Posts

Showing posts with the label kanakku

gangai konda cholapuram ,kanakku vinayagar

Image
#கணக்கு_விநாயகர் கங்கைகொண்ட சோழபுரம். கணக்கு சொன்ன பிள்ளையார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார். ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் துவக்கினான். அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்குமுன் இந்த கனக விநாயகர் கோவிலை அமைத்து, கோவிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரிடம் ஒப்படைத்தான். திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கியபின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். (இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சிதருவார்.) இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன. ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழ...