AUNG SAN SUU KYI BORN JUNE 19,1945
AUNG SAN SUU KYI BORN JUNE 19,1945 இரும்பு பெண்மணி 'ஆங் சான் சூச்சி மியான்மர் மக்களுக்காக 21 ஆண்டுகள் வீட்டுச்சிறையும் விடுதலையுமாக மாறிமாறி வாழ்ந்த உலகத்தரமான ஒரு பெண் அரசியல் தலைவர்தான் இந்த ஆங் சான் சூச்சி. வெற்றிக்கு தோல்வி மியான்மரில் மக்கள் புரிதல் இல்லாத அதிகாரத்தை எதிர்த்து, மக்கள் விருப்ப கொள்கை வகுத்து, அதை ஜனநாயக பாதையில் மக்களால் வென்றெடுத்தும், ராணுவம் மறுத்ததால் இவரது வெற்றிக்கே தோல்வி கிடைத்தது. ஐ.நா. மற்றும் அயல்நாடுகளின் கண்டனத்தாலும் தேர்தலுக்கு முன்பே சூச்சி வீட்டுச்சிறையில் இருந்ததாலும் 80 சதவீத இடங்களை கைப்பற்றியும் அந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி அவருக்கு பயன்படாமல் போனது. பன்முகங்கள் மியான்மர் சமூக பெண் ஜனநாயகவாதி, அரசியல்வாதி, ஆசிரியை, அயல்நாட்டு தூதர், முதல் மாநில ஆலோசகர், ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர். மியான்மரின் முதல் பெண் வெளியுறவுதுறை அமைச்சர், ஜனாதிபதி அமைச்சகத்தின் முதல் பெண் அமைச்சர் போன்ற பன்முகங்களை கொண்டவர் இப்போது 70 வயதை அடைந்திருக்கும் இந்த இரும்புப் பெண்மணி. குடும்ப வாழ்க்கை 1947 ல் ஆங் சான...