RANJITH SINGH OF SIKH EMPIRE 1780 NOVEMBER 13 -1839 JUNE 27
RANJITH SINGH OF SIKH EMPIRE 1780 NOVEMBER 13 -1839 JUNE 27 ரஞ்சித் சிங் (Ranjit Singh; பஞ்சாபி: ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ) என்பவர் 1780 முதல் 1839 வரையிலான காலத்தில் [1] சீக்கிய பேரரசின் மன்னாராக ஆட்சிசெய்து புகழ் பெற்றவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் வட மேற்குப் பகுதியை இவர் ஆட்சி செய்தார். அவர் சிசுப்பருவத்தில் இருந்தபோதே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு தப்பிப்பிழைத்தார், ஆனால் அவரது இடது கண்ணின் பார்வையை இழந்தார். தனது 10 வயதில் இவர் தனது தந்தையாருடன் சேர்ந்து முதலாவது போரில் சண்டையிட்டார். இவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 21 வயதிலேயே பஞ்சாப் சிங்கம் எனவும் பஞ்சாபின் மகாராசா என்றும் இவர் அழைக்கப்பட்டார் [2]. அவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக அவர் தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார்.1839 ஆம் ஆண்டில் இவருடைய தலைமையின் கீழ் பஞ்சாப் பகுதியில் இவருடைய பேரரசு வளர்ச்சியடைந்தது [3]. ரஞ்சித் சிங்கின் எழுச்சிக்கு முன்னர் பஞ்சாபில் ஏராளமான போர்க்குணமிக்க குழுக்...