THE FATTY ACTRESS ,REASONS WHY?
THE FATTY ACTRESS ,REASONS WHY? நடிகைகள் பலூன் சைஸில் இருப்பதன் காரணம் புரிகிறதா? நடிகைகள் கதை. சினிமாவில் மட்டுமல்ல, சினிமாத்துறையிலும் ஹீரோக்கள்தான் எப்போதும் ராஜா. தலைமுடிகள் கொட்டி, பற்கள் எல்லாம் விழுந்து, பல் செட் வைத்த பிறகும் கூட..ஐ மீன்..அறுபது அகவையைக் கடந்த பிறகும் கூட அவர்கள் கதாநாயகனாக நடிக்கலாம். அப்படி நடிக்கும்போது தன் பேத்தி வயதுள்ள பதினைந்து வயது பெண்ணை தனக்கு ஜோடியாக்கிக் கொண்டு அவருடன் டூயட் பாடலாம். இப்படிப்பட்ட கொடுப்பினை நடிகைகளுக்கு இல்லை. எப்பேற்பட்ட பேரழகியாக இருந்தாலும் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்வரை மட்டுமே கதாநாயகியாய் நீடிக்க முடியும். இடையில் காதல்வயப்பட்டாலோ, கல்யாணம் செய்து கொண்டாலோ மார்க்கெட் அவுட். அம்மணி நடிப்பை மறந்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான். விதிவிலக்குகளாக ஒருசில நடிகைகள் ஐந்தாண்டுகளைக் கடந்தும் கதாநாயகியாய் பவனி வந்திருக்கிறார்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவாக கணக்கிட்டால், நடிகைகளால் அதிக காலம் கதாநாயகியாய் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே நிஜம். இந்த உண்மையை நடிகைகளுக்கு கோவில் கட்டும் பாமர ரசிகன் உணர்ந்திருக்கிறா...