Posts

Showing posts with the label 1329

ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND BORN 1274,JULY 11-1329 JUNE 7

Image
ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND  BORN  1274,JULY 11-1329 JUNE 7 ராபர்ட் ப்ரூஸ் DIED 1329 JUNE 7 லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது. மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தபோது ..... அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை ...