Showing posts with label RUINS. Show all posts
Showing posts with label RUINS. Show all posts

Saturday, 23 May 2020

HUBLI -ANKOLA TRAIN ROUTE - FOREST RUINS -TRAGEDY




HUBLI -ANKOLA TRAIN ROUTE - 
FOREST RUINS -TRAGEDY



மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைக்கும் ஹூபலி - அங்கோலா ரயில் திட்டம்... தொடரும் காடழிப்பு!
க.சுபகுணம்

ரயில்வே பாதை / Representational Image
ரயில்வே பாதை / Representational Image ( Pixabay )
இந்தத் திட்டம் தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை அழிப்பதோடு நிற்காது. காட்டுயிர்களின் வழித்தடங்களையும் துண்டாக்குகிறது.

164.44 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை, 80 சதவிகிதம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்கின்றது. 2,20,000 மரங்களை அழிக்கவல்ல இந்தத் திட்டத்துக்கு கர்நாடகா மாநில வனவிலங்கு வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியின் மூலம், நூற்றுக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி மேற்கு மலைத்தொடரில் அழியப் போகிறது. மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை அமைச்சகத்தின் ஆய்வில் ஹூபலி முதல் அங்கோலா வரையிலான ரயில் பாதை 80 சதவிகிதம் அடர்ந்த மேற்கு மலைக் காடுகளை ஊடுருவிச் செல்வது உறுதியாகியுள்ளது.

சுமார் 595.64 ஹெக்டேர் வனப்பகுதி இதன்மூலம் அழியப் போகின்றது. அதுமட்டுமன்றி, 184.6 ஹெக்டேர் சதுப்புநிலம் மற்றும் 190 ஹெக்டேர் வறண்ட காடுகளும் அழியப் போகிறது. கர்நாடக மாநில வனவிலங்கு வாரியத்தைச் சேர்ந்த சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்கூட இதற்குரிய அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் குறித்து மங்காபே என்ற சூழலியல் இதழுக்குப் பேட்டியளித்துள்ள கர்நாடக வனத்துறையின் தலைமை வன அதிகாரி சஞ்சய் மோகன், ``வட கர்நாடக மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அதிகமாக வேண்டுமென்கிறார்கள். இந்தத் திட்டம் இரண்டையுமே அவர்களுக்கு அதிகப்படுத்தும்" என்று கூறியுள்ளார். ஒரு மாநில வனத்துறையின் தலைமை அதிகாரி, அந்த மாநில எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஹெக்டேர் காட்டுப்பகுதி அழிவது நன்மை பயக்குமென்று காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பது அவருடைய பணிக்கு விரோதமானது என்று கர்நாடக மாநில சூழலியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.


மேற்குக் கடற்கரையோடு, மாநிலத்தின் மத்திய நிலப்பகுதியை இந்த ரயில்வே பாதை இணைக்கிறது. வடக்குக் கர்நாடகாவுக்கும் ஹைதராபாத் பகுதிக்குமான சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு இது துணைபுரியும் என்று கூறப்படுகிறது. ஆனால், திட்ட வரைவுப்படி பார்த்தால் பெல்லாரி மற்றும் ஹாஸ்பேட் பகுதிகளிலிருக்கும் இரும்பு மற்றும் மாங்கனீசு தாதுக்களை வெட்டியெடுத்து அங்கோலாவுக்கு அருகிலும் மேற்குக் கர்நாடகாவுக்கு அருகிலுள்ள கார்வாருக்கும் புதிதாக வரவுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லவே இந்த ரயில்வே பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay
இந்திய நிலப்பரப்பில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 1.8 லட்சம் சதுர கிலோமீட்டர். ஆனால், நாட்டிலுள்ள மொத்த தாவர வகைகள், மீன், பறவை, பாலூட்டி வகைகளில் 30 சதவிகிதத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. வெப்பமண்டலப் பல்லுயிரிய வளத்தின் ஸ்டோர் ரூமாகச் செயல்படுவதையும் தாண்டி, அது கிழக்கு நோக்கிப் பாயும் 38 நதிகளுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் 27 நதிகளுக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது. கோதாவரி, கிருஷ்ணா, மண்டோவி, காவிரி, ஸுவாரி ஆகிய சில முக்கிய நதிகளுக்கு அதுதான் பிறப்பிடம். சுமார் 24.5 கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலையைத்தான் தங்கள் நீராதாரத்துக்குச் சார்ந்துள்ளனர்.

உலகளவிலான மிக முக்கியப் பல்லுயிரிய வளப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடரும் ஒன்று. இங்கு 2,500 வகையான ஓரிடவாழ் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், நீர்நில வாழ்விகள் உள்ளன. இத்தகைய சூழலியல் பெருமை வாய்ந்த மலைத்தொடரின் ஒரு பகுதி வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டால் அந்தப் பகுதியில் வாழ்கின்ற ஓரிட வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்படும்.


இந்தத் திட்டம் தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை அழிப்பதோடு நிற்காது. காட்டுயிர்களின் வழித்தடங்களையும் துண்டாக்குகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்றும் துறைரீதியிலான மோசடி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கொண்டு பேசிய அவர், ``காடுகள் மழை மேகங்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதுவும் மலை முகடுகளில் நடக்கும் சூழலியல் செயற்பாடுகள் உற்பத்தி செய்யும் மேகங்களால் மட்டுமே சுமார் 4,000 முதல் 6,000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு கிடைக்கிறது. ஆரோக்கியமான தாவர வளத்துக்கும் பசுமைப் போர்வைக்கும் தரமான மண் வளம் அவசியம். அது நிலத்தடியில் நடக்கின்ற நீர் சுழற்சிக்குத் துணைபுரிகின்றது. மலை முகடுகளில் மழை நின்ற பிறகும்கூட, நீரோடைகளாகப் பல மாதங்களுக்கு நீர் வழிந்தோடும். அதன்மூலம் வறண்ட காலங்களில் கூட நீர் ஓரளவுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.

சுமார் 2.5 லட்சம் டன் கரிம வாயு இதற்காக நடக்கப்போகும் காடழிப்பினால் வெளியாகும்.
டி.வி.ராமச்சந்திரா, சூழலியல் ஆய்வாளர், இந்திய அறிவியல் மையம்
இப்படிப்பட்ட நில அமைப்பு, இந்தத் திட்டத்தின் மூலம் சீரழியும். அதனால், மழை பெய்தால் நீர் மொத்தமாகக் கீழ் நிலையிலுள்ள பகுதியை நோக்கி வேகமாகப் பாயும். அது நிலத்தடியில் நீர் தேங்குவதைத் தடுப்பதோடு, நீர் கீழிறங்கும் வேகத்தை அதிகரித்து மண் சரிவையும் ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.

அவர் சொல்வதுபோல் நடந்தால், மேற்குத்தொடர்ச்சி மலை அழிகின்ற வேகம் வேகப்படும். மண் சரிவினால், அனைத்துப் படிமங்களும் கீழ்நிலையிலுள்ள ஏரிகள், நதிகளில் படியும். அதனால், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்புத் திறன் குறையும். இதனால், ஒன்று அதிக மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு ஆபத்துக்கு வழி வகுக்கும். இன்னொன்று, நீர்பிடிப்புத் திறன் இல்லாததால், நீர் தேங்கி நிற்கவோ, நீர் ஓடவோ வழியில்லாமல் போய், கோடைக்காலங்களில் வறட்சி ஏற்படும். இவையிரண்டையுமே 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நாம் அனுபவித்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்துமே, மலைத்தொடரின் நதிகளைச் சார்ந்துள்ள விவசாய நிலங்களில் பயிர் உற்பத்தியைக் குறைக்கும். அது உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.


மலைத்தொடரில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்ட ஒரு வகைத் தவளை இனம், சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தத் தவளையினத்தின் வாழிடம் இந்த ரயில்வே பாதைக்காகத் திட்டமிடப்பட்ட பகுதிக்குள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தத் திட்டத்துக்கு இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அந்தப் புதிய தவளையினம் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அதன் அழிவு இந்த முறை உறுதி செய்யப்படும் என்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

பல்லுயிரிய வளம்
பல்லுயிரிய வளம்
Pixabay
மலைத்தொடரிலுள்ள பல தாவரங்களுக்கு மருத்துவம், உணவு என்று பலவழிகளில் பொருளாதாரப் பயன்கள் உள்ளன. சூழலியல் ரீதியாகப் பல உதவிகளைச் செய்வதோடு அவை பொருளாதாரப் பலன்களையும் நல்குவதால் அப்பகுதி மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர். பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் சூழலியல் ஆய்வாளராகச் செயல்படும் டி.வி.ராமச்சந்திரா, ``மனித நடமாட்டம், ஊடுருவல் ஆகியவை ஏற்கெனவே 1973-ம் ஆண்டில் 98.78 சதவிகிதமாக இருந்த வனப்பரப்பை, 2010-ம் ஆண்டில் 83.14 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது. இந்த நிலப்பகுதி மீண்டும் 168 கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில்வே பாதை அமைக்கத் திசைதிருப்பப்பட்டால், மேலும் 16.23 சதவிகிதம் வனப்பரப்பு அழியும்" என்று பதிவு செய்துள்ளார். அதாவது, கடந்த 37 ஆண்டுகளில் 15.64 சதவிகித வனப்பரப்பு அழிந்தது. ஆனால், இந்த ஒரே திட்டத்தில் 16.23 சதவிகித வனப்பரப்பு அழியும். இது எவ்வளவு ஆபத்தான திட்டம் என்பதற்கு இதைவிடச் சரியான விவரம் அவசியமில்லை.


இந்தத் திட்டம் வரவுள்ள குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டுமே, 29 வகையான பாலூட்டிகள், 256 வகையான பறவைகள், 8 வகை ஊர்வனங்கள், 50 வகையான வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம் அமைந்துள்ளது. இவையனைத்துமே சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பல்லுயிரிய வளப் பட்டியலின்படி, பாதுகாக்கப்படுகின்றன. அதிலும் பெரும்பான்மை உயிரினங்கள், 1972-ம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்கான வேலைகள் தொடங்கினால், வடக்குக் கர்நாடகாவில் ஏற்படும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதோடு சேர்த்துச் சேதங்களும் அதிகரிக்கும். சூழலியல் ஆய்வாளர் டி.வி.ராமச்சந்திராவினுடைய பதிவுகளின்படி, இதற்காக நடக்கப்போகும் காடழிப்பினால் சுமார் 2.5 லட்சம் டன் கரிம வாயு வெளியாகும் என்கிறது.

நாட்டிலுள்ள 50 புலிகள் காப்பகங்களில், திட்டம் வரவுள்ள பகுதியில் இருக்கும் காளி புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டம், அங்கு வாழும் பேருயிர்களின் வாழ்விடத்தைச் சுருக்கிவிடும். அவற்றின் இல்லங்களைக் கபளீகரம் செய்துவிடும். யானைகள் மற்றும் புலிகளின் நடமாட்டத்தைச் சீர்குலைத்து அவற்றின் வழித்தடங்களைத் துண்டாக்கிவிடும். இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் பிரச்னை அதிரிக்கும்.

ஹூபலி-அங்கோலா திட்டத்துக்கான முன்மொழிதலை 1997-98 ரயில்வே பட்ஜெட்டிலேயே ரயில்வே அமைச்சகம் முன்வைத்தது. இதற்கான எதிர்ப்பு அப்போதிருந்தே சூழலியலாளர்களால் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கொரோனா காலகட்டத்தில் கர்நாடக வனவிலங்கு வாரியம் அமைதியாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இது மிகப்பெரிய அச்சுறுத்தலை அந்த வனப்பகுதிக்கும் அங்கு வாழும் உயிரினங்களும் அந்த வனத்தைச் சார்ந்துள்ள எளிய மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக இந்தத் திட்டத்தை ரத்து செய்து, நேரவிருக்கும் பேராபத்தைத் தடுக்க வேண்டும். இல்லையேல், இத்தகைய சூழலியல் அக்கறையற்ற திட்டங்கள் அதிகரிக்க இதுவோர் ஆரம்பமாக அமைந்துவிடும்.

காட்டுயிர் வளம்/ ஆசிய யானை
காட்டுயிர் வளம்/ ஆசிய யானை
Pixabay
ஆபத்தான இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில், தன்னால் எதுவும் செய்யமுடியாமல் போனதால், மாநில வனவிலங்கு வாரியத்திலிருந்து தன்னுடைய உறுப்பினர் பதவியை ஜெயநகர் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா ரெட்டி ராஜினாமா செய்தார். அதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில்,

``நான் வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல. அதேநேரம், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் ஒரு திட்டத்துக்கு என்னால் ஆதரவளிக்க முடியாது. என்னுடைய மனசாட்சி அதற்கு அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.

ஆம், அவருக்கு இருக்கின்ற மனசாட்சி வனவிலங்கு வாரியத்திலிருந்த அனைவருக்கும் இருந்திருந்தால் இப்படியோர் ஆபத்தான திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருக்காது.

Tuesday, 6 November 2018

COBA-MAYAN RUINS IN MEXICO




COBA-MAYAN RUINS IN MEXICO




திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!

1. மனித வாழ்வில் சுற்றுலா மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமாகிவிட்டது. செய்த வேலையையே திரும்ப, திரும்ப ஆண்டுக் கணக்கில் செய்வதால்  சலிப்பும், மனச் சோர்வும் வந்து வாழ்க்கை நடை பிணமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. நமக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெருகுவதற்கு சுற்றுலாக்கள் மிகவும் அவசியம் ஆகும்.

2. கலை, மற்றும், பண்பாடு பரிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா.

3. குடும்பத்தினருடன் சுமார் பதினைந்து முறை சுற்றுலா சென்றிருக்கிறேன்


4. என் பெயர் திலகா சுந்தர்.  நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்.  இரண்டு வருடங்கள் முன்பு,  வட அமெரிக்காவின் தென் கோடியில் இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கு நானும், கணவரும் , மகனும் பயணமானோம். அங்கு ‘கேங்கூன்’ என்று அழைக்கப்படும் பெரு நகரத்தில் அழகிய கரீபியன் கடற்கரை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த உல்லாச விடுதியில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம்.  அது எங்கள் வாழ்வில் மறக்க இயலாத சுற்றுலா.

5. உலக கலை மற்றும் பண்பாடுகளை பார்ப்பதிலும், அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளதால் கேங்கூனுக்கு அருகில் இருந்த  ‘கோபா’ என்னும் இடத்தில் இருந்த மாயன் கோவிலுக்கு சென்று வந்த அனுபவத்தைத்தான் இங்கு எழுதுகிறேன்.

தற்சமயம் கோபா நகரத்தில் ((Coba) மக்கள் வசிக்கவில்லை என்றாலும் 100 BC காலத்தில் மிகப் பெரிய  நகரமாக அது இருந்தது. மாயன் மன்னர்கள் இவ்விடத்தை ஆட்சி செய்தார்கள். அவர்கள் சிறிய கோணலான கண்களையும், பெரிய மூக்குகளையும், தடித்த உதடுகளையும் கொண்டவர்கள்.  இங்கு  சுமார் 50,000 மக்கள் வசித்தார்கள். மாயன் மன்னர்களுக்குத் தங்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, பக்கத்து நாட்டு மன்னர்களிடம் அடிக்கடி போர் புரிய வேண்டிய நிலை இருந்தது. ‘கோபா’ என்பதற்கு ‘காற்றடித்து அலை பிரளும் கடல்’ என்று பொருள். இதன் அருகே இன்றும் அழகிய ஏரிகள் உள்ளன

மாயன் கோவிலைப் பார்ப்பதற்கு  மூன்று சக்கர வண்டியில் நாங்கள் பயணமானோம். வெண்ணிற மணல் பாதையில் சுமார் ஒரு மைலுக்கும் மேல் பயணம் செய்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஓங்கி, உயர்ந்து  அடர்ந்து படர்ந்த கானகம் மிகப் பிரமாண்டமாக எழுந்து நின்று அந்த பிராந்தியத்தையே மூடியிருந்தது. மண்டையை பிளந்த வெயிலின் கொடுமையிலிருந்து,  பெருங்குடையைப்  போல காத்து நின்ற மரங்கள் எங்களுக்கு குளிர்ச்சியும், நிழலையும்  தந்தன. பறவைகளின் இன்னிசை கீதங்கள் அந்த பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து சூழ்நிலையை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தது. மாயன் கோவிலை நெருங்கினோம்! படிகள் மிகப் பிரமாண்டமாகத் தெரிந்தன.


நோஹாச் முல் (Nohoch Mul)  என்று இந்த பிரமிடை அழைக்கிறார்கள். அதற்கு ‘பெரு மலை’ என்று அர்த்தம். யூகாட்டன் பெனிசுலாவில் உள்ள உயரமான பிரமிடு இதுதான். பூமியிலிருந்து வானத்திற்கு இணைப்பு ஏற்படுத்த கட்டப்பட்ட பாலம் போலத் தோன்றியது. இதன் உயரம் 136 அடிகள். கடும் வெயிலில் இவ்வளவு உயரம் ஏறமுடியுமா என்கிற சந்தேகம் வந்தது. இருந்தாலும் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்கிற ஆர்வத்தில் துணிந்து ஏறி விட்டோம். படிகள் கரடு முரடாகவும், மிகவும் குறுகலாகவும் இருந்ததால் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது . பிடித்து ஏறுவதற்கு நடுவில் பெரிய  வடக் கயிறு ஒன்று பிரமாண்டமாகத் தொங்கியது. பாதி தூரம் வந்ததும்,  நம்மால் முடியாது கீழே இறங்கி விடுவோம் என்று தோன்றியது. இருந்தாலும், ஒரு வழியாக முக்கி, முனகி, தம் பிடித்து மேலே வந்து சேர்ந்தோம். உச்சியில் மிகவும் குறுகிய கல் தளமும், சிறிய வாசலுள்ள சிறிய செவ்வக வடிவ கல்  மண்டபம் (கோவில்) இருந்தது. கருவறை மண் மேடிட்டு வெற்றிடமாகக் கிடந்தது. வாசலின் மேல் உள்ள நிலையின் மீது தெய்வம் ஒன்று தலை கீழாக நின்று கொண்டிருந்தது. இரும்பு வேலிக் கதவின் மேலே 'DO NOT ENTER' என்கிற அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருந்தது . அங்கிருந்து சுற்றிலும் பார்க்கையில் 
மயிர்கூச்செறிந்தது. பூமிக்கும் வானத்திற்கும் நடுவே  தொங்கிக் கொண்டு  மரங்களின் மேல் பகுதியையும், சுற்றி இருந்த இடங்களையும் முப்பரிமாணத்தில் பறவைகள் பார்ப்பது போல பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த தளம் மிகவும் குறுகியதாக இருந்ததால் ‘கரணம் தப்பினால் மரணம் “ என்கிறது போல கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டாலும் மேலிருந்து கீழே  உருண்டு விடுவோம் என்கிற பயம் அடிவயிற்றிலிருந்து  எழுந்து உடம்பை நடுங்க வைத்தது. அதோடு மாயன் மன்னர்கள் இந்த இடத்தில் நின்று கொண்டுதான் தங்கள் கடவுளுக்கு  உயிர்ப் பலி ( நரபலி) செய்வார்கள் என்பது புத்தகங்களில்  படித்தது தீடிரென்று நினைவுக்கு வந்தது. உச்சியில் இருக்கும் பலி பீடத்தில்  பலியிடுபவர்களை மல்லாக்க, கீழ் நோக்கி வளைத்து படுக்க வைத்து  அடிநெஞ்சில் (விலா எலும்புகள் முடியும் இடத்தில்) பிறை வடிவில் அறுத்து உள்ளிருக்கும் இதயத்தை பிடுங்கி எடுத்து சாமிக்கு காணிக்கையாக்குவார்கள்.  பிறகு தலையை கொய்து படிகளில் உருண்டோடச் செய்வார்கள். உடலையும் படிகளின் மீது வீசி எறிவார்கள்.


“அப்போகிலிப்டா”   (Apoclypta) என்கிற மெல் கிப்ஸனின்ஆங்கிலப் படத்தில் இந்த காட்சிகள் சிறப்பாக காட்டப் பட்டிருக்கும்.  திகிலும், பிரம்மையும் கலந்த  இனம்புரியாத  உணர்வுகள் எங்களுக்குள்ளே போட்டி போட்டன. போரில் தோற்றுப்போன அரசன்தான் பெரும்பாலும் பலி கொடுக்கப்படுகிறான். மாதம் மும்மாரி மழை பெய்யவும் , பசி, பஞ்சம், வறுமை, பிணி முதலியவை நீங்கி நாடு செழிக்கவும்தான் இந்த பலி கொடுக்கப் படுகிறது!  இறங்கும் போதும் மிகச் சிரமாக இருந்தது என்றாலும், ஏதோ வேறு உலகத்திற்கு போய் வந்த பிரமிப்பு நெடு நேரம் இருந்தது. இன்று வரையும் அப்படியேதான் இருக்கிறது!

இந்த பிரமிடுகளின் முன்பு (நமது ஊர் நடுகல் மாதிரி) ஸ்டீலா (stela) எனப்படும் கற் தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் மன்னர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக பொறிக்கபட்டுள்ளன.  இந்த கோவிலுக்கு தொடர்புடைய சிறிய பிரமிடுகளையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றுள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

இந்த பிரமிடுகளின் முன்பு (நமது ஊர் நடுகல் மாதிரி) ஸ்டீலா (stela) எனப்படும் கற் தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் மன்னர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக பொறிக்கபட்டுள்ளன.  இந்த கோவிலுக்கு தொடர்புடைய சிறிய பிரமிடுகளையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றுள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

(இதைத் தவிர மாயன் மக்கள் பந்து விளையாடும் இடங்களையும் பார்த்தோம்.  இரண்டு நீளமான கல் சுவர்கள் சாய்வாக கட்டப் பட்டிருக்கின்றன . அதில்  கல் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ரப்பர் பந்தை அந்த வளையத்தினுள் குறி பார்த்து எறிந்து விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் தோற்றகின்ற அல்லது  வெற்றி பெறுகின்ற அணித் தலைவனின் தலையைக் கொய்து இறைவனுக்கு பலியிட்டு படைப்பார்கள்! )


6. உலக நாடுகளுக்கெல்லாம் பயணித்து அவர்களின் கலை மற்றும் பண்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கை  தோன்றியுள்ளது. சுற்றுலா சென்று வீடு திரும்பியதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. வாழ்க்கை உயிர்ப்புடன் ஓடுவதைப் போன்ற புத்துணர்ச்சியை உணர முடிகிறது.

7. சுற்றுலாக்களுக்கு திட்டமிடல் சில சமயங்களில் அவசியம். சில சமயங்களில் அவசியமில்லை. திட்டமிட்டு செல்லும் பயணங்களும் இனிமையாக இருக்கின்றன. திட்டமிடாமல் திடீர் என்று கிளம்பும் பயணங்களும் அதைவிடச் சுவையாயிருக்கின்றன.

8. தமிழகக் கற்கோவில்களை வியந்து பார்த்து ரசிப்பதுண்டு. அவற்றின் வரலாறுகள், மன்னர்களின் ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றை எல்லாம் புத்தகங்களில் படித்து வியப்பது உ ண்டு. நம் கலாச்சாரம் போலவே உலகின் பல பகுதிகளிலும் அவர்களுக்கென்றே பிரத்யேகமாக தனிப்பட்ட கலாச்சாரம், கோவில்கள், ஆட்சி முறை  அமைந்திருப்பதை நேரில் பார்க்கும்போது அந்நாட்டையும் அவர்களின் பண்டைய கலாச்சாரங்களையும் மிகவும்  மதிக்கத் தோன்றுகிறது. அவர்களின் ரசனைகள், படைப்பு உருவாக்கம் ஆகியவற்றைப் பார்க்கையில் வள்ளுவர் பெருமானின்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”

என்கிற குறள் நினைவுக்கு வருகிறது. மொழி, மத,இன வேற்றுமைகளைத் துறந்து  எல்லோரும்  ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே என்று எண்ணுவதால் மனதில் அன்பு மிகுதியாகிறது.

கட்டுரையாளர் -  திலகா சுந்தர்

Wednesday, 6 December 2017

HALIFAX EXPLOSION DECEMBER 6,1917 CITY BECAME RUINS



HALIFAX  EXPLOSION DECEMBER 6,1917
CITY BECAME RUINS



The year was 1917 and Halifax, like the rest of the world, was fully embroiled in the First World War. Serving as the assembly and departure point for transatlantic convoys carrying supplies and soldiers to the war effort overseas, the small city was quickly evolving into a world class port and major base of naval operations.










Halifax was a hub of activity. Troops bound for battle swept in and out of the city, labourers flowed to and from work as the war created a significant industrial and residential boom, and children of all ages wandered to their schools for lessons. In a time of war and devastation, Halifax was thriving.

That all changed the morning of December 6, 1917. Approximately six minutes after 9:00 am, a dreadful mis-communication between two ships in the harbour resulted in an Explosion of cataclysmic proportions. 2,000 people were killed and 9,000 more were injured. The city was reduced to ruins and debris.

Considered Halifax's darkest day, the sheer magnitude of the traumatic event left a lasting impression on the city and its residents. The tragedy bred countless stories of courage and hope that in many ways, shaped what Halifax has become.

Recognizing the significance of the Halifax Explosion as part of both the city's history and Nova Scotian history, the Maritime Museum of the Atlantic developed a temporary exhibit in 1987 entitled "A Moment in Time".

Halifax Wrecked Image

Focusing on Halifax before and after the tragedy, the display received such an overwhelming public response that several years later, staff at the Museum took on the major project of creating and opening “Halifax Wrecked”, a permanent exhibit devoted to the Halifax Explosion of 1917.


The award-winning exhibit takes visitors through the time line of the event, establishing what life in the city was like and breaking down the unfortunate circumstances that caused the tragedy. Featuring personal effects and stories of those who both perished and survived, the exhibit explores the Explosion from an anecdotal perspective, giving visitors a sense of the devastation that occurred, but more importantly, a sense of the city’s bravery in the face of adversity.