Posts

Showing posts with the label JEYARAMAN

KAMBAR JEYARAMAN , SENIOR DRAMA ARTIST BORN 1936 APRIL 27

Image
KAMBAR JEYARAMAN ,  SENIOR DRAMA ARTIST  BORN 1936 APRIL 27 ”கம்பர்” ஜெயராமன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். நீதிபதி, திலகம், தசாவதாரம், கைதி கண்ணாயிரம், பொண்ணு மாப்பிள்ளை, சோப்பு சீப்பு கண்ணாடி, குறத்தி மகன், காவல் தெய்வம், உயர்ந்த மனிதன், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். தமிழ் மேடை நாடகம் மற்றும் திரைப்படம் இரண்டிலும் வெற்றிகரமாக இருந்த பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் கம்பர் ஜெயராமன். இதுவரைக்குமான தன் வாழ்நாளில் அறுபத்தாறு வருடங்களை அவர் இத்துறைகளில் செலவழித்திருக்கிறார். ஆனால், அவரது இருப்பு பிற நடிகர்களைப் போல உரத்து தக்கவைத்துக்கொண்டது அல்ல. அதன் காரணமாகவே அவரது நட்சத்திர பிம்பம் சற்று மங்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. கம்பர் ஜெயராமனின் சற்று அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாற்றல் மற்ற நடிகர்களிடமிருந்து அவரை முற்றிலுமாக வேறுபடுத்திக் காட்டுவது, அவரது இரு...

MAESTRO OF VIOLIN, LALGUDI JEYARAMAN BORN 1930 SEPTEMBER 17 - 2013 APRIL 22

Image
MAESTRO OF VIOLIN,  LALGUDI  JEYARAMAN BORN   1930 SEPTEMBER 17 - 2013 APRIL 22 பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள். கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்...