Thursday 21 June 2018

SALIYA-ASOKKAMAALA ANCIENT LOVE HISTORY







SALIYA-ASOKKAMAALA ANCIENT LOVE HISTORY



இது “சாலியா – அசோக்கமாலா”
சிங்களத்துக்கு காதல் !

இலங்கையில் நடந்த காதல் கதைகளில், சரித்திர வரலாறு படைத்த கதை “சாலியா – அசோக்கமாலா” காதல் கதை. அக்கதை மக்களின் கவனத்தை ஈர்த்ததுக்கு முக்கிய காரணம், சாலியா சிங்களவர்கள் பெருமையாக பேசும் இலங்கை முழுவதையும் கிமு 161 -137 காலத்தில் ஆண்ட துட்டகைமுனு மன்னனின் மகன் ஆவான்.

அதோடு பட்டத்துக்கு இளவரசன். அசோக்கமாலா கீழ்சாதியான சண்டாளக் குலத்தைச் சேர்நதவள், ஆனால் அழகி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள இனத்திடையே சாதிவேற்றுமை இருந்து வந்ததுக்கு இக்கதை ஒரு ஆதாரம். அனுராதபுரத்தில் இக்காதலர்களை கல்லில் சிலை வடிவில் அமைத்து, அனுராதபுரத்தில் உள்ள “இசுருமுனிய” விகாரவுக்கு போக முன், வாசலில் “இசுருமுனிய காதலர்கள்” என்ற பெயரில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிங்களவர்கள் போற்றும் “மகாவம்சம்” என்ற இலங்கையின் வரலாற்று நூலில் இக்காதல் கதை விபரமாக எழுதப்பட்டுள்ளது

ஒருநாள், இளவரசன் சாலியா, அசோக மரக்காட்டில் உலாவும் போது ஒரு இனிமையான பெண்குரலில் பாட்டோன்றைக் கேட்டான். அந்தக் குரலால் கவரப்பட்ட சலியா, குரல் கேட்ட திசை நோக்கிச் சென்று பாடிய இனிமையான குரல் எவருடையது என்று தேடும் போது, ஒரு அழகிய பெண்ணொருத்தி பாடியபடி, அசோக மலர்களை ஆய்வதைக்கண்டான். அப்பெண்னின் பூர்வீகமறியாது அவள் மேல் கண்டதும் காதல் கொண்டான். அந்தப் பெண் அசோகமாலா தான் சண்டாளச் சாதியைச் சேர்ந்வள் எனத் தன்னை அறிமுகப்படுத்தியும் அசோகமாலா மேல் சாலியாவுக்கு ஏற்பட்ட காதலை மாற்றமுடியவில்லை. முற்பிறவியில் சாலியாவும் அசோகமாலாவும் கணவன் மனைவியாக இருந்தவர்கள். அந்தத் தொடர்பே, அவர்களுக்கிடையே காதல் உருவாகக் காரணம் என்கிறது வரலாறு. அசோகமாலா என்ற பெயர் அசோகமலரைக் குறிக்கும்.

பல நல்ல காரியங்களைச் செய்த சாலியா மீது, தந்தை துட்டகைமுனுவும் சாலியாவின் பாட்டியார் விகாரமகாதேவியும் அன்பைப் பொழிந்தனர். சண்டாலச் சாதியைச் செர்ந்த பெண் ஒருத்தியை காதலித்து திருமணம் செய்தால் கைமுனுவுக்குப் பின் மன்னனாக முடியாது என்று சாலியா அறிந்திருந்தும்; அசோக்கமாலாவை மறக்க அவனால் முடியவில்லை. சாலியா- அசோக்கமாலா காதல், மன்னனின் எதிப்பையும் மீறி, திருமணத்தில் போய் முடிந்தது. அதையறிந்த கைமுனு மன்னன் கோபமுற்று மகனை அரண்மனையைவிட்டு துறத்திவிட்டான். சாலியா- அசோக்கமாலா தம்பதிகள் அரண்மனை வாழ்வில் இருந்து விலகி வாழ்க்கை நடத்தினார்கள்

ஒரு நாள் மூலிகைளால் தன் கைப்பட தாயரிக்கப்பட்ட “ரத்தம்பால” என்ற சுவையான உணவை கைமுனு மன்னனுக்கு அசோகமாலா அனுப்பினாள். ஊணவை அருந்திய மன்னனுக்கு உணுவு வெகுவாக பிடித்துக்கொண்டது. “யார் இந்த உணவைத் தயாரித்தது”? என்று மன்னன் கேட்டபோது, வேறு ஒருவரும் இல்லை மன்னா, உங்கள் மருமகள் அசோக்கமாலாதான் தயாரித்தது என்றனர் உணவை மன்னனுக் கொடுத்தவர்கள். ஒரு கீழ் சாதிப்பெண் தாயாரித்த உணவையா நான் உண்டேன் எனக் கோபமுற்று “ரத்தம்பால” என்ற அசோகமாலா அனுப்பிய உணவைத் மன்னன் தூக்கி எறிந்தான். உணவு சுவர்களில் தெறித்து சிதறியது.

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் கைமுனு மன்னன் காலில் பொக்களம் ஒன்று ஏற்பட்டு புண்ணாக்கியது. அதைக் குணமாற்ற அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. புண் பெரிதாகிக் கொண்டே வந்தது. அதைக் குணப்படுத்த ரத்தம்பால மூலிகை என்பது அவசியம் என்றனர் வைத்தியர்கள். அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு அரண்மனை சமையல்காரனுக்கு, மன்னன் அசோகமாலா அனுபிய ரத்தம்பால உணவை சுவரில் வீசி எறிந்தது நினைவுக்கு வந்தது. உடனே அன் சொல்லி சுவிரில் காயந்திருந்த ரத்தம்பாலவை சுரண்டி எடுத்து வரும்படி வைத்தியர்கள் காவலாளிகளுக்கு கட்டளையிட்டனர்.

அவர்கள் சுவரில் காயந்து போன ரத்தம்பால என்ற உணவைச் சுரண்டி எடுத்து வந்து வைத்தியர்களிடம் கொடுத்தார்கள். இதைபாவித்து மருந்து தாயரித்து மன்னனின் கால் புண்ணுக்கு வைத்தியம் செய்து வெகு விரைவில் குணப்படுத்தினர். எங்கிருந்து தன் கால் புண் சுகமாவதற்கு வேண்டிய ரத்தம்பால மூலிகை கிடத்தது என்று வேலைக்கார்களிடம் கைமுனு மன்னன் வினாவிய போது, அவர்கள் பயத்தொடு, நடந்த முழுவிபரத்தையும் சொன்னார்கள். கதையைக் கேள்விபட்ட துட்டகைமுனு மன்னன் தான் செய்த தவறை உணர்ந்தான்.

அசோகமாலா மேல் அனுதாபப்பட்டான்.; மகன்; சாலியாவையும் மருமகள் அசோகமாலாவையும் மன்னித்து, அரண்மணைக்கு வரவழைத்தான். மருமகளினது அழகையும், அறிவையும் கண்டு மன்னன் பெருமைப்பட்டான். சாலியா- அசோக்கமாலா தம்பதிகளுக்கு முறைப்படி ஆடம்பாரமாக திருமணம் செயது வைத்தான் கைமுனு மன்னன். தமபதிகள் அரண்மனையில் வாழத் தொடங்கினார்கள். ஆனால் சாலியா, தாழந்த பெண்ணைத் திருமணம் செய்த காரணத்தால் மன்னனாக முடியவில்லை. கைமுனுவின் மரணத்துக்குப் பின் அவன் சகோதரன் சாததிஸ்ஸவே மன்னன் ஆனான்

No comments:

Post a Comment