Showing posts with label 2003. Show all posts
Showing posts with label 2003. Show all posts

Friday, 16 October 2020

VEERAMANI IYER DANCER BORN 1931 OCTOBER 15 - 2003 OCTOBER 8

 

VEERAMANI  IYER DANCER BORN

 1931 OCTOBER 15 - 2003 OCTOBER 8




வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.


கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.




சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயர்

பாடல்கள் இயற்றல்

தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.


`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.


இயற்றிய உருப்படிகள்

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.


கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமற்கிருதத்திலும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.


இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ, மகாநதி ஷோபனா]] ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.


இறுதி நாட்கள்

கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.


1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.


யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.


விருதுகளும் பட்டங்களும்

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவருக்கு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் சாகித்ய சாகரம்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை பொன்விழாவில் கவிமாமணி என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இயல் இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் இயலிசை வாரிதி, மஹா வித்துவான் என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படன.

1999 அக்டோபர் 6 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இயற்றிய பாடல்கள்

நல்லூர் முருகன் பாடல்கள்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள்

இணுவில் சிவகாமி அம்மன் கீர்த்தனைகள் - பாடியவர்: மகாநதி ஷோபனா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மீதான பாடல்கள்

கோண்டாவில் சிவகாமியம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி சிவசிதம்பரம்

காரைநகர் திக்கரை முருகன் பாடல்கள்

சுட்டிபுரம் கண்ணகை அம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றிய சாகித்யங்கள்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை)- பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்

சின்ன வயதினிலே (சாகித்யம்) - பாடியவர்: சுதா ரகுநாதன்

சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்

தசாவதாரம் ( ராகமாலிகை)

என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்

ஏனடா முருகா

என்னடி பேச்சு சகியே

கஜமுகா

குஞ்சரன் சோதரா

குழல் ஊதி விளையாடி

மட்டுநகர்

நவரச நாயகி

சாரங்கன் மருகனே

வண்ண வண்ண

கற்பக விநாயகனே

தாமரை இதழிலே நாதம் கேட்குதடி

நயினையம்பதி

வெளி இணைப்புகள்

கிடுகுவேலி - பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

கதகளி - வீரமணி ஐயரின் கட்டுரை

20/21ம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - யாழ்ப்பாணம் என்.வீரமணி ஐயர்

கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணி ஐயரும் - மலைநாடான் பதிவு

கொஞ்சு தமிழில் மிஞ்சி விளையாடிய சந்தக் கவிஞர் கவிமாமணி பிரம்மஸ்ரீ ம.த.ந. வீரமணிஐயர்

Wednesday, 30 September 2020

TAMIL WIKIPEDIA BEGAN SERVICE FROM 2003 SEPTEMBER 30

 

TAMIL WIKIPEDIA BEGAN SERVICE FROM 2003 SEPTEMBER 30

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.SEP 30,2003




விக்கிப்பீடியா (Wikipedia; /ˌwɪkɪˈpiːdiə/ (About this soundகேட்க) wik-ih-PEE-dee-ə அல்லது /ˌwɪkiˈpiːdiə/ (About this soundகேட்க) wik-ee-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 1,00,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும், தொகுக்கப்படக் கூடுவன.[6] மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.[7][8] செப்டம்பர் 2020 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதுமாகும்.[9][10][11][12] மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.[9][13]


விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது.[14] சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை,[15] விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)[16] மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், டைம் சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு, யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.[17] விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம், தலைப்புச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.[18][19][20]


விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,[21] தேவையற்ற தொகுப்புக்கள்[22][23] மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள், உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,[24] நேச்சர் இதழ் மூலம் 2005-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள அறிவியல் கட்டுரைகள், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும் தலைமையான தவறுகள் ஒரேயளவினதாய் இருந்தன.[25] இதற்குப் பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா, இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.[26] எனினும் இதனை மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், பிரிட்டானிக்காவின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.[27][28]


யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. "அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது; பக்கச் சார்பற்றது; நடுநிலைமையை வலியுறுத்துவது; இதன் நுட்பக் கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது


வரலாறு

நுபீடியா


Logo reading "Nupedia.com the free encyclopedia" in blue with large initial "N"

விக்கிப்பீடியாவானது, ஆரம்பத்தில் நுபீடியா என்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது



ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர்

விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில், கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை.[29] முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' (en:Bomis) வலைப்பக்க நிறுவனத்தால், நுபீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நுபீடியாவை, ஓர் இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை, வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது.[30] போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய நபர்களாக, முதன்மைச் செயலதிகாரியான ஜிம்மி வேல்ஸ் உம் லாரி சாங்கர் உம் இருந்தார்கள்.[31][32] லாரி சாங்கர், முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.


நுபீடியாவிற்கு, இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்', நிதி வழங்கியது. ஆரம்ப காலத்தில், நுபீடியாவிற்கு, அதன் சொந்த நுபீடியா மூலம் திறந்த உள்ளடக்க உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களின் தூண்டுதலால், நுபீடியாவானது, விக்கிப்பீடியாவாக மாற்றமடையும் முன்னரே குனூ தளையறு ஆவண உரிமத்திற்கு மாற்றப்பட்டது.[33] லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர்.[31][32] 'பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம்' என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை[34][35] வேல்ஸையே சாரும். திறமூல விக்கியை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த, திட்டவடிவம் கொடுத்த பெருமை, சாங்கரையேச் சாரும்.[36] ஜனவரி 10, 2001 அன்று விக்கித் தொழில்நுட்பத்தை, நுபீடியாவிற்கு ஆதாரம் கொடுக்கும் திட்டமாக ஆக்க, லாரி சாங்கர், நுபீடியாவின் மின்னஞ்சல் பட்டியலூடாக ஒரு பரிந்துரை கொடுத்தார்.[37]


விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்



ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கைக் குறித்த வரைபடம், ஜனவரி 10, 2001 முதல் செப்டம்பர் 9, 2007 வரையில் (இரண்டு மில்லியன் எண்ணிக்கையை எட்டியபோது)

ஜனவரி 12, 2001,[38] ஜனவரி 13, 2001[39] இல் முறையே விக்கிப்பீடியா.கொம், விக்கிப்பீடியா.ஓர்க் ஆகிய ஆள்களப் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15, 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது.[30] அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழிப் பதிப்பாக விக்கிப்பீடியா.காம் .[40] என்ற பெயரில் வெளியிடப்பட்டு, நுபீடியா மின்னஞ்சல் பட்டியலில் லாரி சாங்கரால் அறிவிக்கப்பட்டது.[34] விக்கிப்பீடியா ஆரம்பித்து சில மாதங்களில், 'நடுநிலைமை', ஒரு கொள்கையாக முன்னிறுத்தப்பட்டது.[41] இது நுபீடியாவின் முந்தைய "மனச்சார்பு இல்லாத" கொள்கைக்கு இணையானது. தவிர, ஆரம்பத்தில் வேறு சில விதிமுறைகள் மட்டுமே விக்கிப்பீடியாவில் இருந்ததுடன், விக்கிப்பீடியாவானது, நுபீடியாவிலிருந்து தனித்து, சுயாதீனமாக இயங்கத் தொடங்கியது.[34] ஆரம்பத்தில், போமிஸ், இதனை ஒரு வணிக ரீதியில் ஆதாயம் கிடைக்கும்படியான திட்டமாகச் செய்யவே நினைத்திருந்தது.[42]


விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலத்தில், நுபீடியா, ஸ்லாஷ்டாட் (en:Slashdot) பதிவுகள், வலை தேடு பொறி குறியீட்டு ஆக்கங்கள் போன்றவற்றிலிருந்து பங்களிப்புகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர் வெவ்வேறு மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட 20,000 கட்டுரைகளுடன் 18 மொழிகளில் வளர்ந்தது. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 26 மொழிகளிலும், 2003 ஆம் ஆண்டு முடிவில் 46 மொழிகளிலும் வளர்ந்த விக்கிப்பீடியா, 2004 ஆம் ஆண்டின் முடிவில் 161 மொழிகளில் இயங்கும் கலைக்களஞ்சியமாக உயர்ந்தது.[43] நுபீடியாவிலிருந்த அனைத்து உள்ளடக்கங்களும், விக்கிப்பீடியாவினுள் சேர்க்கப்பட்டதும், 2003 ஆம் ஆண்டில், நுபீடியாவிற்கான வழங்கி இல்லாது செய்யப்பட்ட காலம்வரை, நுபீடியாவும், விக்கிப்பீடியாவும் ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தன. செப்டம்பர் 9, 2007 அன்று ஆங்கில விக்கிப்பீடியா 2 மில்லியன் கட்டுரைகளைக் கடந்து, இது வரை சாதிக்காத வகையில் மிகப்பெரும் கலைக்களஞ்சியமாக, 600 ஆண்டுகள் வரை சாதனையாக விளங்கிய யோங்களே கலைக்களஞ்சியத்தை (:en:Yongle Encyclopedia), விஞ்சி முன்னேறியது. [44]


விக்கிபீடியாவின் கட்டுப்பாடில்லாத தன்மையாலும், வர்த்தக விளம்பரங்களின் அச்சத்தினாலும், எசுப்பானிய விக்கிப்பீடியாவின் பயனாளிகள் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விக்கிப்பீடியாவிலிருந்து பிரிந்து என்சிச்லோபெடியா லிப்ரேவை (en:Enciclopedia Libre Universal en Español) உருவாக்கினர்.[45] அதனால், அந்த ஆண்டின் இறுதியில், விக்கிப்பீடியா விளம்பரங்களைக் காட்டாது என்றும், அதன் இணையதளம், wikipedia.org என்ற வலைதளத்துக்கு மாற்றம் செய்துவிட்டதாகவும் ஜிம்மி வேல்ஸ் அறிவித்தார்.[46]


மைல் கற்கள்

ஜனவரி 2007 இல், முதன் முதலாக, அமெரிக்காவில், மிகவும் பிரபலமான இணையத்தளங்களில் (en:List of most popular websites), முதல் பத்து இணையத்தளங்களில் ஒன்றாக விக்கிப்பீடியா வந்தது. 42.9 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்து, 10 ஆம் இடத்திலிருந்த, த நியூயார்க் டைம்ஸ், 11 ஆம் இடத்திலிருந்த, ஆப்பிள் ஆகிய இரண்டையும் முந்தி 9 ஆவது இடத்திற்கு வந்ததைக் en:Comscore காட்டியது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், 18.3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று, 33 ஆவது இடத்திலிருந்த விக்கிப்பீடியாவிற்கு, இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.[47]

2014 ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 8 பில்லியன் பக்கப் பார்வைகளை விக்கிப்பீடியா கொண்டிருந்தது.[48] பெப்ரவரி 9, 2014 இல், த நியூயார்க் டைம்ஸ், விக்கிப்பீடியா, மாதமொன்றுக்கு 18 பில்லியன் பக்கப் பார்வைகளையும், 500 பார்வையாளர்களையும் கொண்டிருப்பதாக Comscore ஐ ஆதாரம் காட்டிக் குறிப்பிட்டிருந்தது.[49]

2015 மார்ச்சில், அலெக்சா இணையத்தின் அறிக்கைப்படி, அதிக பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில், விக்கிப்பீடியா 5 ஆம் இடத்தைப் பெற்றது.[50][51]

2016 டிசம்பரில், அனைத்துலக மட்டத்தில், மிகப்பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை விக்கிப்பீடியா கொண்டிருப்பதாக அறியப்பட்டது.[52]

17 பெப்ரவரி 2019 கணக்கின்படி, தற்போது 301 மொழிகளில் (முதற்பக்கம் மட்டும் கொண்டுள்ள இரு மொழி விக்கிப்பீடியாக்கள் தவிர்த்து) விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 49,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 5.8 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 87 மொழி விக்கிப்பீடியாக்களில் 50,000 க்கு மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா 120,000 க்கு மேற்பட்ட கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டு, 60 ஆவது இடத்தில் (கட்டுரை எண்ணிக்கையின் அடிப்படையில்) இருக்கின்றது.[53]

பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.


இயல்புகள்

பிரபலமான நகைச்சுவைக் கூற்று ஒன்று: "விக்கிப்பீடியாவிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அது பயன்பாட்டு ரீதியில் சிறந்தது. ஆனால், கொள்கை ரீதியில் பயனற்றது."

—மீக்கா ரியோக்காசு[54]


தொகுத்தல்

ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாது, விக்கிப்பீடியா வெளித்தொகுப்புக்களை ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள், தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.[55] மேலும், கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் கணக்கொன்று இல்லாமலேயே கட்டுரைகளைத் தொகுக்க முடியும். எனினும், வெவ்வேறு மொழிப்பதிப்புகளில் இக் கொள்கை வித்தியாசமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த பயனர் மட்டுமே புதிய கட்டுரையொன்றை உருவாக்க முடியும்.[56] எந்தவொரு கட்டுரையையும் அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை கொண்டாட முடியாது என்பதோடு, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத் தரப்பும், அதனை ஆராய முடியாது. அதற்குப் பதிலாகத் தொகுப்பாளர்கள், தம்மிடையேயான கருத்தொருமிப்பின் அடிப்படையில் கட்டுரைகளின் உள்ளடக்கங்களையும், அமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.[57]


வழமையாக, கட்டுரையொன்றில் மேற்கொள்ளப்படும் தொகுப்பானது, உடனடியாக இற்றைப்படுத்தப்படும். எனவே, இக்கட்டுரைகளில் துல்லியமின்மை, கருத்துக் கோடல்கள் அல்லது காப்புரிமைத் தகவல்கள் இடம்பெறலாம். ஒவ்வொரு மொழிப்பதிப்பும் வெவ்வேறு நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், இக்கொள்கைகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரலாம். உதாரணமாகச், செருமானிய விக்கிப்பீடியாவில் கட்டுரைத் தொகுப்புக்கள், சில மேற்பார்வையிடல்களுக்குப் பின் உறுதிப்படுத்தப்படுகின்றன.[58] பல்வேறு சோதனை ஓட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின், டிசம்பர் 2012 அன்று, "மாற்றங்களுக்கான காத்திருப்பு" முறைமை, ஆங்கில விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[59] இம்முறைமையின் கீழ், சர்ச்சைக்குரிய அல்லது குழப்பம் விளைவிக்கக்கூடிய ஆபத்துடைய கட்டுரைகளின் மீதான புதிய பயனர்களின் தொகுப்புக்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒரு விக்கிப்பீடியா பயனரின் மேற்பார்வையின் பின்னரே வெளியிடப்படும்.


விக்கிப்பீடியாவுக்கு உதவும் ‘மென்பொருட்கள்’, பங்களிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் "வரலாற்றைக் காட்டவும்" பக்கம், திருத்தங்களைப் (திருத்தங்கள், அவதூறான தகவல்கள், குற்ற அச்சுறுத்தல் அல்லது காப்புரிமை மீறல் போன்றன மீளமைக்கப்படக் கூடியனவாய் இருப்பினும்) பதிவு செய்யும்.[60] இப்பக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள், விரும்பத்தகாத தொகுப்புக்களை மீளமைக்கவோ, இழக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறவோ முடியும். ஒவ்வொரு கட்டுரைக்குமான ‘பேச்சுப்பக்கம்’, பல்வேறு பயனர்களும் தம்முள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது.[61] முக்கியமாகத் தொகுப்பாளர்கள், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்திக் கருத்தொருமிப்புப் பெற முடியும்.[62] சிலவேளைகளில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படும்.


தொகுப்பாளர்கள் இவ்விணையப் பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும் காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம், தமக்கு விருப்பமான கட்டுரைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிட முடியும். அதிகமான கட்டுரைகளைக் கொண்ட மொழிப் பதிப்புக்களில், தொகுப்பாளர்கள் கவனிப்புப் பட்டியலைப் பேண விரும்புகின்றனர். தொகுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’ பகுதியில், சில தொகுப்புக்கள் இடம்பெற முடியாமல் போவதே இதற்குக் காரணமாகும். புதிய பக்கக் கண்காணிப்பு செயன்முறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் நிகழும் வெளிப்படையான தவறுகள் கண்காணிக்கப்படுகின்றன.[63] அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு, அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன.[64] குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.[65]


தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச் செய்நிரல்கள்’ மூலமாக எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, இவற்றின் மூலம் பொதுவான எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப் பிரச்சினைகள் அல்லது புவியியல் சார் கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[66][67][68] சில தானியங்கிகள், வேண்டத்தகாத தொகுப்புக்களை மேற்கொள்ளும் பயனர்களை எச்சரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.[69] இதன்மூலம், வேறு இணையத் தளங்களுக்கான இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி முகவரிகளினால் தொகுப்புக்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும். விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள், இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.[70]


கட்டுரைப் பக்க அமைப்பு

விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள், அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.[71] ஒரு புதியகட்டுரை, பெரும்பாலும் வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள் மாத்திரமே கொண்ட ஒரு குறுங்கட்டுரையாகவே ஆரம்பிக்கப்படும். அதேபோல் பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என வகைப்படுத்தப்படும். சில விக்கிப்பீடியாக்களில், ஒவ்வொரு நாளும் தொகுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக் கட்டுரை”யொன்று விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்டப்படும்.[72][73] ‘சியாகோமோ பொதேரி’ எனும் ஆய்வாளரின் கண்டுபிடிப்பின்படி, சில தொகுப்பாளர்கள், ஊக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத் தொகுப்பதன் மூலமே, சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது.[74] 2010-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, சிறப்புக்கட்டுரைகளிடையே, அவற்றின் தரங்கள் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச் செயற்பாடு’, போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து வெளியிட்டது.[75] 2007-இல், அச்சுவழிப் பதிப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும் அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.[76]


விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் குழுவொன்று, விக்கித்திட்டம் ஒன்றை உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு துறையில், தமது பங்களிப்புக்களை வழங்குகின்றது. இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்கம்’ மூலம், பல்வேறு கட்டுரைகளிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பர்.


மென்பொருளும் வன்பொருளும்



விக்கிப்பீடியா ஒரு விநாடிக்கு 2000-க்கும் மேலான ‘வேண்டுதல்’களைப் பெறுகிறது. 100-க்கும் மேலான ‘வழங்கி’கள், இதனை நிறைவேற்ற அமைக்கப்பட்டிருக்கின்றன.

விக்கிப்பீடியா, கட்டற்ற “விக்கிமீடீயா” மென்பொருளில் இயங்குகிறது. இது “பி.எச்.பி.”, “மைசீக்குவல்” ஆகிய ‘இணைய நிரல் மொழிகள்' மூலம் எழுதப்பட்டது. இவற்றோடு “எச்.டி.எம்.எல்.”, “சி.எசு.எசு.” ஆகியவையும் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


விக்கிப்பீடியா, ஒரு தனி ‘வழங்கி’யில், 2004 வரை இயங்கி வந்தது. அதன் பின்னர், “பல்நிலை வழங்கிக் கட்டமைப்பு”க்கு விக்கிப்பீடியா மாற்றப்பட்டது. தற்போது 100-க்கும் மேற்பட்ட வழங்கிகள், உலகின் நான்கு பகுதிகளில் விக்கிப்பீடியாவை வழங்குகின்றன.


மொழிப்பதிப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியா

முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்கிப்பீடியா


தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது, 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது இதில் 1,31,215 கட்டுரைகள் உள்ளன. 1,81,267 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


புத்தக வடிவில்

நியூயார்க்கைச் சேர்ந்த ஆசிரியர் ‘மைக்கேல் மாண்டி’ என்பவர், ஆங்கில விக்கியைப் புத்தகமாகத் தொகுத்துள்ளார்.

Wednesday, 20 June 2018

WIKIPEDIA FOUNDED 2003 JUNE 20



WIKIPEDIA FOUNDED 2003 JUNE 20







விக்கிமீடியா நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது

விக்கிமீடியா நிறுவனம்ஒரு அமெரிக்க இலாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்படப் பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது.

குறிக்கோள்கள்[தொகு]
விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும்.[5]

திட்டங்கள்[தொகு]

விக்கிமீடியா திட்டங்கள் குடும்ப முத்திரை
பல மொழிகளில் உள்ள பொதுவான கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உடன் இந்த அறக்கட்டளை கூடுதலாக ஒரு அகராதி மற்றும் சொற்களஞ்சியத்தை விக்சனரி என்னும் பெயரில் பல மொழிகளில் நிர்வகிக்கிறது.

ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.

பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாயிருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

விக்கிப்பீடியாவும் விக்கிமீடியா பவுண்டேசனும்[தொகு]
விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 லாரி சாங்கர் முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா விக்கி முறையில் நிர்வாகிக்கப்பட்டது. இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிப்பீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப்பட்டது.

Tuesday, 24 April 2018

JOHNNY WALKER ,HINDI COMEDY ACTOR BORN 1926 NOVEMBER 11- 2003 JULY 29










JOHNNY WALKER ,HINDI COMEDY ACTOR
BORN 1926 NOVEMBER 11- 2003 JULY 29



Badruddin Jamaluddin Kazi (11 November 1926 – 29 July 2003), better known by his stage name Johnny Walker, was an Indian actor who acted in around 300 films. He was born in Indore, British India, the son of a mill worker. His father was made redundant and the family moved to Bombay (now Mumbai). Kazi took various jobs as the sole breadwinner for the family, eventually becoming a bus conductor with Brihanmumbai Electric Supply and Transport (BEST

Early life[edit source]
Johnny Walker was born in 1926 to a mill-worker in Indore. Born to a Muslim family, he was named Badruddin Jamaluddin Kazi at birth. The mill in which his father worked closed and the family, of which Kazi was the second of ten children, moved to Maharashtra. There Kazi tried his hand at several jobs, and eventually secured a post as a bus conductor in the B.E.S.T (Bombay Electric Supply and Transport) bus service. He became the sole breadwinner, travelling many miles and at unsocial hours at various times in order to buy and then sell ice candy, fruit, vegetables, stationery and other goods. Throughout his youth he dreamed of being involved in films, idolising Noor Mohammed Charlie and practising stunts that he saw on-screen.[1]
Career[edit source]

Kazi took a job with BEST as a bus conductor in Bombay. He continued to nurture his desire to work in films and entertained his passengers with amusing routines, hoping that he would at some point be spotted by someone with connection to the movie industry. His wish came true, although the details are unclear. Balraj Sahni saw him, perhaps on a bus or perhaps while Kazi was amusing the cast of Hulchul, a film for which he had obtained a bit part, with an extemporised routine as a drunk. Sahni, who sources say was either at that time writing the script for Baazi (1951) or acting in Hulchul, told Kazi to demonstrate his drunkard act to Guru Dutt. From that meeting he gained a role in Baazi. It was Dutt who gave him the name of Johnny Walker, a reference to the brand of Scotch whisky, when he was inspired by Kazi's display in the role of a drunkard.[1][2][3]
Thereafter, Walker appeared in all but one of Dutt's movies and the director encouraged him to ad lib and to draw on his varied life experiences.[1] He was primarily an actor of comedic roles but towards the end of his life became disenchanted, saying, "Earlier, comedians had a respectable position and an almost parallel role with the protagonist, now it is just to bring a touch of humour. I don't buy that." His attempts to portray heroic personae in the eponymous Johnny Walker and Mr. Qartoon were not successful but films such as Mere Mehboob, C.I.D., Pyaasa and Chori Chori made him a star. His heyday was in the 1950s and 1960s and his later career was affected by the death of Dutt, who had greatly influenced it, in 1964. He worked with directors such as Bimal Roy and Vijay Anand but his career faded in the 1980s.[2][3] He was unwilling to adopt the cruder form of comedy and changed priorities that had become the vogue, saying that

"In those days we used to do clean comedy. We were aware that the person who had come to the cinema had come with his wife and children ... the story was the most important thing. Only after selecting a story would Abrar Alvi and Guru Dutt find suitable actors! Now it's all upside down ... they line up a big hero and find a story to fit in. The comedian has ceased to be a character, he's become something to fit in between scenes. ... I opted out because comedy had become hostage to vulgarity. I acted in 300 films and the Censor Board never cut even one line."[1]
Walker was particularly satisfied with his work in B. R. Chopra's Naya Daur (1957), Chetan Anand's Taxi Driver (1954) and Bimal Roy's Madhumati (1958).[1] His final film came after an absence of 14 years when he took a role in a remake of Mrs. Doubtfire titled Chachi 420 (1997).[2][3] During the intervening period, he had a successful business dealing with precious and semi-precious stones.[1]
Songs were written especially for him. His drawing power at the box office was such that distributors would insist on him having a song and would pay extra to ensure it. He also produced and directed a film 1985 "Pahunche Huwey Log".[1][2]
Family life[edit source]

Johnny Walker married Noor (short for Noorjahan), a sister of Shakila, despite the opposition of her family.[3] They had three daughters and three sons.[3] Regretting that he had been forced to leave school at 6th standard, he sent his sons to the US for schooling. [1]
Despite often playing the roles of a drunk, Walker was a teetotaller.[1




filmography

Walker acted in around 300 films,[2] including:


    1951 Baazi
    1952 Jaal
    1953 Aandhiyan
    1953 Aag ka dariya
    1953 Thokar
    1953 Baaz
    1954 Aar Paar
    1954 Munna
    1954 Taxi Driver
    1954 Lal Pari
    1954 Barati
    1955 Devdas
    1955 Shahzada
    1955 Marine Drive
    1955 Jawab
    1955 Society
    1955 Shahi Mehmaan
    1955 Railway Platform
    1955 Musafirkhana
    1955 Miss Coca-Cola
    1955 Milap
    1955 Mast Qalandar
    1955 Joru ka Bhai
    1955 Jashan
    1955 Char Paise
    1955 Bahu
    1955 Albeli
    1955 Mr. & Mrs. '55
    1956 Chori Chori
    1956 C.I.D.
    1956 Shrimati 420
    1956 Ghulam Begum Badshah
    1956 Justice
    1956 Naya Andaz
    1956 Rajdhani
    1956 Anjaan
    1956 Somewhere in Delhi
    1956 26 January
    1956 Awara Shehzadi
    1956 Bharti
    1956 Chanrakanta
    1956 Samundari Daku
    1956 Choo Mantar
    1957 Johnny Walker
    1957 Mr. X
    1957 Do Roti
    1957 Duniya Rang Rangili
    1957 Ek Saal
    1957 Gateway of India
    1957 Mai Baap
    1957 Qaidi
    1957 Changez Khan
    1957 Naya Daur
    1957 Pyaasa
    1958 Madhumati
    1958 Amar Deep
    1958 Kala Pani
    1958 Mr. Qartoon M.A.
    1958 Light House
    1958 Do Mastane
    1958 Zindagi ya Toofan
    1958 Sitaron Se Aage
    1958 Naya Paisa
    1958 Mujrim
    1958 Khota Paisa
    1958 Ghar Sansar
    1958 Detective (1958 film)
    1958 Chandan
    1958 Aji Bas Shukriya
    1958 Aakhri Dao
    1958 12 O'Clock
    1959 Paigham
    1959 Kaagaz Ke Phool
    1959 Zara Bachke
    1959 Satta Bazaar
    1959 Pehli Raat
    1959 Jawani Ki Hawa
    1959 Black Cat
    1959 Bhai-Bahen
    1960 Chaudhvin Ka Chand
    1960 Rikshawala
    1960 Mughal-E-Azam
    1960 Kala Aadmi
    1960 Ek Phool Chaar Kaante
    1960 Basant
    1961 Vilayat Pass
    1961 Modern Girl
    1961 Full Moon
    1961 Wanted
    1961 Suhag Sindoor
    1961 Chhote Nawab
    1962 Aashiq
    1962 Sachche Moti
    1962 Neeli Aankhen
    1962 Girls Hostel
    1962 Baat Ek Raat Ki
    1963 Ghar Basake Dekho
    1963 Ustado ke Ustad
    1963 Pyar ka Bandhan
    1963 Phool Bane Angaare
    1963 Mulzim
    1963 Mere Mehboob
    1963 Kaun Apna Kaun Paraya
    1963 Kahin Pyaar Na Ho Jaaye
    1964 Shehnai
    1964 Door Ki Awaaz
    1965 Zindagi Aur Maut
    1965 Bombay Race Course
    1966 Suraj
    1966 Sagaai
    1966 Preet na Jane Reet
    1966 Pati Patni
    1966 Dillagi
    1966 Dil Diya Dard liya
    1966 Baharen Phir Bhi Aayengi
    1967 Jaal
    1967 Bahu Begum
    1967 Dulhan Ek Raat Ki
    1967 Night in London
    1967 Noorjehan
    1967 Palki
    1967 Taqdeer
    1967 Nawab Sirazuddaula
    1967 Rajoo
    1967 Wahan ke Log
    1968 Duniya
    1968 Baazi
    1968 Mere Huzoor
    1968 Shikar
    1968 Dil Aur Mohabbat
    1968 Haseena Maan Jayegi
    1968 Kahin Din Kahin Raat
    1969 Aadmi Aur Insaan
    1969 Nannha Farishta
    1969 Pyar Ka Sapna
    1969 Sachaai
    1969 Do Raaste
    1970 Anand
    1970 Gopi
    1971 Hungama
    1972 Dushman
    1972 Raja Jani
    1973 Pyaar Ka Rishta
    1974 Madhosh
    1975 Pratigya
    1975 Zakhmee
    1976 Bundal Baaz
    1977 Khel Khilari Ka
    1978 Nawab Sahib
    1980 Shaan
    1981 Madine ki Galian
    1983 Mazdoor
    1984 Bindiya Chamkegi
    1985 Hum Dono
    1987 Mera Karam Mera Dharam
    1988 The Perfect Murder
    1991 Sapno ka Mandir
    1997 Chachi 420
 




Thursday, 1 March 2018

MAJOR SUNDARARAJAN ,TAMIL ACTOR BORN 1935 MARCH 1 -FEBRUARY 28,2003





MAJOR SUNDARARAJAN ,TAMIL ACTOR 
BORN 1935 MARCH 1 -FEBRUARY 28,2003



மேஜர் சுந்தரராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரராஜன் (மார்ச்சு 1, 1935 – பெப்ரவரி 28, 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.[1] மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் பட்டினத்தார் என்ற திரைப்பட்டத்தில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் கௌரவம், எதிர்நீச்சல், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள், தெய்வமகன், தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2]


அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.

இவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.







விகடனுக்கு மேஜர் அளித்த பேட்டி. 

அப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே! இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல்? உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.

அன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.


நான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.

என் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.

நாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.


மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

அதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி!” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்?’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.

நான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.


தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.

நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.

மேஜர் திறமை வாய்ந்த நடிகர்தான். அதுவும் ஒரு கண்டிப்பான மூத்தவர் ரோல் அவருக்காகவே படைக்கப்பட்டது. அவரது ஆஜானுபாகுவான தோற்றம், குரல் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள். ஆனால் மேஜர் சந்திரகாந்தில் முறுக்கிய உடலை, முறைத்த கண்ணை, அவர் கடைசி வரைக்கும் இளக்கவே இல்லை. அந்த டெம்ப்ளேட்டையே பல படங்களில் – நீர்க்குமிழி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர் நீச்சல், நவக்ரஹம், தெய்வ மகன், ஞான ஒளி – அவர் திருப்பி திருப்பி பயன்படுத்தினார். அவரது இயக்குனர்களும் பெரும்பாலும் அதைத்தான் கேட்டார்கள், அதனால் அவர் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது. பல படங்களில் மிகை நடிப்பு வேறு. ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் இல்லை என்றால் அவரது மிகை நடிப்பை கட்டுக்குள் வைக்க முடியாது.காலம் போக போக he just sleepwalked through his roles. அவரது ரோல்களுக்கும் காலம் செல்ல செல்ல ஸ்கோப் குறைந்து கொண்டே போனது.

அவரை நன்றாக பயன்படுத்தியவர் பாலச்சந்தர்தான். எழுபதுகளில் ஏனோ அவர் பாலச்சந்தர் படங்களில் நடிப்பது நின்று போனது.

பின்னாளில் இயக்குனராகவும் ஓரளவு வெற்றி பெற்றார். அது அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ். கல் தூண் நன்றாக ஓடியது. ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் ஆகிய படங்கள் நினைவு வருகின்றன.

நல்ல நாடகங்களை போட்டார். ஞான ஒளி, கல் தூண் போன்றவை அவர் அரங்கேற்றியவைதான். அவரது நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டுக்கு வெளியேயும் வெற்றி பெற்றன.

ஒரு திறமை வாய்ந்த நடிகர் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிப் போனது துரதிருஷ்டம்.

அந்த நாள் ஞாபகம் வீடியோ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை. வரவு எட்டணா பாட்டு


மேஜரின் நடிப்பு மிக நன்றாக இருந்த படங்கள்:
மேஜர் சந்திரகாந்த்
நீர்க்குமிழி
பாமா விஜயம்
எதிர் நீச்சல்
நவக்ரஹம்
ஞான ஒளி
உயர்ந்த மனிதன்
அபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்




தொடர்புடைய பிற பதிவுகள்:
மேஜர் சந்திரகாந்த்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நீர்க்குமிழி
எதிர் நீச்சல்
நவக்ரஹம்

அபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்


கம்பீரமும் தெளிவான குரலும் கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்

கம்பீரமான தந்தை வேடத்துக்கு பெருமையைச் சேர்த்தவர் நடிகர் மேஜர் சுந்தரராஜன். மேஜர் சுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பெரியகுளம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நாடகங்களில் நடிக்கலானார்.

தனது குரல் வளத்தையும், நடிப்பாற்றலையும் ஒருசேர பயன்படுத்தி மொனோ அக்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்த மேஜர் சுந்தரராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது. நாவலாசிரியர் அகிலன் எழுதிய ‘நெஞ்சின் அலைகள்’ நாடகத்தல் முக்கியய வேடத்தில் நடித்தார்.

இந்த நாடகத்தை பிரபல டைரக்டர் எல். வி. பிரசாத் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார். அவர் மூலம் சினிமாவில் நுழைய வாய்ப்பு வரும் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தார் சுந்தரராஜன். ஆனால் வாய்ப்பு வரவில்லை. பின்னர் ‘வைஜயந்திமாலா’ என்ற படத்தில் நடிக்கும் ‘சான்ஸ்’ கிடைத்தது. அவரது துரதிருஷ்டமோ என்னவோ படம் வெளிவரவில்லை.

1962ல் சுந்தரராஜன் சினிமாவில் அறிமுகமானார். ‘பட்டினத்தார்’ படம்தான் அவரது முதல் படமாகும். டைரக்டர் கே. சோமு இயக்கிய இந்தப் படத்தில் மேஜர் சுந்தரராஜனுக்கு சோழமன்னன் வேடம் கிடைத்தது. கதாநாயகன் பாடகர் டி. எம். செளந்தரராஜன். பிறகு கொஞ்ச காலம் ‘சான்ஸ்’ வரவில்லை. சில செய்திப் படங்களுக்குக் குரல் கொடுத்தார்.


டைரக்டர் கே. பாலசந்தரின் நாடகங்களில் நடித்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும், நாடக நடிப்பின் மூலமே புகழ்ப் பெற்றார். கே. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் சுந்தரராஜனுக்குப் பெரும் புகழை தேடிக் கொடுத்தது.

அவருக்கு கிடைத்த இந்த வேடப்பொருத்தம் பேசும் திறன், நடிப்பு ஆகியவை, திரை உலகினிரிடையே அவரைப்பற்றி பேச வைத்தது.

1965ல் கே. பாலசந்தர் டைரஷனில் ‘நாணல்’ என்ற படத்தில் மேஜர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்தார்.


கதாநாயகி கே. ஆர். விஜயா. சரவணா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் நன்றாக ஓடியது. ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்தினர் சினிமா படமாகத் தயாரித்தனர். கே. பாலசந்தர் டைரக்ட் செய்ய, மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இந்தப்படம் 1966ல் வெளிவந்தது.

இந்தப் படத்துக்குப்பின் ‘மேஜர் சுந்தராஜன்’ என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்த வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். அவருடைய தந்தை வேடம் மேஜர் சுந்தரராஜனுக்கு கொடுக்கப்பட்டது. சிறப்பாக நடித்து மேலும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘தெய்வச் செயல்’, குழந்தைக்காக உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தின் மூலம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். உயர்ந்த மனிதன், தெய்வமகன், ஞான ஒளி, கெளரவம் போன்றவை இருவரும் சேர்ந்து நடித்த மிகப்பெரும் வெற்றிப்படங்களாகும். எம். ஜி. ஆர். நடித்த படங்களில் மேஜர் சுந்தரராஜன் வில்லன், குணச்சித்திர வேடங்களில் தோன்றினார்.

‘நம் நாடு’ ‘ரிக்ஷாக்காரன்’ போன்றவை முக்கிய படங்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று சகல நடிகர்களுடனும் நடித்தவர் மேஜர் சுந்தரராஜன். மொத்தத்தில் மேஜர் சுந்தரராஜன் 900 படங்கள் நடித்துள்ளார்.

இவற்றில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தது மட்டும் 200 படங்களுக்கு மேல் மேஜர் சுந்தரராஜன் படங்களில் நடித்ததுடன் ‘கல் தூண்’ “ஊரும் உறவும்” நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம் ஆகிய சினிமா படங்களை டைரக்ட் செய்தார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். இருதய நோயினால் அவதிப்பட்ட மேஜர் சுந்தரராஜன் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பிறகு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.


28-02-2003 அன்று திடீரென்று மரணம் அடைந்தார். நாடகம் ஆனாலும் சரி, சினிமா ஆனாலும் சரி அவரது புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவை அவருடைய கம்பீரத் தோற்றமும் தெளிவான குரலும்தான். மேஜர் சுந்தரராஜளின் மனைவி பெயர் சியாமளா. கெளதம் என்ற ஒரே மகன் மட்டும்தான் உள்ளார்.





Monday, 29 January 2018

PANDARIBHAI , THE FIRST HEROINE OF KANNADA FILM INDUSTRY DIED JANUARY 29,2003









PANDARIBHAI ,
THE FIRST HEROINE OF KANNADA 
FILM INDUSTRY DIED JANUARY 29,2003



பண்டரிபாய் – (பிறப்பு-1928 SEPTEMBER 18-இறப்பு-29.1.2003) வயது-75.

இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் சிவாஜிகணேசன், கன்னடத்தில் ராஜ்குமாருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவரது தாய் மொழி கன்னடம். எனினும் ஏனைய தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த போது இவரது சொந்த குரலிலேயே தவறில்லாமல் பேசி நடித்தார் என்பது சிறப்பு. குறிப்பிட்ட காலத்திற்குப்பின் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவரது தங்கை மாலையிட்ட மங்கை, வண்ணக்கிளி போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகை மைனாவதி. 1998 முதல் 2000 வரை மைனாவதி தயாரித்த கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்துவிட்டார். அதன் பின் இவர் படங்களில் நடிப்பதில்லை. 2003 ஆம் ஆண்டு மறைந்தார்.

சிவாஜிகணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.




பண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[1]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்து
ள்ளார்[



பண்டரிபாய்...
பழம்பெரும் நடிகை..
இவருடைய பிற்கால
வாழ்க்கையில்
சோதனைகள் அதிகம்.
...
இவர் நிலைகண்டும்,
பழம்பெரும்நடிகர்கள் மீது
மதிப்பும் அன்பும்
இருந்ததாலும்
நமது தலைவர் ரஜினி இவருக்கு
தமது மன்னன் படத்தில்
வாய்ப்பு கொடுத்தார்...

அதோடு தனது
அருணாச்சலம்
படத்தயாரிப்பாளர்களில்
ஒருவராக இவரையும்
சேர்த்தார்...

ஒரு விபத்தில் தன்
கையை இழந்தார்..
விபத்தில் கைபோனபோது
தலைவர் ரஜினி பண்டரிபாய்
அம்மாவைப் பார்த்து
ஒரு கவர் தருகிறார்...
கவரில் இருப்பதை
மறுக்காமல் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்றும் அன்புக்
கட்டளை இடுகிறார்...

அம்மா கவரைப்
பிரித்துப்பார்த்து அதிர்ச்சி
அடைகிறார்..உள்ள
ரூ.25 லட்சத்துக்கான
காசோலை இருக்கிறது...!!
நெகிழ்ச்சியில் தான்
கண்கலங்கியதாக ஒரு
நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்...
தலைவரின் உதவும்

குணம் உலகறிந்த ஒன்று...!!!!credits rajiniarmy