ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27
ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27 ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார். இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்த...