Posts

Showing posts with the label TAMIL SONGS

RAGAS IN TAMIL SONGS

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர் 11/01/2013 இனியொரு... 6 COMMENTS உள்ளியல்பில் மிக இனிமையைக் கொண்டதும் வட இந்திய நாட்டுப்புற இசையின் வடிவங்களிலிருந்து கிளைத்து வளர்ந்த ராகங்களில் ஒன்று தேஷ். ravishankarவட இந்திய ராகம் என்று அறியப்படுகின்ற இந்த ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளை அலங்கரிக்கின்ற ராகங்களில் ஒன்றாகும்.தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்படுகின்றன. எழில் நிறைந்த மலர்கள் போன்று மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஏதுவான ராகம் இந்த தேஷ். ஹிந்துஸ்தானி இசையில் மிக விரிவாக இந்த ராகத்தை இசைப்பார்கள்.ரவிஷங்கர் , ஹரிபிரசாத் சௌராசையா போன்ற இசை மேதைகளின் விரிவான வாசிப்பு நம்மைப் பரவசத்தில் மிதக்க வைக்கும். இயற்கையோடிணைந்த வாழ்வில் தாம் அனுபவித்த ஒலிகளை மூங்கிலில் பிரதி செய்து பார்த்து மகிழ்ந்தவன் ஆதி மனிதன்.குழல் என்பது ஆதி மனிதன் முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி என்பர்.மூங்கிலை பழங்காலத் தமிழர்கள் காட்டுப்புல் என அழைத்தனர்.அதிலிருந்து உருவான குழலை புல்லாங்குழல் என அழைத்தனர். ” புல் என்பது அக்காலத்தில் பனை மூங...

THE BIRTTH OF TAMIL SONGS

Image
THE BIRTTH OF TAMIL SONGS எப்போதும் தாமதமாக வரும் கவியரசு கண்ணதாசன், இந்தப் படத்துக்கு மட்டும் சீக்கிரமாக வந்துவிட்டாராம்.  ஆனால் எம்எஸ்வி வரவில்லை. முந்தைய நாள் நள்ளிரவு வரை நடந்து பாடல் பதிவுகளால் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாராம் எம்எஸ்வி.  விஷயம் தெரிந்த கண்ணதாசன், ஒரு தாளில் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம். அவனுக்கென்ன தூங்கிவிட்டான்  அகப்பட்டவன் நானல்லவோ... இந்த வரிகள் அருமையாக இருந்ததால், அதையே படத்தில் எம்ஜிஆர் பாடும் சோகப் பாடலுக்கு பல்லவியாக எடுத்துக் கொண்டு, மீதி வரிகளைத் தரும்படி கேட்டு கவிஞரை குளிர்வித்தாராம் எம்எஸ்வி. "விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!" எம்ஜிஆரும் கண்ணதாசனும் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது. அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் உரிமைக்குரல் உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு. உடனே எம்...