Posts

Showing posts with the label PANJAALI

PATHER PANJAALI - SATYAJIT ROY FIRST MOVIE

Image
PATHER PANJAALI - SATYAJIT ROY FIRST MOVIE சத்தியஜித் ரே உருவாக்கிய முதல் படம் இது  உலகத்தின் கவனத்தை இந்தியாவை நோக்கி திரும்ப வைத்த படம்  " பதேர் பாஞ்சாலி " இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு படத்தை காண்பது போலவே ஒவ்வொரு சிறு அசைவிற்கும் மனது கூடவே அசைந்தது. எனது இருபத்திரெண்டாவது வயதில் பதேர் பாஞ்சாலி படத்தை முதன்முறையாக பெங்களுரில் உள்ள ஒரு திரைப்பட இயக்கம் நடத்திய திரைவிழாவில் பார்த்தேன். கல்லுரி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்த என்னை தற்செயலாக அந்த திரைப்பட விழாவிற்கு கூட்டிச் சென்றார் எனது மாமா. முதலிரண்டு நாட்கள் ஹங்கேரி படங்கள் திரையிட்டார்...