Thursday 21 June 2018

THE FATTY ACTRESS ,REASONS WHY?




THE FATTY ACTRESS ,REASONS WHY?



நடிகைகள் பலூன் சைஸில் இருப்பதன் காரணம் புரிகிறதா?


நடிகைகள் கதை.


சினிமாவில் மட்டுமல்ல, சினிமாத்துறையிலும் ஹீரோக்கள்தான் எப்போதும் ராஜா. தலைமுடிகள் கொட்டி, பற்கள் எல்லாம் விழுந்து, பல் செட் வைத்த பிறகும் கூட..ஐ மீன்..அறுபது அகவையைக் கடந்த பிறகும் கூட அவர்கள் கதாநாயகனாக நடிக்கலாம். அப்படி நடிக்கும்போது தன் பேத்தி வயதுள்ள பதினைந்து வயது பெண்ணை தனக்கு ஜோடியாக்கிக் கொண்டு அவருடன் டூயட் பாடலாம்.
இப்படிப்பட்ட கொடுப்பினை நடிகைகளுக்கு இல்லை. எப்பேற்பட்ட பேரழகியாக இருந்தாலும் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்வரை மட்டுமே கதாநாயகியாய் நீடிக்க முடியும். இடையில் காதல்வயப்பட்டாலோ, கல்யாணம் செய்து கொண்டாலோ மார்க்கெட் அவுட். அம்மணி நடிப்பை மறந்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான். விதிவிலக்குகளாக ஒருசில நடிகைகள் ஐந்தாண்டுகளைக் கடந்தும் கதாநாயகியாய் பவனி வந்திருக்கிறார்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவாக கணக்கிட்டால், நடிகைகளால் அதிக காலம் கதாநாயகியாய் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே நிஜம்.
இந்த உண்மையை நடிகைகளுக்கு கோவில் கட்டும் பாமர ரசிகன் உணர்ந்திருக்கிறானோ இல்லையோ..சம்மந்தப்பட்ட நடிகைகள் தெள்ளத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ள நடிகைகள், மார்க்கெட் இருக்கும்போதே பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். alt
நடிகைகளின் இந்த மனோபாவம் சரியா..தவறா என்று ஆராய்வதைவிட, கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நடிகைகள் படும்பாட்டை எண்ணிப் பார்க்கும்போது அவர்கள் மீது அனுதாபமே பிறக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்...திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் அதாவது கதாநாயகி நடிகைகள் ஒருவகையில் பாவப்பட்டவர்கள்தான். என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்துக் கொடுத்தாலும், வாயைக்கட்டி வயிற்றைக்கட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நினைத்ததை சாப்பிட முடியாது, விரும்பியதை ருசிக்க முடியாது. கொஞ்சம் சதைபோட்டுவிட்டாலும் கதாநாயகி வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்ற பயத்திலேயே பாதிநாட்கள் டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லை என்றால் ஜிம்மிலேயே பழியாய் கிடக்கிறார்கள். உடம்பை ஸ்லிம்மாக வைத்திருந்தால்தான் ரசிகர்களுக்கு...ரசிகர்களை விட்டுத்தள்ளுங்கள்..ஹீரோக்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்குப் பிடித்தமான தோற்றம் இருக்கும்வரையே கதாநாயகியாக நீடிக்க முடியும் என்பதால் இப்படி கால் வயிறு அரை வயிறு சாப்பிட்டு காலம் தள்ளுகிறார்கள்.
எத்தனை காலத்துக்கு இப்படியே வாழ்ந்துவிட முடியும்? ஒரு கட்டத்தில் மார்க்கெட் போய்விடும். அப்புறம்....அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிப்பதைத்தவிர வேறு வழியில்லை. அல்லது தொலைக்காட்சித்தொடரில் நடிப்பது மாற்றுவழி. இந்தக் காலக்கட்டத்தில் நடிகைளின் தோற்றத்தில் பெரிய மாற்றம்! திடீரென குண்டாகக் காட்சியளிக்கிறார்கள். alt
பெண்களின் இயற்கையான உடல் அமைப்பின்படி ஒருகட்டத்தில் சதைபோடுவது சகஜம்தான். ஆனால் சில நடிகைகள் பிந்துகோஷ் சைசில் கூட இருக்கிறார்கள். ஏன் இப்படி? கதாநாயகியாக நடிக்கும் காலக்கட்டத்தில் பெரும்பாலும் பட்டினி கிடக்கும் இவர்கள், மார்க்கெட் போனபிறகு மனம்போனபோக்கில் சாப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள்.
அது மட்டுமல்ல, உடற்பயிற்சி செய்வதையும் கைவிட்டுவிடுகிறார்கள். இவ்விரு காரணங்களினால் நடிகைகளின் தோற்றமே மாறிவிடுகிறது.
நடிகைகள் குண்டாகிவிடுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. நடிக்க வரும்போது ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டு செயற்கையாக பெரிய மனுஷியாக்கப்படும் நடிகைகளுக்கு பின்னால் அதுவே பிரச்சனையாகிறது. உடம்பு பெருக்கத் தொடங்குகிறது. எனவே மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது உடம்பு பெருத்துவிடக்கூடாது என்பதற்காக உடம்பில் உள்ள கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இந்த ஆபரேஷனை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்விரண்டையும் நிறுத்தினால் உடம்பு இரண்டு மடங்காக ஊதிவிடும். அந்தக்காலத்தில்

ஜெயலலிதா,
ஸ்ரீவித்யா,
ஸ்ரீப்ரியா,
அம்பிகா ,
ராதா
சமீபத்திய நடிகைளில் மும்தாஜ்

என இந்த ஆபரேஷன் செய்து கொண்ட நடிகைகளின் பட்டியலை சொல்லிக் கொண்டேபோகலாம். பல நடிகைகள் பலூன் சைஸில் இருப்பதன் காரணம் புரிகிறதா?

No comments:

Post a Comment