VOLTAIRE -PHILLIP STORY
VOLTAIRE -PHILLIP STORY அந்த பழுப்பு நிற தந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் செறிவில் அது யார் அனுப்பியிருக்க கூடும் என்பதை எளிதாக யூகித்திருந்தான் பிலிப். வோல்ட்டயர், பிலிப்பிடம் அடிக்கடி சொல்வது இது ஒன்றைதான் 'ஒரு வசந்த காலம் உன்னை தேடி வரும்,அது ஒரு மழைக்கால சூரியனின் அதிகாலை வெளிச்சம் போல ஒரு நாள் உன் வீட்டின் சிதிலமடைந்த கதவுகளை தட்டும் அப்போது கதவுகளுக்கு அப்பால் நீ அதன் வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும்” வோல்ட்டயர், எப்போதும் திரும்ப திரும்ப இந்த வார்த்தைகளை சொல்லி கொண்டிருப்பான் அவனுக்கு பிலிப்பின் கனவுகளில், சித்தாந்தங்களில் ஒரு ஈர்ப்பு உண்டு.ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்கான அத்தனை கனவுகளையும் அங்கீகரிப்பவனாக வோல்ட்டயர் இருந்தான். "பிலிப் வசந்த காலம் வந்தேவிட்டது, பைசெட் மருத்துவமனைக்கு உன்னை கண்காணிப்பாளாராக நியமிக்கிறேன் ஏனென்றால் அதற்கு நீ உன்னை முழுமையாக தயார்படுத்தி கொண்டிருக்கிறாய்,இருள் நிறைந்த அந்த மருத்துவமனையின் அறைகளுக்கு இன்றைய அதிகாலை சூரிய வெளிச்சத்தை நீ உன்னோடு சுமந்து செல்” ஜெனரல் வோல்ட்டயர் பாரிஸ் ஆகஸ்ட் 1...