KAMARAJ KNEW THE DIFFICULTY OF OTHERS
KAMARAJ KNEW THE DIFFICULTY OF OTHERS #காமராசர் முதல்வராக இருந்த சமயம்.. அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார். சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர். உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்.. "என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார். இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.. "பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்" "இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க.. "அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட.. "இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன். நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க...