MEXIO -THRILLS OF COBA AND MAYAN PYRAMID TEMPLES
MEXIO -THRILLS OF COBA AND MAYAN PYRAMID TEMPLES திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்! 1. மனித வாழ்வில் சுற்றுலா மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமாகிவிட்டது. செய்த வேலையையே திரும்ப, திரும்ப ஆண்டுக் கணக்கில் செய்வதால் சலிப்பும், மனச் சோர்வும் வந்து வாழ்க்கை நடை பிணமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. நமக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெருகுவதற்கு சுற்றுலாக்கள் மிகவும் அவசியம் ஆகும். 2. கலை, மற்றும், பண்பாடு பரிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா. 3. குடும்பத்தினருடன் சுமார் பதினைந்து முறை சுற்றுலா சென்றிருக்கிறேன் 4. என் பெயர் திலகா சுந்தர். நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். இரண்டு வருடங்கள் முன்பு, வட அமெரிக்காவின் தென் கோடியில் இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கு நானும், கணவரும் , மகனும் பயணமானோம். அங்கு ‘கேங்கூன்’ என்று அழைக்கப்படும் பெரு நகரத்தில் அழகிய கரீபியன் கடற்கரை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த உல்லாச விடுதியில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம். அது எங்கள் வாழ்வில் மறக்க இயலாத சுற்றுலா. 5. உலக க...