MAADI VEETTU ELAI - DROPPED MOVIE
MAADI VEETTU ELAI - DROPPED MOVIE அது, 1961ம் ஆண்டு - நண்பரும், வினியோகஸ்தருமான, ஜூப்ளி பிலிம்ஸ், வி.கோவிந்தராஜுலுவுடன் அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார், சந்திரபாபு. அவரை, சுருக்கமாக, வி.ஜி., என்று அழைப்பார், சந்திரபாபு. 'நான் ஒரு படம் தயாரிக்கப் போறேன்; அதை, நீங்க தான் செய்து தரணும்...' என்றார், வி.ஜி., 'பண்ணலாமே...' என்றார் சந்திரபாபு. 'நீங்களே ஒரு கதை சொல்லுங்க; ஒரு நகைச்சுவை படத்தை தயாரிப்போம்...' என்றார், வி.ஜி., அதற்கு சந்திரபாபு சம்மதிக்க, சில நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பரிசு படத் தயாரிப்பாளர், கே.டி.சுப்பையா அங்கு வந்தார். படம் எடுப்பது பற்றி பேசுகின்றனர் என்று தெரிந்ததும், 'உங்கள் படத்துக்கு நானே பணம் போடுறேன்; குறுகிய காலத்தில் எடுத்து முடிப்போம்; சம்மதமா?' எனக் கேட்டார். 'சம்மதம்...' என்றனர் இருவரும்! 'ஆனால், ஒரு நிபந்தனை...' என்றார் சுப்பையா. 'என்ன?' என்று கேட்டார், சந்திரபாபு. 'இப்போது, எம்.ஜி.ஆருக்குதான் நல்ல மார்க்கெட். அதனா...