ECONOMICAL -POLITICAL DISTRESS
ECONOMICAL -POLITICAL DISTRESS சில நாடுகள் தங்களை ஒரு வியாபார நிறுவனமாகவே காட்டிக் கொள்ளும். சிங்கப்பூர், கொரியா, ஜப்பான் போன்றவை இப்படித்தான். உலகின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி இந்த நாடுகளுக்குக் கணிசமாக உண்டு. இந்தப் போட்டியில் சீனா தாமதமாகத்தான் சேர்ந்தது. செள வம்சம் முடிவுக்கு வந்த பிறகு ஹுவாங் தீ என்பவர் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். இவர் காலத்தில்தான் சீனாவில் வடக்கு எல்லை முழுவதும் ஒரு நீண்ட சுவர் எழுப்பப்பட்டது. இதுதான் உலக அதிசயமாகக் கருதப்படுகிற சீனப் பெருஞ்சுவர். 2560 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இதனை கட்டிமுடிக்க சிறைபட்ட கைதிகளும் அரசனுக்கு பிடிக்காதவர்களும் வற்புறுத்தப்பட்டனர். இது நடைபெற்றது சுமார் கி.மு.201-ம் வருடம். ஆனால் தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்டிருந்த பொருளாதாரச் சுவரை வெற்றிகரமாக இடித்துத் தள்ளி பிற நாடுகளுக்குக் கடும் போட்டியை அளிக்கிறது சீனா. உலக நாடுகளின் ஏற்றுமதியில் ஜெர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் அடுத்த இடம் சீனாவுக்குதான். எப்படி இந்த சாதனையை சீனாவால் செய்ய முடிந்தது என்பதைப் பார்ப்பதற்குமுன் பொருளாதாரக் கோணத்தில் சீன...