HISTORY OF BHARATHIYA JANATA PARTY FORMED 1980 APRIL 6
HISTORY OF BHARATHIYA JANATA PARTY FORMED 1980 APRIL 6 வாஜ்பாய் - அத்வானி முதல் மோடி - அமித் ஷா வரை... இது பி.ஜே.பி-யின் கதை! #BJPat40 நமது நிருபர் பி.ஜே.பி பி.ஜே.பி வாஜ்பாய் கண்ட கனவு, 40 ஆண்டுகளில் நனவாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது அவர் தோற்றுவித்த கட்சி. பி.ஜே.பி உருவாவதற்கும், இன்றுவரை அந்தக் கட்சி தனது நீண்ட கால செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கும் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ஏப்ரல் 06, 1980. 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் இந்தியாவின் அரசியல் தலையெழுத்து மாற்றி எழுதப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி முதலானோர் தலைமையில் இந்நாளில் புதிதாகப் பிறந்தது பாரதிய ஜனதா கட்சி. டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கப்பட்ட பி.ஜே.பி என்ற புதிய கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர் என்று வர்ணிக்கப்பட்ட வாஜ்பாய், தனது நீண்ட கால செயல்திட்டங்களுள் ஒன்றான தங்களுக்கென்ற கட்சி உருவானது குறித்து உணர்ச்சி ததும்ப தொண்டர்களிடம் பேசினார். “கடந்த காலங்களை மறந்து...