THANGA PATHAKKAM DRAMA
THANGA PATHAKKAM DRAMA சிவாஜி கணேசன் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தை சிவாஜியின் நண்பர் எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்தார். எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்திருந்தார். அது 42வது முறையாக அன்று அரங்கேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கூட கவனித்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு போனார் சிவாஜி. எஸ்.ஏ. கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்தார். `நாளைக்கு எங்கே நாடகம்?’ என்று கேட்டார். சொன்னார்கள். `நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க. அப்புறம் இந்த நாடகத்தை நம்ப சிவாஜி நாடக மன்றம் நடத்தும். எஸ்.பி. சவுத்ரி நான்தான்’. அவர் அப்படிச் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் திகைத்தனர். அடுத்ததாக ` சரி! நாடக ஆசிரியர் எங்கே?’ என்றார். மகேந்திரனை கொண்டு போய் அவர் எதிரே நிறுத்தினார்கள். `உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என்றார் நடிகர் திலகம். `நான் எழுதிய ‘நிறைகுடம்’ பட பூஜையில்.. உங்களிடம் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்’ என்றார் மகேந்திர...