BENITO MUSSOLINI DICTATOR OF ITALY BORN 1883 JULY 29 -MURDERED 1945,APRIL 28
BENITO MUSSOLINI DICTATOR OF ITALY BORN 1883 JULY 29 -MURDERED 1945,APRIL 28 .பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இளமைக்காலம் தோற்...