Wei Ling Chua எழுதிய Tiananmen Square Massacre? The Power of Words vs Silent Evidence
‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2 Wei Ling Chua எழுதிய Tiananmen Square Massacre? The Power of Words vs Silent Evidence சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும். வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இம்மாதம் ஐந்தாம் திகதி, சீனாவின் ‘தியனன்மென்’ சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆண்டுகள் நிறைவு, மேற்குலக ‘ஊடகங்களால் நினைவுகூரப்பட்டது. சீன அரசாங்கத்தினதும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் கொலைவெறிச் செயல்’ என, இந்நிகழ்வு...