HOW INDIAN PILOTS ESCAPED FROM PAKISTAN JAIL
HOW INDIAN PILOTS ESCAPED FROM PAKISTAN JAIL பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை 'ரெட் ஒன், யூ ஆர் ஆன் ஃபயர்...'… குழுவின் தலைவர் தீரேந்திர ஜாஃபாவின் ஹெட்போனில் சக விமானி ஃபர்டியின் குரல் கேட்டது. மற்றொரு விமானி மோகனின் குரலும் ஒலித்தது, ' பெல் அவுட் ரெட் ஒன், பெல் அவுட்.' மூன்றாவது விமானி ஜக்கூ சக்லானியின் குரலிலும் பரபரப்பு காணப்பட்டது, 'சார்... யூ ஆர்.... ஆன் ஃபயர்... கெட் அவுட்... ஃபார் காட் சேக்... பெல் அவுட்...' ஜாஃபாவின் சுகோய் விமானத்தில் ஏற்பட்ட தீ காக்பிட் வரை பரவியது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. விமானியின் இருக்கையில் இருந்து வெளியேறும் பொத்தானை ஜாஃபா அழுத்தியதும், அவர் வெளியே தள்ளப்பட்டு, அவருடைய பாராசூட் விரிந்து அவரை தரைக்குக்கொண்டு சென்றது. தரையில் இறங்கியதும், அல்லாஹு அக்பர், நார்-இ-தக்பீர் என்று முழங்கியவாறே ஓடி வந்த கிராம மக்களின் கூட்டம் அவரை சூழ்ந்தது என்று ஜாஃபா கூறுகிறார். அவரது ஆடைகளை பிடித்து இழுத்து கிழித்தவர்கள், கையிலிருந்த கடிகாரத்தையும் அவரிடம் இருந்த சிகரெட் லைட்டரையும் பி...