HINDU -MOSLIMS CONFLICTS
HINDU -MOSLIMS CONFLICTS இந்து-முஸ்லிம் மோதல்கள் ஏற்படுவது ஏன்? மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் மருதன். ஆங்கில வடிவத்தில் இடம்பெறாத சில குறிப்புகளையும் ஆழம் இதழுக்காக மார்கண்டேய கட்ஜு நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆழம் நவம்பர் இதழில் வெளியான கட்டுரை தமிழ்பேப்பர் வாசகர்களுக்காக இங்கே. பிற கட்டுரைகளை வாசிக்க : http://www.aazham.in/ இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்க ளும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்க ப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இர...