DIL EK MANDHIR 1963
DIL EK MANDHIR 1963 உடனே புறப்படு கோபு! பம்பாயிலிருந்து அழைப்பு வந்திருக்கு. ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனாகுமாரி, மெஹ்மூத் எல்லோருக்கும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கதையைச் சொல்லி அவங்களை ஒப்பந்தம் செய்யப் போறோம்” என்று ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போய் நின்றார் கோபு. ‘பைஜூ பாவ்ரா’, ‘சாஹிப்’, ‘பீபி அவுர் குலாம்’ போன்ற படங்களைப் பார்த்து மீனாகுமாரியின் அபிமானியாக இருந்த கோபுவுக்கு, தான் அவர் எதிரே அமர்ந்து கதை சொல்லப் போகிறோம் என்றால் மலைப்பு ஏற்படாமல் இருக்குமா? முட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இந்தி மறு ஆக்கத்துக்கு ‘தில் ஏக் மந்திர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டது. தமிழைப் போலவே இந்தியிலும் இருபத்தி ஐந்தே நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது. இதன் இசையமைப்பாளர்கள், ஷங்கர் - ஜெய்கிஷன். ராஜ்கபூரின் ‘ஆவாரா’ படத்துக்குப் பிறகு இந்த இரட்டை இசையமைப்பாளர்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர். ‘தில் ஏக் மந்திர்’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இசையமைப்பாளர் இருவருக்கும் இடையே விரிசல் உருவானது. விஸ்வநாதன் - ராமாமூர்த்தியைப் போல் பிரிந்துவிட முடிவுசெய்து...