Showing posts with label April 22. Show all posts
Showing posts with label April 22. Show all posts

Wednesday, 22 April 2020

ISABELLA I ,QUEEN OF SPAIN BORN 1451 APRIL 22 - 1504 NOVEMBER 26



ISABELLA I ,QUEEN OF SPAIN 
BORN 1451 APRIL 22 - 1504 NOVEMBER 26




.முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்
இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.


மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்
கொலம்பஸ்

கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார். (கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும்)

ஆணுக்குப் பெண் நிகர்
தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள்
ஸ்பெயினை ஒருங்கிணைத்தது


கொலம்பசை ஆதரித்தது

அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது

புனிதர் பட்டத்திற்கான பாதையில்
இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.

சிறப்பிக்கப்படல்

அரசி இசபெல்லாவும் கொலம்பசும்
1893 இல் வெளியிடப்பட்டது

அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.

அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். அவர் செய்த முக்கிய முடிவுகள் ஸ்பெயினையும் லத்தீன் அமெரிக்காவையும் பல நூற்றாண்டுகளாகப் பாதித்தன. அவை இன்று பல கோடி மக்களையும், மறைமுகமாகப் பாதித்துள்ளன.

அவர் தமது முக்கியத் திட்டங்களைப் பற்றி தம்மைப் போன்று அறிவாற்றலும் திறமையுமுள்ள தம் கணவரான ரகான் பகுதியைச் சேர்ந்த பெர்டினாண்டைக் கலந்து பேசியே முடிவெடுத்தார். அவர் ஒத்துழைப்புடனே தான் அவற்றைச் செயல்படுத்தினார். ஆகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே இந்நூலில் பார்ப்பது பொருந்தும். ஆயினும், இக்கட்டுரையின் தலைப்பில் இசபெல்லாவின் பெயரே இருக்கின்றது. இருவரின் பெயர்களும் இல்லை. எனவே, பல முக்கிய முடிவுகளில் அரசியின் கருத்துரைகளே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1451 ஆம் ஆண்டில் இன்றைய ஸ்பெயினின் ஒரு பகுதியான காஸ்டீல் அரசில் மாட்ரிகல் நகரில் இசபெல்லா பிறந்தார். அவர் கடுமையான சமயப் பயிற்சி பெற்றார். அதனால் சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக வளர்ந்தார். அவருடைய சகோதரரான நான்காம் ஹென்றி 1454 முதல் காஸ்டீலின் அரசராக இருந்தார். 1474 இல் அவர் இறந்தார். அப்போது ஸ்பெயின் அரசு இல்லை. இன்றைய ஸ்பெயின் நிலப்பரப்பு நான்கு முடியரசுகளாகப் பிரிந்திருந்தது. காஸ்டீல் அவற்றுள் மிகப் பெரியது. ஆரகான் இன்றைய ஸ்பெயின் வட கிழக்குப் பகுதி கிரானடா தெற்கிலும் நவார் வடக்கிலும் இருந்தன.

1460களின் இறுதிப் பகுதிகளில் காஸ்டீல் அரசின் வாரிசாக இருந்தார். ஆகவே பல இளவரசர்கள் அவரை மணம்புரிய விரும்பினர். அவருடைய சகோதரர் நான்காம் ஹென்றி அவர் போர்ச்சுகள்ல மன்னரை மணக்க வேண்டுமென்று விரும்பினார். ஆயினும் 1469இல் இசபெல்லா தம் 18 ஆம் வயதில் ஹென்றி மன்னரின் எதிர்ப்பையும் பாராமல் ஆரகான் அரசின் வாரிசான பெர்டினாண்டை மணந்தார். இசபெல்லா தமக்குப் பணியாததைக் கண்டு சினங்கொண்ட ஹென்றி தம் மகளாகிய ஜூவானாவைத் தமக்கு வாரிசாக நியமித்தார். ஆயினும், 1474இல் ஹென்றி இறந்ததும், இசபெல்லா காஸ்டீல் அரசுக்கு உரிமை கொண்டாடினார். ஜூவானாவின் ஆதரவாளர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஆகவே உள்நாட்டுப் போர் மூண்டது. 1479இல் பிப்ரவரியில் இசபெல்லாவின் படைகள் வெற்றி பெற்றன. அதே ஆண்டில் ஆரகான் அரசர் 2 ஆம் ஜான் இறந்தார். பெர்டினாண்டு ஆரகான் அரசரானார். அதன் பிறகு பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினின் பெரும்பகுதியை ஆண்டனர்.


ஆரகான், காஸ்டீல் ஆகிய அரசுகளும் அவற்றின் அரசாங்க நிறுவனங்களும் தனித்தனியாகவே இருந்த போதிலும், நடைமுறையில் பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஒன்று சேர்ந்தே எல்லாவற்றையும் தீர்மானித்தனர். தம்மாலியன்ற வரையில் ஸ்பெயினின் இணை அரசர்களாகச் செயலாற்றினர். அவர்களுடைய 25 ஆண்டு இணை ஆட்சி முழுவதும் ஒரு வலிமைமிக்க முடியாட்சியின் கீழுள்ள ஒருங்கிணைந்த ஸ்பானிய அரசை நிறுவுவதே அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருந்தது. கிரானடா மட்டும் இன்னம் ஐபீரியத் தீபகற்பத்தில் முஸ்லிம் ஆட்சியிலிருந்தது. அதைப் பிடிப்பதே அவர்களுடைய முதல் திட்டமாக இருந்தது. 1481 இல் போர் தொடங்கியது. ஜனவரி 1492 இல் அது முடிவடைந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் முற்றிலும் வெற்றி பெற்றனர். கிரானடா பிடிபட்டதும், ஸ்பெயின் ஏறக்குறைய இன்றுள்ள எல்லைப் பரப்பைப் பெற்றது. (இசபெல்லா இறந்தபின், 1512இல் பெர்டினாண்டு சிறிய அரசான நவாரைக் கைப்பற்றினார்.)

பெர்டினாண்டும், இசபெல்லாவும் தமது ஆட்சியின் தொடக்கத்திலேயே ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தை நிறுவினர். அம்மன்றம் ஒரு சமய நீதிமன்றமாகும். அது நீதிபதி, சான்று நடுவர், குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர், புலனாயும் காவலர் ஆகியோரின் அதிகாரங்களை ஒருங்கே பெற்றிருந்தது. அது கொடிய தண்டனைகளை வழங்கி, அநீதியான நடைமுறைகளைப் பயன்படுத்தும் மன்றமெனப் பெயர் பெற்றிருந்தது. குற்றம் சாட்டப் பெற்றோர் அதை மறுத்து வாதாட வாய்ப்புப் பெறவில்லை. அவர்களுக்கு எதிரான சான்றுகள் அனைத்தும், அவர்களைக் குற்றம் சாட்டுவோரின் பெயர்கள்கூட அவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. தமக்கு எதிரான குற்றச்சாட்டினை மறுத்தோர் அவற்றை ஏற்கும்வரை கொடிய சித்திரவதைக்குள்ளாயினர். ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தின்முதல் 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி 2000 பேர் கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டனர். அதைப் போல் பன்மடங்கு அதிகமான தொகையினர் குறைந்த தண்டனை பெற்றனர்.

தோமாஸ் தெ தோர்குவமாதா என்னும் சமய வெறியரான ஒரு துறவி ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்திற்கு தலைவராக இருந்தார். அவர் இசபெல்லாவின் தனிச் சமய அறிவுரையாளர். கடும் விசாரணை மன்றம் போப்பாண்டவரின் இசைவு பெற்றிருந்த போதிலும், அது ஸ்பெயின் அரசர்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கிச் செயலாற்றியது. சமய ஏற்பை நிலை நாட்டுவதற்காகவும், அரசர்களுக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவும் கடும் விசாரணை மன்றம் பயன்பட்டது. இங்கிலாந்தில் நிலமானியப் பிரபுக்கள் அரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய ஆற்றல் பெற்றிருந்தனர். ஸ்பானிய பிரபுக்களும் ஒரு காலத்தில் ஆற்றலுள்ளவர்களாக இருந்தனர். ஆயினும், ஸ்பெயின் அரசர்கள் தம்மை எதிர்த்த நிலமானியப் பிரபுக்களை அடக்குவதற்கு கடும் விசாரணை மன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். ஆகவே, அவர்கள் அதிகாரம் குவிந்த, வரையிறந்த ஒரு முடியாட்சியை நிறுவ முடிந்தது. அவர்கள் ஸ்பானிய மதக் குருக்களை கட்டுப்படுத்துவதற்கும் அம்மன்றத்தைப் பயன்படுத்தினர்.

சமயத்தை விட்டுப் பிரிந்தவர்களாகக் கருதப்பட்டவர்களை குறிப்பாக கத்தோலிக்க மறையைத் தழுவி, பிறகு, இரகசியமாகத் தம் முந்திய மதத்தையே பின்பற்றி வந்த யூதரையும், முஸ்லிம்களையும் தண்டிப்பது கடும் விசாரணை மன்றத்தின் முக்கிய இலக்காக இருந்தது.

தொடக்கத்தில் கடும் விசாரணை மன்றம், தம் சமயத்தைப் பின்பற்றி வந்த யூதர்களை தண்டிக்கவில்லை. ஆயினும், 1492இல் சமய வெறியரான தோமாஸ் தெ தோர்குவமாதா வலியுறுத்தியதன் விளைவாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினிலுள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மறையைத் தழுவ வேண்டும், இல்லையெனில் நான்கு மாதங்களுக்குள் தம் சொத்துக்களை விட்டுவிட்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

கிரானடா சரணடைந்த போது, கையொப்பமிடப் பெற்ற உடன்படிக்கையின்படி, ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் தம் சமயத்தைப் பின்பற்றும் உரிமை பெற்றனர். ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் விரைவில் இவ்வொப்பந்தத்தை மீறியது. ஆகவே, முஸ்லிம்கள் புரட்சி செய்தனர். ஆனால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 10ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு அளிக்கப்பட்ட அதே தேர்வுரிமை இப்போது 1502இல் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பெற்றது. அதாவது ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இசபெல்லா சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக இருந்த போதிலும், அவருடைய வைதீகப் பற்று அவர் ஸ்பெயின் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றைக் குறைத்து விடவில்லை. ஸ்பானிய கத்தோலிக்க திருச்சபையில் போப்பாண்டவர் கட்டுப்பாட்டைக் குறைத்து, ஸ்பெயின் முடியரசின் அதிகாரத்தை வளர்ப்பதற்காக இசபெல்லாவும், பெர்டினாண்டும் பெரிதும் முயன்று வெற்றி பெற்றனர். 16 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்புச் சமய சீர்திருத்தம் பரவாவதற்கு இது ஒரு காரணமாகும்.

இசபெல்லாவின் ஆட்சியில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடித்ததுதான். அது 1492 ஆம் ஆண்டில் நடைபெற்றது. காஸ்டீல் அரசு கொலம்பசின் பயணத்திற்கு உதவியது. (அப்பயணத்திற்காக இசபெல்லா தம் நகைகளை அடகு வைத்தார் என்பது உண்மையன்று).

1504 இல் இசபெல்லா இறந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு புதல்வனையும், நான்கு புதல்விகளையும் பெற்றார். 1497இல் ஜூவான் எனும் மகன் இறந்தான். புதல்வியருள் புகழ் பெற்றவர் ஜூவானா. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஜூவானாவை (எழில்மிகு) முதலாம் பிலிப்புக்கு மணமுடித்து வைத்தனர். பிலிப் ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் பேரரசரின் மகன். அவர் பர்கண்டி அரசின் வாரிசாகவும் இருந்தார். இந்த வம்ச வழி திருமணத்தின் பயனாக இசபெல்லாவின் பேரரான ஐந்தாம் சார்லஸ் பேரரசர் ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய பேரரசுகளுள் ஒன்றை மரபுரிமையாகப் பெற்றார். அவர் புனித ரோமானியப் பேரரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அக்கால ஐரோப்பிய அரசர்களுள் செல்வமும், அதிகாரமுமிக்கவராகத் திகழ்ந்தார். ஸ்பெயின், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியின் பெரும்பகுதி, பிரான்சின் சில பகுதிகள், செக்கோஸ்லாவிய, போலந்து, ஹங்கேரி, யூகோஸ்லாவியா இன்னும் மேற்கு நாடுகளில் பெரும்பகுதி ஆகியவற்றை அவர் நேராகவோ, பெயரளவிலோ ஆண்டு வந்தார். ஐந்தாம் சார்லசும் அவருடைய மகன் 2 ஆம் பிலிப்பும் சமயப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள். அவர்கள் வட ஐரோப்பிய எதிர்ப்பு சமய அரசுகளுடன் போர் புரிவதற்குப் புதிய உலகச் செல்வத்தைப் பயன்படுத்தினர். இவ்வாறாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஏற்பாடு செய்த வம்சாவழித் திருமணம் அவர்கள் இறந்த பிறகு ஐரோப்பிய வரலாற்றை ஒரு நூற்றாண்டளவாகப் பாதித்தது.

பெர்டினாண்டு, இசபெல்லா ஆகியோரின் சாதனைகளையும் அவர்களது ஆட்சியின் விளைவுகளையும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். அவர்கள் தம் கூட்டு முயற்சியால் ஒன்றுபட்ட ஸ்பெயின் அரசை உருவாக்கினர். அதே எல்லைகளுடன் ஸ்பெயின் கடந்த 5 நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. அவர்கள் இருவரும் ஸ்பெயினில் அதிகாரம் குவிந்த, வரையிறந்த முடியாட்சியை நிறுவினர். அவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும், வெளியேற்றியதனால், வெளியேறியவர்களுக்கும், ஸ்பெயினுக்கும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. அவர்களின் சமய வெறியும், அவர்கள் நிறுவிய கடும் விசாரணை மன்றமும் ஸ்பெயின் நாட்டின் வருங்கால வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தின.

இறுதியில் குறிப்பிட்ட செய்தியை ஓரளவு விரிவாகப் பார்ப்போம். கடும் விசாரணை மன்றம் ஸ்பெயினின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. 1492 க்குப் பிந்திய நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அறிவுத் துறையிலும், அறிவியல் துறையிலும் மலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஸ்பெயினில் அவ்வாறு நிகழவில்லை. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தால் கடும் விசாரணை மன்றம் கைது செய்யும் எனும் அச்சம் நிலவிய சமூகத்தில் தனிப்பட்ட சிந்தனை தோன்றவில்லை என்பதில் வியப்பில்லை. பிற ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கருத்துகளை வெளியிட ஓரளவு உரிமையளித்தன. ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றம் வைதீக கத்தோலிக்க சமயக் கருத்துகளை மட்டும் அனுமதித்தது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது 1700இல் ஸ்பெயின் அறிவு தேக்க நிலையிலிருந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றத்தை நிறுவி 500 ஆண்டுகளாயினும் அம்மன்றம் இறுதியில் கலைக்கப்பட்டு ஏறக்குறைய 140 ஆண்டுகளாயினும்இன்னும் ஸ்பெயின் அதன் விளைவுகளினின்று மீளவில்லை.

மேலும், இசபெல்லாவின் உதவியுடன் கொலம்பஸ் தம் பயணத்தை நடத்தியதால், தென் மத்திய அமெரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் ஸ்பெயினின் குடியேற்ற நாடகளாயின. இதனால் ஸ்பானியப் பண்பாடும், கடும் விசாரணை மன்றம் உட்பட பல நிறுவனங்களும் உலகில் மேற்குப் பகுதியில் பரவின. ஆகவே, மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, ஸ்பெயின் அறிவு வளர்ச்சியில் பின்தங்கிய நாடாக இருந்ததுபோல், தென் அமெரிக்காவிலுள்ள ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளை விட அறிவுத் துறையில் குறைந்த வளர்ச்சியடைந்திருந்தன என்பதில் வியப்பில்லை.

இப்பட்டியலில் இசபெல்லாவுக்குக எந்த இடம் அளிப்பது என்பதை எண்ணும்போது, அவர் காலத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவர் இல்லையென்றால் நிகழ்ந்திருக்குமா எனப் பார்க்க வேண்டும். சமயப் பகை உணர்வு ஏற்கெனவே ஸ்பெயினில் இருந்து வந்தது என்பது உண்மை. ஏனெனில், 700 ஆண்டுகளாக ஐபீரியத் தீபகற்பத்தை முஸ்லிம்களிடமிருந்து திரும்பக் கைப்பற்றுவதற்கு நீண்ட போராட்டம் நடைபெற்று வந்தது. ஆயினும், 1492இல் அப்போராட்டம் வெற்றியுடன் முடிவடைந்ததும், ஸ்பெயின் தனது பாதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்த பெர்டினாண்டும், இசபெல்லாவும் குறிப்பாக இசபெல்லா, மறுப்பின்றி வைத்த கருத்துகளை ஏற்கும் பாதையைத் தெரிந்து கொண்டனர். இசபெல்லாவின் செல்வாக்கு இல்லையெனில், ஸ்பெயின் ஓரளவு பன்மைக் கருத்துகள் நிலவு சமூகமாக மாறியிருக்கும்.

இசபெல்லாவை, அவரைவிடப் புகழ்மிக்க ஆங்கிலேய அரசியான முதலாம் எலிசபெத்துடன் ஒப்பிடத் தோன்றலாம். எலிசபெத், இசபெல்லாவைப் போல திறமையுடையவர். மேலும், அவர் பண்பு நயமும், சகிப்புத் தன்மையுமுள்ளவராக இருந்ததால், இசபெல்லாவை விட போற்றுதற்குரியவராக இருக்கின்றார். ஆனால் அவர் இசபெல்லாவைப் போல் புதியன புனையும் திறமை பெறவில்லை. இசபெல்லாவின் கடும் விசாரணை மன்றத்தைப் போல அவருடைய செயல்கள் எதுவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இசபெல்லாவின் சில கொள்கைகள் அருவருக்கத்தக்கவையாக இருப்பினும், வரலாற்றில் ஒரு சில அரசர்களே அவரைப் போல பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.




.

MAESTRO OF VIOLIN, LALGUDI JEYARAMAN BORN 1930 SEPTEMBER 17 - 2013 APRIL 22




MAESTRO OF VIOLIN, 
LALGUDI  JEYARAMAN BORN 
 1930 SEPTEMBER 17 - 2013 APRIL 22




பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார்.

வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள்.

அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள்.

கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

70 ஆண்டுகள் இசை வாழ்க்கை

எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது.

லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

Image caption
தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் லால்குடி ஜெயராமன்
தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார்.

தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Saturday, 18 April 2020

SAMYKANNU VINCENT , PIONEER OF TAMIL CINEMA BORN 1883 APRIL 18-1942 APRIL 22



SAMYKANNU VINCENT ,
PIONEER OF TAMIL CINEMA 
BORN 1883 APRIL 18-1942 APRIL 22



சாமிக்கண்ணு வின்சென்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.[1]

வாழ்க்கைக் குறிப்பு
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார்.[3] தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை
புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் கையிலிருந்த பணத்துடன், தான் மனைவியின் நகைகளை விற்று திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “கூடார (டென்ட்) கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்.


டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்
தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலகட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) அதன் பின் அதே சாலையில் எடிசன் எனும் சாமி திரையரங்கு, பேலஸ் எனும் நாஸ் திரையரங்கு (தற்போதும் செயல்பட்டுக்கொண்டியிருக்கிறது), ரெயின்போ திரையரங்கு (தற்போது ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பு) என அவரது திரையரங்கு சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இதே காலகட்டத்தில் இவர் சினிமா ப்ரொஜெக்டர் தயாரிக்கும் அமெரிக்கா நிறுவனம் ஒன்றின் முகவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த முகாமையே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சலனப்படக்காட்சியை எடுத்துச்சென்றது. திரைப்பட தொழில் போக, ஒரு அச்சகமும், மாவு ஆலையும் வைத்திருந்தார். மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரின்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். இவருக்கு உறுதுணையாக இவரின் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் வின்சென்ட் கோவை ரத்தின சபாபதி புரத்தில் லைட் ஹவுஸ் எனும் கென்னடி திரையரங்கை நிறுவினார். ஒரே நேரத்தில் அவர்களிடம்
கிட்டத்தட்ட அறுபது கூடார (டென்ட்) கொட்டைகள் கைவசம் இருந்தன [4] . கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலை, அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். அதேபோல கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 1937-ம் ஆண்டு உருவான சென்ட்ரல் ஸ்டூடியோ-வின் இயக்குனர்களில் இவரும் ஒருவர். கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 'வின்சென்ட்' சாலை இவர் பெயரிலேயே அமைந்துள்ளது. இவர் கோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார்.

தொழில் வளர்ச்சி

படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).

அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவினார். பின்னர் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றையும் நிறுவினார். தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

தயாரிப்பாளராக
ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927 இல் எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார். 1933 இல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளி திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார். புகழ்பெற்ற நடிகை “சினிமா ராணி” டி. பி. ராஜலட்சுமி, வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் (1935).

1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937 இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்ட போது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.

மறைவு
சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார். அவருக்கு பின் அவரது மகன் பால் வின்சென்ட் அவரது நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றார்.

சாமிக்கண்ணுவின் பேத்தி ஷீலாவை மணந்து கொண்டவர் 
நடிகர் சந்திரபாபு 



நீங்கள் தீவிர சினிமா காதலரா ? குறிப்பாக திரையரங்கில் போய் சினிமா பார்ப்பவரா அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சாமிக்கண்ணு வின்செண்ட், தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர். இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே என்றால், நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் தென்னிந்திய திரையரங்குகளின் தந்தை சாமிகண்ணு என்று.

நீங்கள் சினிமாவை நேசிப்பவரா...?  இவரைத்  தெரியுமா உங்களுக்கு?

சாமிகண்ணு தம் வாழ்வை, ரயில்வே வரையாளராக துவங்கியவர். 1905 ஆம் ஆண்டு அப்போது திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றி கொண்டிருந்தார். ஃபிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்பவர் அப்போது ஊர் ஊராக சலனப்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து திருச்சி வந்த அவருக்கு, எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமானது. அவரிடமிருந்து பிரொஜக்டரை ரூபாய் 2250 க்கு வாங்கிறார் (அப்போது அது மிகப்பெரிய தொகை). எடிசன் சினிமாடோகிராப் என்ற பெயரில் தென்னகத்தின் முதல் டூரிங் சினிமாவை திருச்சி சைண்ட் ஜோஃசப் கல்லூரி அருகே ஆரம்பித்து ‘Life of Jesus' என்ற படத்தை திரையிடுகிறார். அதற்கு கிடைத்த வரவேற்பு, அவரை மதுரை, திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம், பம்பாய், லக்னோ, லாகூர், பெஷாவர் என பயணிக்க வைக்கிறது.

தேசங்கள் கடந்து பயணித்துவிட்டு மீண்டும், 1909 ஆம் ஆண்டு சென்னை வருகிறார். சென்னை பாரீஸ் கார்னர் அருகே டெண்ட் கொட்டாய் அமைத்து தொடர்ந்து சலனப்படங்களை திரையிடத் தொடங்குகிறார். அதுமட்டுமல்லாமல், பதே ப்ரொஜெக்டர் என்ற கம்பெனியின் விநியோகிப்பாளர் ஆகிறார். இந்த பதே ப்ரொஜக்டரின் வருகை தான் தென்னிந்திய சினிமா எட்டுக்கால் புலி பாய்ச்சலில் பாய காரணமானது.பின், கோவையில் வெரைட்டி என்னும் திரையரங்கத்தை நிறுவினார். அது மட்டுமல்லாமல் பேலஸ், எடிசன் திரையரங்கத்தையும் ஏற்படுத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கில படங்களை அப்போதே திரையிட்டார்.

வின்செண்ட் என்னும் மாயவித்தைக் காரன்:.
இதை தாண்டி வின்செண்ட் ஒரு மாயாஜாலவித்தைகாரர். சலனப்படங்கள் இடைவெளியில் இவரே மாயாஜாலவித்தைகளை நிகழ்த்தி இருக்கிறார். இதை அப்போது கிறிஸ்துவ தேவாலயங்கள் கண்டித்து இருக்கிறது. வின்செண்ட் சாத்தானிடம் வரம் வாங்கி தான் இது போல் அற்புதங்களை நிகழ்த்துகிறார். இதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தது. வின்செண்ட் நேரடியாக தேவாலயசபையிடமே சென்று, இதில் மந்திரம் ஏதும் இல்லை, அனைத்தும் தந்திரம் என்ற்ய் நிரூபித்து தொடர்ந்து மாயாஜாலவித்தைகளை தொடர்ந்து நிகழ்த்தினார்.

கோவைக்கு மின்சாரம் அளித்தவர்:

நீங்கள் சினிமாவை நேசிப்பவரா...?  இவரைத்  தெரியுமா உங்களுக்கு?
இதன் மூலம் சம்பாதித்து, பெரும் பணம் ஈட்டினாலும் மக்களுக்காக தன் பணத்தை செலவு செய்யத் தயங்காதவர். இப்போது வின்செண்ட் சாலை, என்றழைக்கப்படும் சாலையில் இருந்த அவரது அரண்மனைக்கு ஒப்பான வீட்டைப் பார்த்தாலே அவர் எப்படி வாழ்ந்தவர் என்று தெரியும், கோவைக்கு முதன்முதலில் மின்சாரம் அளித்தவர் சாமிக்கண்ணு வின்செண்ட். முதன்முதலில் தன் திரையரங்கத்திற்காக மின்சாரத்தை தயாரித்தவர், பின் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கினார். அப்போது நம்மை ஆண்டு கொண்டிருட்ந்த ஆங்கில மக்களுக்கும் மின்சாரத்தை வழங்கினார் என்கிறார் வின்செண்டின் பேரம் வில்ஃபிரய் பால். 1933 ஆம் ஆண்டு, கல்கத்தா பயனீர் கம்பெனிவுடம் இணைந்து வள்ளி திருமணம் படத்தை தயாரித்தார் வின்செண்ட்.

கொண்டாட மறந்த தமிழ்ச் சமூகம்:
ஜே. சி. டேனியல் தமிழராக இருந்தாலும் அவரை மலையாளச் சினிமாவின் தந்தை என்று மலையாள கலை உலகம் கொண்டாடுகிறது; அவர் பெயரில் விருது தருகிறது. அவரை பற்றி சினிமாவும் எடுத்துவிட்டது. ஆனால், தென்னிந்தியாவிற்கே சினிமாவை அறிமுகப்படுத்திய தமிழனை, தமிழ் சமூகம் மறந்துவிட்டது. சாலைக்குப் பெயர் வைத்ததோடு சந்தோஷப்பட்டுக்கொண்டது.  கோவையில் வின்செண்ட் துவங்கிய வெரைட்டி ஹால், டிலைட் என்னும் பெயரில் இன்னும் இருக்கிறது. குறைந்தபட்சம் அதில் வின்செண்ட் பெயரில் சினிமா குறித்த அருங்காட்சியகத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.

இது தான் நாம் அந்த சினிமா பிதாமகனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இன்று சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாள்.

[

Wednesday, 11 July 2018

GOPALAKRISHNA GANDHI , GRAND SON OF GANDHI BORN 1946 APRIL 22







GOPALAKRISHNA GANDHI ,
GRAND SON OF GANDHI
BORN 1946 APRIL 22



துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி மகாத்மாவின் பேரன் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், அவரைப் பற்றி அறியாத தகவல்கள் பல உண்டு.

காதல் மற்றும் கட்டுப்பாடு

தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கை யாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் இராசமோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ ஆகிய நான்கு குழந்தைகள் ஆவர்.

கோபாலகிருஷ்ண காந்தி

தேவதாஸ் காந்தி - லட்சுமி தம்பதியின் இளைய மகனான கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர், தந்தை வழியில் மகாத்மா காந்திக்கும் தாய் வழியில் ராஜாஜிக்கும் பேரனாவார். தற்போது 71 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்திக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுநிலை படிப்பு பயின்ற இவர், பின்னர் ஐஏஎஸ் முடித்து 1968 ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார்.

கோபாலகிருஷ்ண காந்தி 1985 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1987 வரை துணை குடியரசுத் தலைவரின் செயலாளராகவும், பின்னர் 1992 வரை குடியரசுத் தலைவரின் இணைச் செயலராகவும் பணிபுரிந்தார்.

தென்னாப்பிரிக்கா, இலங்கை, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கான தூதராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி, 2004 டிசம்பர் 14 ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம்மாநிலத்தின் 22வது ஆளுநராக பொறுப்பு வகித்த அவர் அப்பதவியிலிருந்து 2009ல் ஓய்வு பெற்றார். கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2014 மே மாதம் வரை சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Monday, 23 April 2018

JEYAMOHAN ,WRITER BORN 1962 APRIL 22





JEYAMOHAN ,WRITER 
 BORN 1962 APRIL 22





ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்

வாழ்க்கைக் குறிப்புகள்[1]

ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.



ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார்[2]. இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.

பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார்.

1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார்.



இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார்.
எழுத்துலக அறிமுகம்

அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன்,இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது , 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார்.



1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்[3]. ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.

1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.



நாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார்.

ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக நெடும்பாதையோரம் என்ற பேரில் வெளியாகியுள்ளன.

தமிழில் நூறுநாற்காலிகள் என்ற பெயரில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு நூறு சிம்ஹாசனங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது
அமைப்புகள்

ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. விருதுவிழா இலக்கியக்கூடலாக கோவையில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது

குருநித்யா ஆய்வரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சந்திப்புகளை ஊட்டியில் நிகழ்த்திவருகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள்.


திரைப்படங்கள்

திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்[4]. 2006இல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம்.

    கஸ்தூரிமான் தமிழ் 2005
    நான் கடவுள் தமிழ் 2008
    அங்காடித்தெரு தமிழ் 2010
    நீர்ப்பறவை தமிழ் 2012
    ஒழிமுறி மலையாளம் 2012
    கடல் தமிழ் 2013
    ஆறு மெழுகுவர்த்திகள் தமிழ் 2013
    காஞ்சி மலையாளம் 2013
    காவியத்தலைவன் தமிழ் 2014
    நாக்குபெண்டா நாக்கு டாக்கு மலையாளம் 2014
    ஒன் பை டூ மலையாளம் 2014
    பாபநாசம் தமிழ் 2015
    எந்திரன் 2.0 தமிழ் தயாரிப்பில்

விருதுகள்

    1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.
    1992 ஆம் ஆண்டுக்கான கதா[5]

விருதைப் பெற்றார்.

    1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[6] தேசியவிருது பெற்றுள்ளார்.
    2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்
    2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.
    2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்
    2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி
    2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி
    2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[7]
    2015- இலக்கிய பங்களிப்புகளுக்காக தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை "தன் கருத்தியல் நேர்மை கேள்விக்குறியதாகும் வாய்ப்புள்ளதாக" கூறி பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஜெயமோகன் பதிவு

புதினங்கள்


    ரப்பர்
    விஷ்ணுபுரம்[8] (கவிதா பதிப்பகம்)
    பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்)
    பனிமனிதன் - சிறுவர் புதினம்
    கன்னியாகுமரி[9]

    கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்)
    காடு
    ஏழாம் உலகம்[10][11][12][13]
    அனல்காற்று
    இரவு[14]
    உலோகம்[15]
    கன்னிநிலம்
    வெள்ளையானை[16][17]

WORLD EARTH DAY APRIL 22








WORLD EARTH DAY APRIL 22



நாம் வாழும் பூமி உருவானது ஸோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான். இந்த ஸோலார் நெபுலா என்பது சூபஂபர் நொவா எனஂனும் முதல் பெரு வெடிப்பு பிருந்து வந்தது. சறஂறு விரிவாக பார்த்தால், சூபஂபர் நொவா தான் இந்த யூநிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூபஂபர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது.அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கிலான  நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் ஸோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட் ரஜனஂ நிரம்பிய நெருப்பு பந்து.


ph_earth02

இன்றிலிருந்து சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஸோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். ஸோலார் நேபுளாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்காளாகவும், அதிலிருந்து துணை கொள்களும் உருவகின. இந்த கொள்களில் ஒன்று தான் நம் பூமிஂ. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாய் ஆன சூரியனை சுமார் மணிக்கு 100,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்புவிசை என்பது நமக்கு தெரியூம். இந்த ஓயாத சுழற்சியினால் தான் பூமி உட்பட அனைத்து கொள்களும் கோள வடிவம் பெற்றன. 

பூமியின் மேற்பரப்பு குளிர தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வெப்ப  அழுததத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பண் டை ஆக்ஸைட், நீராவி ஐ பெருமளவில் வெளியேட்றின. இதனுடன் சிறிதளவு, மீதேன் மற்றும் அம்மோனியா உம் வெளியேட்றின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்ஸீஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நிராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. பூமியிலிருந்து நீராவி வெளியேறுவது இன்றும் சில இடங்களில் நிகழ்கிறது.


கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கணிமங்கல் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர் வெப்பமாகவும், கணிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறவுதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பக்டீரியா தோன்றியது. இந்த சயனோ பக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ CO2, நீர், சூரிய ஒளி பொதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்தீரியா முதல் உயிரியாக இந்த உmontage-20090603-browseலகில் உருவானது…


இது பல்கி பெருக தொடகியது.அப்பொது நம் பூமிக்கு சுமார் 700 மில்லியன் ஆண்டுகள். இந்த ஒளிசேர்க்கை செய்யும் ஸயநொ பக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த CO2, மாழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட் ஐ கிரகித்து . ஆக்ஸிஜனை வெளியிட்டன. 



இதனால் கார்பந்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி CO2 படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன. இவ்வாறாக CO2 அளவு குறைந்து போனது. O2 அளவு அதிகரித்தது. இந்த O2 UV கதிர்கள் எனும் புறவுதா கதிர்கள் ஆல் தாக்கப்பட்டு O3 எனும் ஓஜோன் மண்டலம் உருவானது. இந்த ஓஜோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதீர்கலிடம் இருந்து காப்பாற்றி பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நாம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவை பட்டன. இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளாமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மட்ரியது.இது தான் நாம் பூமியின் வரலாறு.

Wednesday, 18 April 2018

SAMYKANNU VINCENT , PIONEER OF TAMIL CINEMA BORN 1883 APRIL 18




SAMYKANNU VINCENT ,
PIONEER OF TAMIL CINEMA
BORN 1883 APRIL 18



சாமிக்கண்ணு வின்சென்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.
வாழ்க்கைக் குறிப்பு

 
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார். [3]தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் கையிலிருந்த பணத்துடன், தான் மனைவியின் நகைகளை விற்று திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “கூடார (டென்ட்) கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்.


டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்
தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) அதன் பின் அதே சாலையில் எடிசன் எனும் சாமி திரையரங்கு, பேலஸ் எனும் நாஸ் திரையரங்கு (தற்போதும் செயல்பட்டுக்கொண்டியிருக்கிறது), ரெயின்போ திரையரங்கு (தற்போது ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பு) என அவரது திரையரங்கு சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இதே காலகட்டத்தில் இவர் சினிமா ப்ரொஜெக்டர் தயாரிக்கும் அமெரிக்கா நிறுவனம் ஒன்றின் முகவராகவும் செயல்பட்டு வந்தார். 

இந்த முகாமையே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சலனப்படக்காட்சியை எடுத்துச்சென்றது. திரைப்பட தொழில் போக, ஒரு அச்சகமும், மாவு ஆலையும் வைத்திருந்தார். மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரின்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். இவருக்கு உறுதுணையாக இவரின் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் வின்சென்ட் கோவை ரத்தின சபாபதி புரத்தில் லைட் ஹவுஸ் எனும் கென்னடி திரையரங்கை நிறுவினார். ஒரே நேரத்தில் அவர்களிடம் கிட்டத்தட்ட அறுபது கூடார (டென்ட்) கொட்டைகள் கைவசம் இருந்தன [4] . கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலை, அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். அதேபோல கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 1937-ம் ஆண்டு உருவான சென்ட்ரல் ஸ்டூடியோ-வின் இயக்குனர்களில் இவரும் ஒருவர். கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 'வின்சென்ட்' சாலை இவர் பெயரிலேயே அமைந்துள்ளது. இவர் கோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார்.

தொழில் வளர்ச்சி
படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).

அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவினார். பின்னர் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றையும் நிறுவினார். தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

தயாரிப்பாளராக
ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927 இல் எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார். 1933 இல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளி திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார். புகழ்பெற்ற நடிகை “சினிமா ராணி” டி. பி. ராஜலட்சுமி, வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் (1935).

1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937 இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்ட போது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.

மறைவு
சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார். அவருக்கு பின் அவரது மகன் பால் வின்சென்ட் அவரது நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றார்.[






1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது. இந்த வரலாற்றை நமது திரையுலகம் மறந்துவிட்ட நிலையில் ’ஒன்பது குழி சம்பத்’ திரைப்படக் குழு சாமிக்கண்ணு பிறந்த தினமான ஏப்ரல் 18 ஆம் நாளை திரையரங்கு தினமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.



''இப்படி ஒருவர் இருந்ததே பலருக்கும் தெரியாத நிலையில், உங்களுக்கு எப்படி இப்படியொரு ஐடியா வந்தது?'' என்று படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசிடம் கேட்டதற்கு:

”கேரள மண்ணில் சினிமாவுக்கான முதல் விதையைத் தூவிய டேனியல் தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்த மாநில மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மலையாள முதல் சினிமாவின் அவருடைய பங்களிப்பையும் வாழ்க்கையையும் அவர் ஞாபகமாக திரைப்படம் எடுத்து கொண்டாடுகிறார்கள்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக, தீர்மானிக்கும் இடத்தில் திரையரங்குகள் இருக்கிறது. அதற்கு காரணமான சாமிக்கண்ணு வின்சென்ட்டை கொண்டாடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அதை நாமே முன்னெடுத்துச் செய்வோம் சின்னதாகத் தொடங்கினோம் திரையுலகைச் சார்ந்த நண்பர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது அவரது பிறந்த நாளான ஏப்ரல் 18 அன்று பெரிய அளவில் விழா எடுத்து கொண்டாட இருக்கிறோம்” என்றார்.



1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கி யிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர். அப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் நகைகளை விற்று கையில் இருந்த பணத்தோடு அக்கருவியை வாங்கினார். அதன் பின்னர் இந்தியாவின் முதல் சலனப் படக் காட்சியாளராக சாமிக்கண்ணு உருவெடுத்தார். சாமிக்கண்ணுவின் தந்தை தம்புசாமி கோவை நகராட்சியில் பணி புரிந்தவர் அவர் வீடு டவுன் ஹால் கோட்டைப் பகுதியில் தான் இருந்தது.
கோவையில் இருந்து சாமிக்கண்ணுவின் நடமாடும் பயாஸ்கோப் மாட்டு வண்டிகள் சாதனங்களுடன் கிளம்பி கிராமம் கிராமமாகச் சென்றன. ஓரளவு பணமும் சேர்ந்தது. அதன்தொழில் நுட்பங்களையும் வணிக வாய்ப்புகளையும் அறிந்து கொண்டார்.

 பணமும் புகழும் சேர்ந்தன. தற்போது வெரைட்டி ஹால் உள்ள இடத்தில் “டிலைட் தியேட்டர்” எனும் நிலையான திரையரங்கைக் கட்டினார். பிறகு அதே சாலையில் எடிசன் எனும் சாமி தியேட்டர் கட்டப்பட்டது. மேலும் சாமிக்கண்ணு சினிமா புரொஜெக்டர் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்டு வந்தார். இந்த ஏஜென்சியே தென் இந்தியாவின் எல்லா நகரம், முக்கிய ஊர்கள் என எல்லா இடங்களுக்கும் சலனப் படக் காட்சியை எடுத்துச் சென்றது. வெரைட்டி ஹால் தியேட்டர் அருகில் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டு மின்சாரம் மூலம் தியேட்டர் இயங்கியது. உபரி மின்சாரத்தில் தியேட்டர் முன்பு சாலை விளக்குகள் போடப்பட்டன. அவரது சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஒரு நேரத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேல் டென்ட் கொட்டகைகள் இவர்கள் வசம் இருந்தன.

அது மட்டுமில்லாம இந்த சாமிக்கண்ணு அச்சகமும், மாவு மில்லும் வைத்திருந்தார். கோவையில் மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே ‘எலக்ட்ரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ்’ என்பதாகும். அது அக்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றிருந்தது. சாதனை மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட் 1942ல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் வின்சென்ட் லைட் ஹவுஸ் (கென்னடி) தியேட்டரைக் கட்டினார். இத்தகைய அரிய செயல் கோவைக்கு மட்டுமின்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இன்றும் உள்ளது.

Friday, 2 February 2018

HANEEFA , PRODUCER ,ACTOR DIED 2010 FEBRUARY 2




HANEEFA , PRODUCER ,ACTOR DIED
2010 FEBRUARY 2




சலீம் அகமது கோஷ் (ஏப்ரல் 22, 1948 - பிப்ரவரி 2, 2010) பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா(மலையாளம்: കൊച്ചിന്‍ ഹനീഫ) என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார். ஹனீபா என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புகழ்பெற்றதால் தன் பெயரை கொச்சி ஹனீபா என மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் ஓர் எதிர்மறை நடிகராக, வில்லனாக, நடித்து வந்தவர்
பின்னாளில் சிறந்த நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் வெற்றி பெற்றார். தமிழ், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓர் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வால்த்சல்யம் (1993) மூலம் அறிமுகமானார். கொச்சி ஹனீபா, மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் பெப்ரவரி 2, 2010 அன்று மாலை 3 மணி அளவில் இறந்தார்.[1][2]

. சிறு வேடங்கள் முதல் பெரிய வேடங்கள் வரையாக தமிழில் 80 படங்களில் நடித்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை அவரது உடல் மொழிதான் அவரது பலம். மலையாளத்தில் கிரீடம் , திலக்கம், பஞ்சாபி ஹவுஸ் என்ற மூன்று படத்திலும் அவரது நகைச்சுவையைக் கண்டு வியந்திருக்கிறேன்.

தமிழில் மகாநதி, சிவாஜி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரை மலையாள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் இழந்துவிட்டது.