Showing posts with label LAL. Show all posts
Showing posts with label LAL. Show all posts

Sunday, 8 November 2020

LAL KRISHNA ADVANI , BJP CHIEF BORN 1927 NOVEMBER 8

 

LAL KRISHNA ADVANI ,

BJP CHIEF BORN 1927 NOVEMBER 8




.லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.


இளமைக் காலம்


சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.


அரசியல்

அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.[1] கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.[2] இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.[3] ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்


இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.


இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.[4]



பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.


சுயசரிதை

எனது நாடு எனது வாழ்க்கை (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று அப்துல்கலாம் இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.


ராதயாத்திரைகள்

மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.[5]


ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.[6]

ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.[7]

ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.[8]

பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாக்குமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.[9]

பாரத சுரக்‌ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கும்நடத்தப்பட்ட யாத்திரை.[10]

ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.[11]

Wednesday, 2 October 2019

TRUTH REGARDING LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS


TRUTH REGARDING 
LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS



இந்தியாவை வடிவமைத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்...!





அக்டோபர் 2 ஆம் தேதியை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூறும் பொருட்டு காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாள் ஆகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். 

இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். 

 தகவல் 1 

லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது பட்டமாகும். 

தகவல் 2 

சாஸ்திரியின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார். 


தகவல் 3 

பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம் அவரின் குடும்ப வறுமை ஆகும். 

தகவல் 4 

உத்திர பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்குப் பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

தகவல் 5 

திருமணத்தின் போது, சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும் ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார். 

 தகவல் 6 

ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரிகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும், குர்தாவும் தான் அணிவார். 

தகவல் 7 


சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுவந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்தை குறைத்து, சில ஏழைகளுக்கு ரூ .10 கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார். 

தகவல் 8 

சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யு.எஸ்.எஸ்.ஆரின் தாஷ்கண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார், ஆனால் அவரது மரணம் இப்போதும் மர்மமானதாகவே கருதப்படுகிறது. 

Wednesday, 10 January 2018

LAL BAHADUR SHASTRI , SECOND PRIME MINISTER OF INDIA DIED AT TASHKENT ON JANUARY 11,1966




LAL BAHADUR SHASTRI ,
SECOND PRIME MINISTER  OF INDIA
DIED AT TASHKENT ON JANUARY 11,1966





லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்
வரலாறு[மூலத்தைத் தொகு]

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் [2]..

லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் [4]. நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.[5]

மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [6]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [7]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[8]. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.

1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் [9]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் [10]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார்[10].

1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் [11]. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் [12]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[12]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[13]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்[9].

அமைச்சராக அரசில்[மூலத்தைத் தொகு]
இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [14].

1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.

1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [15]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3]. அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.[16]

1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் [17].


இலக்கிய ஆர்வம்[மூலத்தைத் தொகு]
லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.[18]
பிரதமராக[மூலத்தைத் தொகு]
ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.

மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[17]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.

பாகிஸ்தான் போர்[மூலத்தைத் தொகு]
இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [19].

நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்...
ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[20]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.


இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [21]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.

மரணம்[மூலத்தைத் தொகு]

போர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.

அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.[22]

ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார்.

சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள்.

எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.

கல்லறை[மூலத்தைத் தொகு]
காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. [1

Saturday, 2 December 2017

LAL ,VILLAIN ACTOR BORN 1958 DECEMBER 2



LAL ,VILLAIN ACTOR 
BORN 1958 DECEMBER 2



M. P. Michael (born 2 December 1958), better known by his stage name Lal, is an Indian film director, actor, script writer, producer, and film distributor widely known for his work in Malayalam cinema.
Early career[edit source]
He started his career as a mimicry artist in Kalabhavan,[1] along with his childhood friend Siddique, who would later team up as Siddique-Lal to make many films. Lal and Siddique joined as assistant directors to Fazil in 1984.[2]
Actor[edit source]
After that, both decided to part ways as a director pair and Lal turned producer with the Siddique-directed Mammootty-starrer Hitler.[2] Lal debuted in acting with a villain role as Paniyan in Suresh Gopi-starrer Kaliyattam, directed by Jayaraj. Kaliyattam was a new take on Othello, where Lal played Paniyan, the character standing for Iago.He run a flim postproduction company name as Lal Media Arts, Kochi.

Awards[edit source]
National Film Awards – Special Mention – Ozhimuri (2012)[3]
Filmfare Award South for Best Actor-Malyalam - Thalappavu







Filmography[edit source]

Actor[edit source]

Malayalam
YearFilmRole
1994Manathe KottaramGuest at the wedding
1997KaliyattamPaniyan/Iago
1998Punjabi HouseSikkandar Singh
DayaKombanana
KanmadamJohny
OrmacheppuJeevan
1999FriendsMan at the Park
Chandranudikkunna DikhilParthan
JananayakanMisra
2000MazhaChandran
Arayannangalude VeeduSukumaran
Nakshathragal ParayathirunnathuGowrishankar
ThenkasipattanamDasappan
2001Ee Nadu EnnalevarePlappalli Sreedharan
One Man ShowHari Narayanan
Randam BhavamMohammad Ibrahim
UnnathangalilShiva
2002Ente Hridayathinte UdamaPavitran
KannakiManikyan
KalyanaramanThekkedathu Achuthankutty
Krishna GopalakrishnaSwamiji
2003Pulival KalyanamKarunan
AnyarRaghavan
Sinkari BolonaDeva Sharma
UtharaAmbi
2004Ee SnehatheerathuChinnappa Gounder
Chathikkatha ChanthuFilm director Ravikumar
BlackDevin Carlos Padaveedan
2005ChanthupottuDivakaran
Thommanum MakkalumSathyan
Banglavil OuthaOutha
2006The DonKasim Baba
Pothan Vava
OruvanBharathan
2007Rock N RollIssac
Before the RainsRajat
TimeDr. Srinivasa Iyengar
Panthaya KozhiRaghavan
2008ThalappavuS. Raveendran Pillai
Twenty:20Radhakrishnan
PachamarathanalilMohammed Ali
AayudhamSwami Antony Williams
2009Thirunakkara Perumal
2010AnwarBabu Sait
AagathanMajor George Joseph
April FoolDr. Mohana Chandran
PenpattanamInspector Antony
Best ActorVandippetta Shaji
ShikkarCameo in a song
Kandahar
2011PayyansJohn Varghese
Salt N' PepperKalathipparampil Kalidasan
Bombay March 12
Doctor LoveCameo
Vellaripravinte ChangathiAs Himself
2012Father's Day
UnnamSunny
CobraKari (Karimoorkhan)
OzhimuriThanupillai & Sivanpillai
Scene Onnu Nammude VeeduOttappalam Unni
ChettayeesJohn
Little Master
Husbands in GoaSunny
2013Maad DadPalachottil Geevargees Kuriyakose Easo
ShutterRasheed
Isaac Newton S/O PhiliposeIsaac Newton
Kaattum MazhayumHajiyar
Abhiyum NjaanumNandan Menon
AyaalGurudasan
Honey BeeHC Michael
BuddyMichael Dominic Savio
SringaravelanYesudas
Zachariayude GarbhinikalZacharia
Idukki GoldBehnnan
VishudhanMathew Pokkiriyachan
10:30 am Local CallNimmy's father
KadhaveeduMajor Frederick Mukundan
2014Happy JourneyGopikrishnan
God's Own CountryMohammad
Iyobinte PustakamIyob
Hi I'm TonyTony Kurishingal
Nagaravaridhi Naduvil Njan
2016Swargathekkal Sundaram
32aam adhyayam 23aam vaakyamRavi Uncle/R.K. Varma
King LiarAnand Varma
Puli MuruganBalaraman
DumXavier
Kappiri ThuruthuKadalakka Ustad
2017FukriRamzan Ali Fukri
Honey Bee 2 : CelebrationsMichael
Oru Cinemakkaaran
ChunkzzVarkichan
Honey Bee 2.5As Himself
Oru Visheshapetta BiriyanikissaAbu Musaliyar Mowlavi
Njandukalude Nattil OridavelaK C Chacko
Tamil
Telugu
Hindi

Producer[edit source]

Distributed films[edit source]

Writer[edit source]

Director[edit source]

Second Unit Director or Assistant Director[edit source]