HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13
HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13 திருச்சபை வரலாற்றில் நாம் காணும் புனிதர்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குபவர் புனித அந்தோனியார். அதற்குக் காரணம் அவர் புரிந்த கோடி அற்புதங்கள் மட்டுமல்ல ஒரு சிறந்த மறை போதகராகவும் மறை வல்லுனராகவும் அவர் விளங்குவதேயாகும். போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்த இவரை பாதுவா நகரின் புனிதர் என்றுதான் அழைக்கின்றோம். 1195 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி அன்னைமரியின் விண்ணேற்பு தினத்தன்று புனித அந்தோனியார் பிறந்தார். அங்கிருந்த பேராலயத்தில் பேர்டினன்ட் எனும் பெயர் சூட்டி திருமுழுக்கு அளிக்கப்பட்டது. இன்றைய பாதுவா: இத்தாலியின் வடகிழக்கு மாநகரமான பாதுவா வெனிசியா என்றழைக்கப்படும் பிராந்தியத்தின் முக்கியமானதொரு நகரமாகும். புக்சிகிக்லியோன் நதியோரத்தில் பிரபல வர்த்தக நகரமாகிய வெனிசிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. இதன் தெருக்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கட்டிடங்கள் காணப்பட்டாலும் அவை சீராக அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் தளமட்டத்தில் தெருவோரமாய் பெரும் வி...