Posts

Showing posts with the label CORRESPONDENCE

V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE

Image
  V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE வ.உ.சி. 150. நினைவலைகள் (பதிவு எண். 9/150) சென்னையில் பெரியவர் வ.உ.சி – மகாத்மா காந்தியடிகள் கடித பரிவர்த்தனை கடந்த 106 வருடங்களுக்கு முன்பாக (17.04.1915) இதே நாளில் திரு. காந்தியடிகள் தனது மனைவியுடன் சென்னை வருகிறார்.   சென்னை வந்த காந்தியை பெரியவர் வ.உ.சி. இரயிலில் இறங்கும் வேளையில் பார்த்திருக்கிறார். அச் சமயம் வ.உ.சிதம்பரனார் மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் அருகே உள்ள எண்: 40, இலக்கம் கொண்ட பரிபூர்ண விநாயகர் கோவில் தெருவில் வசித்திருக்கிறார். மறுநாள் அதாவது 106 வருடங்களுக்கு முன்பாக இதே நாளில் 18.04.1915 அன்று தம்பு செட்டித் தெருவில் ஜி.ஏ. நடேசன்  வீட்டில் தங்கியிருந்த காந்தியடிகள் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். டியர் பிரதர் காந்தி, நேற்று தாங்களும்  தங்களது மனைவி கஸ்தூரிபாய் அவர்களும் ரயிலில் இருந்து இறங்கும் போது, உங்கள் இருவரையும் பார்க்கும் பேறு  எனக்குக் கிடைத்தது. இந்த ஊரில் இருந்து கிளம்பும் முன்பாக உங்களைச் சந்தித்து உரையாட விரும்புகிறேன். இப்படிக்கு வ.உ. சிதம்பரனார் மயிலாப்பூர். 20.04.191...