MASTER SRIDHAR ,CHILD ACTOR BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013
MASTER SRIDHAR ,CHILD ACTOR BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013 .மாஸ்டர் ஸ்ரீதர். நான், பணத்துக்காக,என்னதான் முடிவு, குறத்தி மகன், முருகன் அடிமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற ஏராளமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர். திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.இவரது 5-ஆவது வயதிலேயே “கடமையும் நீதியும்” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் “எதையும் தாங்கும் இதயம்”படத்தில் சிறு வயது எஸ்.எஸ்.ராஜேந்திரனாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகனாக நடித்த படம் அருட்பெருஞ்ஜோதி. இப்படம் 1971-இல் வெளிவந்தது.இப்படத்தில் ராமலிங்கமாக இவர் நடித்திருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “குறத்தி மகன்”. இப்படம் தேசிய விருதைப் பெற்றது. இதில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜெயசித்ரா. இவர் பிரபல நடிகை இந்திராவை [பேபி இந்திரா] திருமணம் செய்துகொண்டார். நடிகர், “மாஸ்டர்ஸ்ரீதர், 60, மாரடைப்பால்மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகி...