MANO , SINGER BORN 1965 OCTOBER 26
MANO , SINGER BORN 1965 OCTOBER 26 மனோ (தெலுங்கு: మనో) (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றார் இளமை வாழ்வும் திரைவாழ்வும் மனோ மனோ தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.[1] துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்[1]. 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்ப...