MOUNT BATTEN PRABHU ,
LAST GOVERNOR GENERAL OF INDIA
BORN 1900 JUNE 25-1979 AUGUST 27
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900
இந்துக்களை கொலைசெய்ய தூண்டினான் ஜின்னா .ஏராளமானோர் மடிந்தனர் அதன் பின்னரே நேரு ,பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதம் தந்தார் மவுண்ட் பேட்டன் பிரபு எடுத்துச்சொல்லியும் செவிட்டு நாய் ஆனான் ஜின்னா .அதே போல் காஸ்மீர் அரசரையும் எச்சரித்தார் .இந்தியாவிடம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று .சீனா ,பாக்கிஸ்தான் ,இந்தியா என்று மூன்று பக்க ஆபத்தையும் விவரித்தார் .
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பே ட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுந ராகவும் (Governor-General) இருந்தவர்.
மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்க ளை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர்.
குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ரா ய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலை யில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில்,
மவுண்ட்பேட்டன் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் மவுண்ட்பேட்டனாக நடித்துள்ள ஹ்யூ போன்வில் பார்க்க என் தந்தையை போன்று இல்லை. இருப்பினும் அழகாக நடித்துள்ளார்.
தந்தை என் தந்தை அவரது இளமை காலத்தை ரஷ்யாவை சேர்ந்த அவரின் அங்கிள், ஆன்ட்டியுடன் பெரிய பெரிய கட்டிடங்களில் வாழ்ந்தார். அதனால் டெல்லி வீடு அவருக்கு பெரியதாக தெரியவில்லை.
எட்வினா வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் ஜிலியன் ஆண்டர்சன் என் தாய் எட்வினா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். என் தாய் போன்றே நடக்க முயற்சித்துள்ளார்.
நேரு என் தாய் எட்வினாவும், முன்னாள் இந்திய பிரதமர் நேருவும் உயிருக்கு உயிராக காதலித்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே செக்ஸ் இல்லை.
மவுன்ட் பேட்டன் மறைந்த தினம் இன்று. இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவின் பிரிவினைக்கு நேரடி சாட்சியாக அமைந்த ஒரு முக்கியமான ஆளுமை இவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவான காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு உலகப்போர் சமயத்தில் முஸ்லீம் லீக் உதவிகரமாக இருந்தது. அப்பொழுதே தனிநாடு கோரிக்கையை ஜின்னா வைக்க பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் சொன்னார் ஆங்கிலேய கவர்னர். அதற்கு முந்திய தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வென்றிருந்தபடியால் முஸ்லீம் லீகுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அது மறுத்திருந்தது.
ஆங்காங்கே கனன்று கொண்டிருந்த பிளவுகளை பெரிதாக்கும் வேலையை ஜின்னாவும் அவரின் கட்சியும் கச்சிதமாக செய்தன. இதற்கு ஹிந்து மதவாத அமைப்புகளின் செயல்கள் இன்னும் வேகம் தந்தன. இந்தியாவிற்கு விடுதலை தரலாம் என்று தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை என்று காங்கிரஸ் சொல்ல,பிரித்து கொடுத்துவிட்டு போ என்றது முஸ்லீம் லீக்.
எண்ணி ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமானது லீக். முஸ்லீம்கள் தொகுதிகள் பெருவாரியாக 1946 தேர்தலில் வென்றது அக்கட்சி. நேரடி செயல்பாட்டு தினம் என்று அறிவித்தார் ஜின்னா. முதல்வராக இருந்த முஸ்லீம் லீகின் சுஹ்ரவர்தியே கலவரங்களை முன்னின்று நடத்தினார். வங்கம் ரத்தமயமானது. பஞ்சாப்,தற்கால பாகிஸ்தான் என்று வன்முறை தீ பரவ ஆரம்பித்தது. வேவல் பிரபு பைத்தியக்காரர்களின் விடுதி என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார். யாரை அடுத்த வைஸ்ராயாக அனுப்பலாம் என்று யோசித்தார் அட்லி.
பர்மாவில் ஜப்பானுக்கு எதிரான போரில் தலைமை தாங்கிய மவுன்ட்பேட்டனை அழைத்தார். அவர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார். தனிவிமானம்,கூடவே முடிவுகளை அடிக்கடி அரசுக்கு தெரியப்படுத்தும் கட்டாயமின்மை ஆகியவையே அது.அதற்கு ஒப்புக்கொண்டார் அட்லி. இந்தியா வந்த மவுன்ட்பேட்டன் எவ்வளவு முயன்றும் ஜின்னாவை அசைக்க முடியவில்லை.
காந்தி உங்களை முதலில் கொண்டு போய் எளிமையான குடிசையில் விடுதலை கிடைத்ததும் அமர வைக்க வேண்டும் எளிமை முக்கியம் என்று பயமுறுத்தி விட்டுப்போய் இருந்தார். அவரை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது. தன்னின் பிணத்தின் மீது தான் பிரிவினை நடக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருந்தார். நேரு மற்றும் படேல் ஆகியோரிடம் அனுமதி பெற்று விட்டார் மவுன்ட்பேட்டன். அதை காந்தியிடம் சொன்ன பொழுது என் இந்தியா என்னோடு இல்லை,நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி சொன்னார்.
நாட்டை துண்டாடுவது என்று ஆனதும் வேகமாக காரியங்கள் துவங்கின. ஜூன் மூன்று அன்று பிரிவினை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பொழுது இருமாத காலத்துக்குள் விடுதலை என்று அறிவித்தார் இந்த மனிதர். காரணம் அவரிடம் பர்மாவில் ஜப்பானின் படைகள் சரணடைந்த தினத்தன்று விடை பெற்றால் நன்றாக இருக்கும் என்றே இத்திட்டம். இரண்டு மாதத்துக்கும் குறைவான காலத்தில் எல்லாமும் பிரிக்கப்பட்டது. மக்கள்,இடங்கள்,பொருட்கள்,நதிகள் எல்லாமும். ரட்கிளிப் எனும் மனிதர் அமர்த்தப்பட்டார். வேகமாக பிரித்து கொடுங்கள் என்றுவிட்டார் மவுன்ட்பேட்டன்.
மவுண்ட்பேட்டனுக்கு ஜின்னா இன்னம் சில மாதத்தில் இறந்துவிடுவார் என்கிற ரகசியம் அப்பொழுது தெரியாது. அதுமட்டும் தெரிந்து இருந்தால் தான் பிரிவினைக்கே ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்று நள்ளிரவில் சுதந்திரம் நூல் ஆசிரியர்களிடம் பதிவு செய்கிறார். நேருவுக்கும் அவரின் மனைவிக்கும் இருந்த நட்பு தான் அவரை இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது செங்கோட்டையில் கொடியேற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது. அவர் இந்தியாவுக்கு பல்வேறு சமஸ்தானங்கள் கிடைப்பதை உறுதி செய்தார்.
மவுண்ட்பேட்டனின் முக்கியமான தோல்விகள் என்னென்ன என்று பார்த்தால் பிரிவினையின் பொழுது ஆங்கிலேயரை பத்திரமாக காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்த மனிதர் இந்தியர்களை காப்பதில் அந்த அளவுக்கு முனைப்பு காட்டவில்லை என்பதும்,பிரிவினையை திட்டமிட்டு படிப்படியாக நிகழ்த்தாமல் செய்ததும் குறிக்கத்தக்கன. இந்தியாவின் பிரிவினையை தான் பிரிட்டன் விரும்பியது என்பது உண்மை. அதை கச்சிதமாக இவர் செய்து வைத்தார்.. ஜின்னா அப்படி நினைக்கவில்லை. இந்த பிரிவினை தற்காலிகமானது என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டை இன்னொருவருக்கு (ஹைதராபாத் நிஜாமுக்கு ) விற்க மறுக்கிற அளவுக்கு. அவர் ஒரு கட்டத்தில் இந்தியாவின் பகுதி,பாகிஸ்தானின் பகுதி,இரண்டிலும் சேராத பகுதி ஆகிய மூன்றும் இணைந்த யூனியனில் இருக்க இசைந்தார் என்பதை நோக்க வேண்டும்.
மவுண்ட்பேட்டன் இறுதியில் வன்முறையால் உயிர் இழந்தார் என்பது சோகமான முடிவு. அதை நிகழ்த்தியது அவர் நாட்டில் இருந்த பிரிவினைவாதிகள்
No comments:
Post a Comment