M.R.SANTHANALAKSHMI BORN 1905 JANUARY 1- 1957 JANUARY 1
M.R.SANTHANALAKSHMI BORN 1905 JANUARY 1- 1957 JANUARY 1 M.R.Santhanalakshmi M.R.சந்தான லக்ஷ்மி – தமிழ்ப் படவுலகின் ஆரம்ப கால கதாநாயகிகளுள் ஒருவர். 1937-இல் வெளி வந்த தியாகராஜபாகவதரின் பெரும் வெற்றிச் சித்திரமான சிந்தாமணி திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜோடியாக நடித்தவர்.அடுத்து ‘அம்பிகாபதி’யிலும் எம்.கே.தியாகராஜபாகவதருக்கு இணையாக நடித்தார். 1935-இல் இவர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.இவரது முதல் படம் ‘ராதா கல்யாணம்’. இப்படத்தில் இவர் கர்நாடக சங்கீத வித்வான் எஸ்.ராஜம் என்பவருக்கு இணையாக நடித்தார். எனினும் இப்படம் இவரை வெளிக்காட்டவில்லை. எம்.கே.தியாகராஜபாகவதருக்கு இணையாக நடித்த ‘அம்பிகாபதி’ யே இவருக்குப் புகழைச் சேர்த்தது. இவர் 1944-இல் வெளிவந்த மாபெரும் வெற்றிச்சித்திரமான ‘ஜகதலபிரதாபன்’ படத்தில் இவர் பி.யு.சின்னப்பாவின் தாயார் ராணி விலாஸவதியாக நடித்திருந்தார். 1937-1956 வரையில் நடித்துள்ளார். ஆரவல்லி சூரவல்லி, கன்னிகா, அபிமன்யூ, காஞ்சனா, மனம்போல் மாங்கல்யம், மதுரை வீரன், குலதெய்வம், ஜகதலபிரதாபன், காலம் மாறிப்போச்சு, ஆசை மற்றும் புதையல் படங்கள் ...