SAMBAPATHI DEVI , PROTECTOR OF POOMPUKAR
SAMBAPATHI DEVI , PROTECTOR OF POOMPUKAR பூம்புகாரின் காவல் தெய்வம் சம்பாபதி தேவி முற்காலச் சோழர்களின் தலைநகராக மட்டுமின்றி, துறைமுக நகரமாகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஊர், பூம்புகார். மிக மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு இந்த நகரத்துக்கு உண்டு. பூம்புகார் கடலின் சீற்றத்தால் மறைந்துபோனாலும், இன்றைக்கும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் மூலமாக அதன் சிறப்புகளையும் பெருமைகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அன்றைய பூம்புகாரைக் கடல் கொண்டுவிட்டாலும், கடல் சீற்றத்திலிருந்து தப்பி எஞ்சி இருக்கும் ஒரு பகுதி இன்றைக்கும் உண்டு. அது பூம்புகாரின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படும் சம்பாபதி கோட்டம். தற்போது இந்தப் பகுதி `சாயாவனம்’ என்று அழைக்கப்படுகிறது. பூம்புகாருக்குக் `காவிரிப் பூம்பட்டினம்’ என்ற இன்னொரு பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், இந்தச் சம்பாபதி கோட்டத்தில் அருள்புரியும் பெண் தெய்வமான சம்பாபதிதான். இதை மணிமேகலை காப்பியத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள முடியும். செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர...