SABARNA ,TV ANCHOR,ACTRESS MURDER MYSTERY
SABARNA ,TV ANCHOR,ACTRESS MURDER MYSTERY November 12, 2016, வீட்டில் நிர்வாண நிலையில் மர்ம சாவு நடிகை சபர்ணா கொலை? டைரியில் ‘திடுக்’ தகவல் சென்னை: சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து அவரது டைரி மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா தம்பதியின் மகள் சபர்ணா(25). சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘பிரிவோம், பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 1வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு...