Posts

Showing posts with the label கவிதைகள்

பூரணியின் கவிதைகள்

Image
பூரணியின் கவிதைகள்  கவிதைகள் (எழுதிய காலம் – 1930-45) நலங்குப்பாடல்  இது தருணம் வருவீரே நாதா என்னரும் நேசரே பொன்னெனும் மாலை தன்னிலே நலங்கிடவே (இ) மாலையில் மேற்கே மறைந்திடு ரவியுடன் நீல நிறமுடைய வானில் கோலமுடைய பக்ஷி ஜாலங்கள் பறந்து கூட்டினின் அடையுது பாரீர் (இ) பசிய புல்வெளியில் பசுக்களும் மேய்ந்து பசி ஒழித்து கன்றை நினைந்து விசையுடன் வீட்டை நோக்கியே வந்திடும் வேளையிதே வருவீரே (இ) பூஜைக்குகந்த நல்ல பூ பழம் தேங்காய் பூவையர் கரமதில் ஏந்தி ஆலயம் செல்லும் அற்புத வேளையில் ஆனந்த நலங்கிடுவோமே (இ) *** நாகரிக ஓடம்  கணபதியே கலைமகளே இந்தக் கப்பல் செல்ல அருள் புரிவீர்.  கடுகியே முன் காலமதில் பெண்கள் உடை நகையும் இக்கால மடமயிலார் புடவையுடன் நகை விரைந்துரைக்க வரம் தருவாய். முடுகு சுட்டி பட்டம் ஜடை சிங்காரம் போச்சு இஷ்டமுடன் தலையிலே சிலைடு ரிப்பன் ஆச்சு புஷ்பங்கள் தலையிலே தைப்பதும் போச்சு பிச்சோடா மேல் வளைத்துப் பூ வைக்கலாச்சு கம்மலுடன் வாளிகளும் குண்டலமும் போச்சு கமலங்களால் செய்த டோலக்குமாச்ச...