MGR AND NATARAJA PILLAI DIFFICULTY IN TAMILCINEMA
MGR AND NATARAJA PILLAI DIFFICULTY IN TAMILCINEMA நண்பர், கலைஞர்களிடம் மட்டுமல்ல, எதிரிகளிடம் கூட, மரியாதையை பெற்று விடக் கூடியவர், எம்.ஜி.நடராஜ பிள்ளை. அப்படிப்பட்டவரிடம், மது அருந்துங்கள் என்று தவறான காரியத்தை செய்ய வற்புறுத்தியதுடன், 'உங்க வாழ்க்கை லட்சியம் என்ன?' என்று கேட்டேன். 'என்னை போன்றோருக்கு எப்படிப்பட்ட லட்சியம் இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?' என்று கேட்டார், நடராஜ பிள்ளை. இப்போது, யாராவது இதுபோன்ற கேள்வியை என்னிடம் கேட்டால், நாட்டுப்பற்று, மொழிப்பற்று மற்றும் கலைப்பற்று என்று, எதையாவது சொல்லியிருப்பேன். ஆனால், அன்று, எனக்கு, 'உங்கள் லட்சியம் என்ன?' என்று கேட்கத்தான் தெரியுமே தவிர, லட்சியம் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது. அதனால், 'லட்சியம், கிட்சியம்ன்னு எல்லாம் கேக்காதீங்க; எனக்கு தெரியாது. உங்களோட ஆசை என்னன்னு சொல்லுங்க...'என்றேன். என் கேள்வியின், உட்பொருளை புரிந்து கொண்டவர், 'எனக்கும் நிறைய ஆசை இருக்குங்க தம்பி!' என்றார். பிடி கிடைத்து விட்டதாக மகிழ்ந்து, 'அப்ப, இந்தப் படத்தில கடைசி வரைக்கும் நட...