Veerapandiya Kattabomman History
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு – Veerapandiya Kattabomman History in Tamil சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது. பூர்வீகம் : கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் தெலுங்கில் கெட்டி பொம்மு என்றால் வீரம் மிகுந்தவன் என்று அர்த்தம். நாளடைவில் அந்த பெயர் தான் மருவி கட்ட பொம்மன் என்று ஆனதாக சொல்லப்படுகிறது. கட்ட பொம்மனின் முன்னோர்கள் விஜய நகர பேரரசை ஆண்டு வந்தவர்கள். இப்போது உள்ள தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் மீது முகமதியர்கள் படை எடுத்து வந்து நாட்டை கைப்பற்றும் நிலையில் கட்ட பொம்மனின் முன்னோர்களிடம் உதவி கரம் கேட்டனர் தமிழக மன்னர்கள். பிறகு விஜய நகர போர் படை வந்து மீண்டும் நாட்டை மீட்டு கொடுத்தற்காகவும் அவர்களின் வீரத்தை பாராட்டும் விதமாகவும் அவர்களுக்கு பாஞ்ஜலம் குறிச்சியை பரிசாக கொடுத்தனர். அப்போது முதல் தான் கட்ட பொம்முவின் வம்சம் பாஞ்சாலம் குறிச்சியை ஆட்சி செய்து வந்தனர் . பிறப்பு மற்றும் குடும்பம்:...