Posts

Showing posts with the label PANAMA CANAL

WORLD WONDERS IN ARCHITECT - PANAMA CANAL IN SPAIN -PERU ROUTE

Image
  WORLD WONDERS IN ARCHITECT - PANAMA CANAL IN SPAIN -PERU ROUTE உலகப் பொறியியல் சாதனை ஒப்பற்ற பனாமா கடல் இணைப்புக் கால்வாய் மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்; மலைமேல் கட்டிய அணை நீர்க் கணவாய்; வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையே​ ​புனை​த்தொட்டி நிரம்பி ஏறி இறங்கும் கப்பல்.  மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய் கப்பல்கள் போய்வரும் ​ஒப்பிலா நீர் மார்க்கம்.  முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்கா விலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்கா வின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூ யார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்...