Wednesday 20 June 2018

WIKIPEDIA FOUNDED 2003 JUNE 20



WIKIPEDIA FOUNDED 2003 JUNE 20







விக்கிமீடியா நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது

விக்கிமீடியா நிறுவனம்ஒரு அமெரிக்க இலாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்படப் பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது.

குறிக்கோள்கள்[தொகு]
விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும்.[5]

திட்டங்கள்[தொகு]

விக்கிமீடியா திட்டங்கள் குடும்ப முத்திரை
பல மொழிகளில் உள்ள பொதுவான கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உடன் இந்த அறக்கட்டளை கூடுதலாக ஒரு அகராதி மற்றும் சொற்களஞ்சியத்தை விக்சனரி என்னும் பெயரில் பல மொழிகளில் நிர்வகிக்கிறது.

ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.

பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாயிருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

விக்கிப்பீடியாவும் விக்கிமீடியா பவுண்டேசனும்[தொகு]
விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 லாரி சாங்கர் முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா விக்கி முறையில் நிர்வாகிக்கப்பட்டது. இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிப்பீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment