Posts

Showing posts with the label - காதல் இன்று

சிறுகதை - காதல் இன்று ! - ரூ. 1500 சன்மானம் - நாதன்

Image
சிறுகதை - காதல் இன்று ! -  ரூ. 1500 சன்மானம் - நாதன் எதிர்பாராத மனிதர்களை, எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பது தான், வாழ்க்கை என்று சொன்னால் தவறில்லை. ஏனென்றால், குவைத் திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த எமிரேட்ஸ் விமானத்தின் தொடர் சென்னை விமானத்தைப் பிடிக்க, மூச்சைக் கையில் பிடித்து, கிட்டத்தட்ட இரண்டு கி.மீ., உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தாழ்வாரங் களையும், பாதுகாப்பு சோதனைகளையும் கடந்து, 122வது வாசல் எது என்று பார்த்தபடி வந்து சேர்ந்த போது, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கடந்துவிட்டன. புன்னகை மாறாத முகத்துடன் என் போர்டிங் பாஸை கிழித்துக் கொடுத்து, "ஹாப்பி ஜர்னி' என்று வாழ்த்திய பர்சரைத் தாண்டி காத்திருந்த மகத்தான கூட்டத்தினுள் நுழைந்து, இன்னும் திறக்காத நுழைவாசலை நோக்கி மெதுவாக நடந்த போது தான், அவள் கண்ணில் பட்டாள். நேருக்கு நேர் எங்கள் பார்வைகள் சந்தித்துக் கொண்டன. அவள்... அனுபமா... பதினைந்து ஆண்டுகள், "ப்ளாஷ் பாக்'கில் திரைப்படங்களில் செல்வது போல் போனால், ஆமாம்... நீங்கள் ஊகித்திருப்பீர்கள்... என் காதலி!...