P.SRINIVASACHARI ,EMINENT WRITER OF DEVOTIONAL SUBJECTS DIED 1981 OCTOBER 28
P.SRINIVASACHARI ,EMINENT WRITER OF DEVOTIONAL SUBJECTS DIED 1981 OCTOBER 28 ஸ்ரீராமாநுஜர் பிறந்து 1,000 வருடங்களாகின்றன. அந்த ஆன்மிகப் புரட்சிக்காரரைப் பற்றி மிக எளிமையாக 1964-ல் தமிழுக்குச் சொன்னவர் பி.ஸ்ரீ எனும் பி. ஸ்ரீநிவாச்சாரி. இவர் எழுதிய ‘ஸ்ரீ ராமாநுஜர்’ புத்தகத்துக்கு 1965-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது! ஆனந்த விகடனை வாங்கிய சிறிது காலத்திலேயே எஸ்.எஸ். வாசன் கண் டெடுத்த இலக்கிய பொக்கிஷம் பி.ஸ்ரீ. ஆனந்த விகடனில் ‘சித்திர ராமாயணம்’, ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை’, ‘தென்னாட்டுத் திருக்கோயில்கள்’, ‘துள்ளித் திரிகின்ற காலத்திலே’, ‘சிவநேசச் செல்வர்கள்’ என்றெல்லாம் பல கட்டுரைகளையும் தொடர்களையும் அவர் எழுதினார். பி.ஸ்ரீ. பிறந்த ஊர் தென்திருப்பேரை. நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி கரையிலிருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்று. ‘அகத்தியர் முதல் அனந்தகிருஷ்ணய்யங்கார் வரையில் தமிழ் தாகத்தைத் தீர்த்தது தாமிரபரணிக் கரைதான்’ என்பார் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். பி.ஸ்ரீ, உ.வே.சா.வுடன் அறிமுகம் ஆனார். தமிழ்த் தாத்தாவின் பழக்கத்தால் அவருக்குத் தமிழ் ஆர்வம் வர ஆரம்பித்தது. சின்ன...