை ஜெயந்த் உடன் சிறிய வேடங்களில் தோன்றினார். அவர் 1960 களின் பிற்பகுதியில் கே. ஆசிஃப் இன் லவ் அண்ட் காட் நிறுவனத்திற்கு உதவினார் மற்றும் படத்தில் சுருக்கமாக தோன்றினார். 1971 ஆம் ஆண்டில் ஆசிப் இறந்த பிறகு இந்த படம் முழுமையடையாமல் இருந்தது, அது இறுதியாக 1986 இல் வெளியிடப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் கி கசத்தில் வயது வந்தவராக அறிமுகமானார்.



1975 ஆம் ஆண்டில், ஷோலே படத்திற்காக டகோயிட் கப்பர் சிங் என்ற பாத்திரத்தை வழங்கினார், அதன் எழுத்தாளர்களில் ஒருவரான சலீம் கான். இந்த பாத்திரத்திற்கான தயாரிப்பில், தாரூன் குமார் பதுரி (நடிகை ஜெயா பதுரியின் தந்தை) எழுதிய சம்பல் கொள்ளையர்கள் பற்றிய புத்தகமான அபிஷாப்த் சம்பலைப் படித்தார் அம்ஜத். அம்ஜத் படத்துடன் அசல் கொள்ளையர் போலவே நடித்தார் . கபார் சிங்கின் அவரது சித்தரிப்பு இந்திய சினிமாவில் தூய தீமையின் முதல் சித்தரிப்பு என்று பலரால் கருதப்படுகிறது. அவரது நடத்தைகளும் உரையாடல்களும் பாலிவுட் அகராதியின் ஒரு அங்கமாகிவிட்டன, மேலும் ஏராளமான கேலிக்கூத்துகள் மற்றும் ஏமாற்றுத்தனங்களை உருவாக்கியுள்ளன [சிறப்பாக 'சோஜா நஹி முதல் கபார் அஜயேகா வரை]. ஷோலே ஒரு பிளாக்பஸ்டராக ..
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு அந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட தர்மேந்திரா, அமிதாப் பச்சன் மற்றும் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களின் ஒரு குழுவை இது பெருமையாகக் கூறினாலும், அம்ஜத் தனது வழக்கத்திற்கு மாறான மற்றும் வினோதமான உரையாடல் விநியோகத்தால் நிகழ்ச்சியைத் திருடினார். அவரது உரையாடல்களையும் பழக்கவழக்கங்களையும் இன்றுவரை மக்கள் அன்பாக நினைவில் கொள்கிறார்கள். பின்னர் அவர் கபார் சிங் பிரிட்டானியா குளுக்கோஸ் பிஸ்கட் (கபார் கி அஸ்லி பசந்த் என்று பிரபலமாக அறியப்படுகிறார்) ஒப்புதல் அளித்ததாக விளம்பரங்களில் தோன்றினார், இது ஒரு பிரபலமான தயாரிப்பை விற்க ஒரு வில்லன் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு.



[5] ஷோலேயின் வெற்றிக்குப் பிறகு, கான் 1970 கள், 1980 கள் மற்றும் 1990 களின் முற்பகுதியில் பல இந்தி படங்களில் தொடர்ந்து எதிர்மறை வேடங்களில் நடித்தார் - புகழ் மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், முந்தைய இந்திய நடிகர் அஜித். அவர் பெரும்பாலும் ஹீரோவாக அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக வில்லனாக நடித்தார். இன்காரில் அவரது பாத்திரமும் திகிலூட்டும் வகையில் வழங்கப்பட்டது. டெஸ் பர்தேஸ், நாஸ்டிக், சாட்டே பெ சத்தா, சம்பல் கி கசம், கங்கா கி ச ug காந்த், ஹம் கிசிஸ் கும் நஹின் மற்றும் நசீப் ஆகியவற்றில் அவர் தனது நடிப்பில் அசத்தினார்
பல வழக்கத்திற்கு மாறான வேடங்களில் நடித்ததற்காக கான் பாராட்டப்பட்டார். முன்ஷி பிரேம்சந்த் எழுதிய சத்ராஜ் கே கிலாடி (1977) (அதே தலைப்பின் நாவலை அடிப்படையாகக் கொண்டு), சத்யஜித் ரே இயக்கிய கான், உதவியற்ற மற்றும் ஏமாற்றப்பட்ட மன்னர் வாஜித் அலி ஷா நடித்தார், அவரின் இராச்சியம் அவத் குறிவைக்கப்படுகிறது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால். அவர் ஒரு பாடலை டப்பிங் செய்த ஒரே படம் இது.



1979 ஆம் ஆண்டில் அவர் அக்பர் சக்கரவர்த்தியாக [[மீராமீரா (1979 திரைப்படம்)] படத்தில் நடித்தார், குல்சரின் ஹீரா, மாலினி மற்றும் வினோத் கன்னா நடித்த மீராபாயின் காவிய சித்தரிப்பு. யரனா (1981) மற்றும் லாவாரிஸ் (1981) போன்ற படங்களில் முறையே அமிதாப்பின் நண்பராகவும் தந்தையாகவும் பல நேர்மறையான வேடங்களில் நடித்தார். உட்சவ் (1984) என்ற கலைப் படத்தில், காம சூத்திரத்தின் ஆசிரியரான வத்சயனாவை சித்தரித்தார். 1988 ஆம் ஆண்டில், அவர் வணிகர்-ஐவரி ஆங்கில திரைப்படமான தி பெர்பெக்ட் மர்டர் ஒரு பாதாள உலக டானாக தோன்றினார். குர்பானி (1980), லவ் ஸ்டோரி மற்றும் சாமேலி கி ஷாடி (1986) போன்ற படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் சிறந்து விளங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராம்கர் கே ஷோலேயில் கபார் சிங் என்ற தனது பாத்திரத்தை அவர் மறுபரிசீலனை செய்தார், இது தேவ் ஆனந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் தோற்றத்தை உள்ளடக்கிய புகழ்பெற்ற திரைப்படத்தின் கேலிக்கூத்து.
அவர் 1980 களில் ஒரு குறுகிய காலத்திற்கு இயக்கத்தில் இறங்கினார், சோர் பொலிஸ் (1983) இல் இயக்கி நடித்தார், இது சிறப்பாக செயல்படவில்லை, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டராக இருந்த அமீர் ஆத்மி கரீப் ஆத்மி (1985). நடிகர்கள் கில்ட் சங்கத்தின் தலைவராக அம்ஜத் இருந்தார். திரைத்துறையில் அவர் மதிக்கப்பட்டார். நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் / தயாரிப்பாளர்களிடையே மோதல்களை அவர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவார். டிம்பிள் கபாடியா ஒரு தாய் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர் பின்வாங்கியபோது இதுபோன்ற ஒரு தகராறு ஏற்பட்டது. முழு திரைப்பட தயாரிப்பாளர்களின் சமூகமும் அவரை புறக்கணிக்க முயன்றது. ஆக்டர்ஸ் கில்ட் சார்பாக கான் தலையிட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை

1972 ஆம் ஆண்டில், அவர் ஷெஹ்லா கானை மணந்தார், அடுத்த ஆண்டில், அவர் ஒரு சில படங்களில் நடித்த முதல் குழந்தையான ஷாதாப் கானைப் பெற்றெடுத்தார். அவருக்கு அஹ்லாம் கான் என்ற மகள், மற்றொரு மகன் சீமாப் கான் ஆகியோரும் இருந்தனர். அஹ்லம் பிரபல நாடக நடிகர் ஜாபர் கராச்சிவாலாவை 2011 இல் திருமணம் செய்து கொண்டார். [6]

இறப்பு
1976 ஆம் ஆண்டில், [7] [8] மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அம்ஜத் கானுக்கு கடுமையான விபத்து ஏற்பட்டது, இதனால் அவருக்கு உடைந்த விலா எலும்புகள் மற்றும் நுரையீரல் துண்டிக்கப்பட்டது. அமிதாப் பச்சன் நடித்த தி கிரேட் கேம்ப்லர் படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கப் போகிறார். [9] பலத்த காயங்கள் காரணமாக அவரும் கோமா நிலைக்குச் சென்றார், ஆனால் அவர் விரைவில் குணமடைந்தார். அவரது அறுவை சிகிச்சையின் போது நிர்வகிக்கப்பட்ட மருந்து அவருக்கு அதிக எடை அதிகரிக்க காரணமாக அமைந்தது, இது மேலும் உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுத்தது. அவரது எடை அதிகரித்ததன் விளைவாக, அவர் தனது 51 வயதில் இதய செயலிழப்பு காரணமாக 1992 இல் இறந்தார். அவர் முடித்த பல படங்கள் அவரது மரணத்திற்குப் பிறகு, 1996 வரை வெளியிடப்பட்டன.



.Amjad Khan (12 November 1940 – 27 July 1992) was an Indian actor and director.[1] He worked in over 130 films in a career spanning nearly twenty years. He enjoyed popularity for villainous roles in Hindi films, the most famous being the iconic Gabbar Singh in the 1975 classic Sholay[2] and of Dilawar in Muqaddar Ka Sikandar (1978).
Early life
Amjad Khan was born in Peshawar, British India to legendary actor Jayant in a Pashtun family.[3]His brothers are actors Imtiaz Khan and Inayat Khan. Khan was educated at St. Andrew's High School, in Bandra.He attended R D National College, where he held the position of general secretary, the highest elected student body representative.
Before Amjad Khan came to films, he was a theatre actor. His first role was in the film Nazneen (1951). His next role was at the age of 17 in the film Ab Dilli Dur Nahin (1957).[4] He made appearances in minor roles with father Jayant in a few films. He assisted K. Asif in Love And God in the late 1960s and had a brief appearance in the film. The film was left incomplete after Asif's death in 1971, and it was finally released in 1986. In 1973 he made his debut as an adult in Hindustan Ki Kasam.

 .

In 1975, he was offered the role of dacoit Gabbar Singh for the film Sholay by Salim Khan, who was one of its writers. In preparation for the role, Amjad read Abhishapth Chambal, a book on Chambal dacoits written by Taroon Kumar Bhaduri (actress Jaya Bhaduri's father). Amjad shot to stardom with the movie. His portrayal of Gabbar Singh is considered by many to be the first depiction of pure evil in Indian Cinema. His mannerisms and dialogues have become an integral part of the Bollywood lexicon and spawned numerous parodies and spoofs [Specially "Soja Nahi to Gabbar Ajayega"]. Sholay went on to become a blockbuster. Although it boasted an ensemble cast of superstars including Dharmendra, Amitabh Bachchan and Sanjeev Kumar, who was nominated that year for the Filmfare award for Best Actor category, Amjad stole the show with his unorthodox and eerie dialogue delivery. Even to this day people fondly remember his dialogues and mannerisms. He later appeared in advertisements as Gabbar Singh endorsing Britannia Glucose Biscuits (popularly known as Gabbar Ki Asli Pasand), the first incidence of a villain being used to sell a popular product.[5] After the success of Sholay, Khan continued to play negative roles in many subsequent Hindi films in the 1970s, 1980s and early 1990s – superseding, in terms of popularity and demand, the earlier Indian actor, Ajit. He often acted as villain opposite Amitabh Bachchan as the hero. His role in Inkaar was also presented in terrifying manner. He made his presence felt in Des Pardes, Nastik, Satte Pe Satta, Chambal Ki Kasam, Ganga Ki Saugandh, Hum Kisise Kum Nahin and Naseeb.
.
Khan was also acclaimed for playing many unconventional roles. In the critically acclaimed film Shatranj Ke Khiladi (1977) (based on the novel of the same title), by Munshi Premchand and directed by Satyajit Ray, Khan played the helpless and deluded monarch Wajid Ali Shah, whose kingdom, Avadh, is being targeted by British colonialists from the British East India Company. It is the only movie in which he dubbed a song. In 1979 he portrayed Emperor Akbar in the film [[MeeraMeera (1979 film)]], Gulzar's epic portrayal of Meerabai starring Hema Malini and Vinod Khanna. He played many positive roles in films such as Yaarana (1981) and Laawaris (1981) as Amitabh's friend and father respectively. In the art film Utsav (1984), he portrayed Vatsayana, the author of the Kama Sutra. In 1988, he appeared in the Merchant-Ivory English film The Perfect Murder as an underworld don. He excelled at playing comical characters in films such as Qurbani (1980), Love Story and Chameli Ki Shaadi (1986). In 1991, he reprised his role as Gabbar Singh in Ramgarh Ke Sholay, a parody of the legendary film which included look-alikes of Dev Anand and Amitabh Bachchan.
.
He ventured into directing for a brief period in the 1980s, directing and starring in Chor Police (1983), which did not do well, and Ameer Aadmi Gareeb Aadmi (1985) which was a blockbuster at the box office. Amjad was the president of the Actors Guild Association. He was respected in the film industry. He would intervene and negotiate disputes between actors and directors/producers. One such dispute occurred when Dimple Kapadia agreed to play a mother role and later backed out. The entire film producers' community tried to boycott her. Khan intervened on behalf of the Actors Guild.

Personal life
In 1972, he married Shehla Khan and in the fo
llowing year, she gave birth to their first child, Shadaab Khan, who acted in a few films. He also had a daughter, Ahlam Khan, and another son, Seemaab Khan. Ahlam married popular theatre actor Zafar Karachiwala in 2011.[6]

.
Death
In 1976,[7][8] Amjad Khan had a severe accident on the Mumbai-Goa highway which left him with broken ribs and a punctured lung. He was going to participate in the shooting of the film The Great Gambler, starring Amitabh Bachchan.[9] Due to the serious injuries he also almost slipped into a coma, but he recovered soon. The drug administered during his operation caused him to gain a lot of weight, which led to further health complications. As a result of his increasing weight, he died in 1992 due to heart failure at the age of 51. Several of the films he had completed were released after his death, until 1996.

.