SIGMUND FREUD ,AUSTRIAN PSYCHOLOGICAL DOCTOR BORN 1856 MAY 6 - SEPTEMBER 23, 1939
SIGMUND FREUD ,AUSTRIAN PSYCHOLOGICAL DOCTOR BORN 1856 MAY 6 - SEPTEMBER 23, 1939 சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்ததும், இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார் வரலாறு இளமைக்காலம் photograph 1872 இல், பிராய்ட் தனது 16 ஆவது வயதில், அவரது தாய் அமாலியா பிராய்ட் உடன் நின்று எடுத்துக்கொண்ட படம்[1] சிக்மண்ட் பிராய்ட், 1856 ஆம் ஆண்டில், ...