SODIUM CHLORIDE ALIAS SALT
SODIUM CHLORIDE ALIAS SALT சோடியம் குளோரைடு எனும் உப்பு உணவின் ருசிக்கு அடிப்படையானவற்றில் உப்பும் ஒன்று. சோடியம் குளோரைடு எனும் ரசாயனப் பெயருடன் நம் வீட்டுச் சமையல் அறையில் நிரந்தர இடம்பிடித்திருக்கும் உப்பு நல்லதா.. கெட்டதா எனும் விவாதம் தொடர்ந்து நடந்துவருகிறது. உப்பு என்றாலே அது நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் மட்டும் பயன்படுத்தப் படுகிறது என்றே புரிந்துகொள்கிறோம். முறுக்கு, தட்டை, ‘சிப்ஸ்’ போன்ற நொறுக்குத் தீனிகள் தொடங்கி சோடா, மென்பானங்கள், பிஸ்கட் - ரொட்டி வரை பல தின்பண்டங்களிலும் உப்பைச் சேர்க்கிறார்கள். உப்பு அதிகமுள்ள உணவு செரிக்காது, மலத்தைக் கட்டிவிடும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பண்டங்களால் தாகம் அதிகரிக்கும். அதனால் தண்ணீரை அதிகம் குடிப்போம். அந்த நீர் ஆவி யாகிவிடாமல் உப்பு காக்கும். அதனால், இதயத்துக் குச் செல்லும் ரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து இதயத்தின் பணிச் சுமையை அதிகரிக்கும். ரத்தத் தில் அதிகமாகிவிட்ட உப்பைப் பிரிக்கும் வேலை யைச் சிறுநீரகம் மேற்கொள்ளும். தொடர்ந்து உப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டால் அதில் சிறிதளவு சிறுநீரகக் கல்லாகும். ...