(Margaret Hilda Thatcher, BORN, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013
(Margaret Hilda Thatcher, BORN, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013 மார்கரெட் ஹில்டா தாட்சர்[மூலத்தைத் தொகு] மார்கரெட் ஹில்டா தாட்சர் (Margaret Hilda Thatcher, Baroness Thatcher, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013) பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.[2] 1975 முதல் 1990 வரை தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். சோவியத் இதழாளர் ஒருவரால் தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்[3][4]; அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக பிரித்தானிய வலதுசாரிகளாலும் அழைக்கப்படலாயிற்று.[5] இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சரிசம் என அழைக்கப்படலாயிற்று. வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் ச...