Posts

Showing posts with the label DETERMINES

URINE ,DETERMINES YOUR DISEASES

Image
URINE ,DETERMINES YOUR DISEASES சிறுநீர் பரிசோதனை சிறிய விஷயம் அல்ல! எச்சரிக்கை பதிவு. “சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள் தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன். சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...மூன்று அடையாளங்கள். மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனைகளை விட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை. குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்து விட முடியும். சோதனை முடிவுகளையும் உடனே சொல்லி விடுவார்கள். வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லி விடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.  ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின...