APPACHE -RED INDIANS -AMERICAN FIRST TRIBES
APPACHE -RED INDIANS -AMERICAN FIRST TRIBES அப்பாச்சி (ஒலிப்பு: /əˈpætʃiː/) என்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு அரிசோனா,வடமேற்கு மெக்சிக்கோ,நியூ மெக்சிகோ,டெக்சாஸ் மற்றும் தெற்கு பெரும் புல்வெளி பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். தொலைந்து போன பழங்குடியினர்... கண்டறிய உதவிய வான்கோழிகள்... இது அமெரிக்க ஆச்சர்யம்! கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில், இடம்பெயர்ந்த சோழர்களை, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடிக்கும். அப்படிக் காணாமல் போன ஒரு பழங்குடி...