Showing posts with label VIJAYAKANTH. Show all posts
Showing posts with label VIJAYAKANTH. Show all posts

Tuesday, 16 March 2021

IMPORTANCE OF VIJAYAKANTH ON THOSE DAYS

 

IMPORTANCE OF VIJAYAKANTH

 ON THOSE DAYS 2009



மத்திய அமைச்சர் ஜவடேகர் பி.ஜே.பி சார்பில் பேச ஃபிளைட் பிடித்து வருகிறார். பொன்னாரும் தமிழிசையும் ஷிப்ட் போட்டு வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். வைகோவும் நேரில் போய் அழைப்புவிடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியே விஜயகாந்த்தின் வரவுக்குக் காத்திருக்கிறது. ‘ஸ்டன்ட் நடிகர் அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்... அவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும்... பழம் கனிந்திருக்கிறது..’ என்றெல்லாம் உருகுகிறார் கருணாநிதி. கூட்டணி முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்துக்கு முதல் ஆளாகக் கிளம்பும் ஜெயலலிதாகூடக் காத்திருக்கிறார். தே.மு.தி.க எடுக்கும் முடிவை பொறுத்தே அ.தி.மு.க கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு. இப்படி தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்குக் கிடைக்காத டிமாண்ட் இன்று விஜயகாந்த் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘தனித்துப் போட்டி’ என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பு தேர்தல் களத்தில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
2005-ம் ஆண்டுதான் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் உதயமானது. அடுத்த சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்டது. அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தனித்துக் களமிறங்கிய விஜயகாந்த், 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளைப் பெற்று 29 இடங்களில் வெற்றி பெற்றார்.
சட்டமன்ற எதிர்க் கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கூட்டணியில் இருந்து பி.ஜே.பி-யும் பா.ம.க-வும் தலா ஓர் இடங்களைப் பிடித்தன.எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஆட்சி அமைக்க முடியாது என்பது விஜயகாந்த்துக்கும் தெரியும். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளையும் அது பாதிக்கும் என்பதுதான் உண்மை. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் மூன்றாவது வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளே முக்கியத்துவம் பெறும்.
2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க எந்த அணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது. வன்னியர்கள் கோட்டையான விருத்தாசலத்தில் ‘தில்’ ஆக நின்றார் விஜயகாந்த். விருத்தாசலத்தில் மட்டுமே கட்சி ஜெயித்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க வாங்கிய வாக்குகள் அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கின. விஜயகாந்த் பெரிய சக்தியாக உருவெடுத்தார். பலரின் வெற்றி தோல்விகளுக்கு தே.மு.தி.க காரணமாக இருந்தது.
128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தே.மு.தி.க நிர்ணயித்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கிக் குவித்தது தே.மு.தி.க. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
2006 தேர்தலில் அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், ஐ.என்.டி.யு.சி கட்சிகள் இடம்பெற்று இருந்தன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் பங்கேற்றன. தே.மு.தி.க-வின் வாக்குகள் இந்த இரண்டு கூட்டணிகளையும் பாதித்தன. அ.தி.மு.க-வை 62 தொகுதிகளிலும், தி.மு.க-வை 23 தொகுதிகளிலும், பா.ம.க-வை 12 தொகுதிகளிலும், ம.தி.மு.க-வை 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகளை 6 தொகுதிகளிலும், சி.பி.எம் கட்சிக்கு 2 தொகுதிகளிலும், ஒரு இடத்தில் ஐ.என்.டி.யு.சி கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் பாதிப்பை உண்டாக்கினார்கள்.
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியையும், வட மாவட்டங்களில் தி.மு.க கூட்டணியையும் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் புரட்டிப் போட்டன. தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள்.
2001-2006 அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய அளவில் அதிருப்திகள் இல்லாத நிலையில் அ.தி.மு.க 61 தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க 96 தொகுதிகளைக் கைப்பற்றியபோதும் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் தயவில்தான் ஆட்சியை நகர்த்தியது. இப்படி மைனாரிட்டி ஆட்சி அமைவதற்கே தே.மு.தி.க-தான் காரணம். தே.மு.தி.க பிரித்த வாக்குகள்தான் அ.தி.மு.க-வை மீண்டும் அரியணை ஏறவிடமால் தடுத்தது. தே.மு.தி.க பிரித்த வாக்குகள் 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தன.
விஜயகாந்த் எப்படி பாதிப்பை உண்டாக்கினார் என்பதையும் அலசுவோம். 2006 சட்டசபைத் தேர்தலின்போது, தொகுதி மறுசீரமைக்கப் படவில்லை. அதனால் அப்போது இருந்த பல தொகுதிகள் இப்போது இல்லை.
ஆயிரம் விளக்கு தொகுதியில், மு.க.ஸ்டாலின் ஆதிராஜாராமை (அ.தி.மு.க.)விட 2,468 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 5,545. அப்போது அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.), நெல்லை தொகுதியில் 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுகள் 4,080. ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் காடுவெட்டி குரு, 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 6 ஆயிரத்து 427.
2006 தேர்தலில் பலரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். போடி தொகுதியில் லட்சுமணன் (தி.மு.க.), 898 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 4,973. தொட்டியம் தொகுதியில் ராஜசேகரன் (காங்கிரஸ்) 53 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 12,445. திருமயத்தில் அப்போது அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் 314 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுக்கள் 7,863. மேட்டுப்பாளையம் தொகுதியில் சின்னராஜ்
(அ.தி.மு.க.) 142 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கே விஜயகாந்த்தின் வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் 10,077. தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் சீமாபஷீரைவிட 410 ஓட்டுகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், தே.மு.தி.க இங்கே வாங்கிய வாக்குகள் 4,781. மைலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. வேட்பாளர் நடிகர் நெப்போலியனை தோற்கடித்தார். ஓட்டு வித்தியாசம் 1,667-தான். தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 7,441. கும்மிடிப்பூண்டியில் விஜயகுமார் (அ.தி.மு.க.), பா.ம.க வேட்பாளர் ஜெயவேலுவைவிட 229 ஓட்டுகளே அதிகம் பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 21,738. மதுரை மத்தி தொகுதியில் சி.பி.எம் நன்மாறன் ம.தி.மு.க பூமிநாதனை 51 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுக்கள் 18,632. சிங்காநல்லூர் தொகுதியில் சின்னசாமி (அ.தி.மு.க.)யை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் செளந்திரராஜன் வெறும் 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 31,268 ஓட்டுகள் வாங்கினார்.
2009 நாடாளுமன்றத் தேர்தல்!
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகளைப் பார்ப்போம். 2006 சட்டசபைத் தேர்தலைப் போலவே 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தே.மு.தி.க பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நின்றபோது தனித்து 40 தொகுதிகளிலும் களமிறங்கியது தே.மு.தி.க. பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து மூன்றாம் இடம்பிடித்தது. மொத்தமாக 31.26 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் 1,32,223, விழுப்புரத்தில் கணபதி 1,27,476, விருதுநகரில் பாண்டியராஜன் 1,25,229 வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளையே கலகலக்க வைத்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், விருதுநகர், ஆரணி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய 9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரி குவித்தது.
வைகோ, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான், பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோரின் வெற்றியைத் தட்டிப்பறித்ததோடு, தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது தே.முதி.க. அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளை வாரிச் சுருட்டியதால் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க மாறியது.
தே.மு.தி.க வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. இதில், அதிகபட்சமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஓர் இடத்திலும், பா.ம.க 2 இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் தி.மு.க வேட்பாளர்கள் 3 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர் 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் இடத்திலும் தோற்றுப்போனார்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டசபை தொகுதி வாரியாகப் பிரித்துக் கணக்கிட்டபோது 234 சட்டசபைத் தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியில்தான் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளை தே.மு.தி.க பெற்றிருந்தது. மிகக் குறைந்த வாக்குகள் வாங்கி கடைசி இடத்தில் அதாவது 234-வது இடத்தில் இருந்த தொகுதி வால்பாறை. அந்தத் தொகுதியில் 4,065 ஓட்டுகளைப் பெற்றது.
அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளும் குறைந்த பட்சமாக 4,065 வாக்குகளையும் பெற்றிருந்தது. 27 தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தே.மு.தி.க வேட்பாளர்கள் பெற்றிருந்தார்கள். 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையில் ஓட்டுகள் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 142. பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 65.
இந்தத் தேர்தலில் என்ன ஆச்சர்யங்களை தே.மு.தி.க. விதைக்கப் போகிறதோ?
2009 தேர்தல் ஹைலைட்ஸ்கள்!
* வாங்கிய வாக்குகள் 31.26 லட்சம்.
* வாக்கு சதவிகிதம் 10.08.
* 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 27.
* 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 142.
* 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 65.
* உளுந்தூர்பேட்டை சட்டசபைத் தொகுதியில் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகள்.
* வால்பாறை சட்டசபைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 4,065 ஓட்டுகள்.
* 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 1,32,126 வாக்குகள்.
*9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.









Saturday, 6 January 2018

MINI BIOGRAPHY OF VIJAYAKANTH



MINI BIOGRAPHY OF VIJAYAKANTH 








விஜயகாந்த், நிஜத்தில் அடுத்தவருக்கு உதவி செய்பவர்,
மனிதநேயமிக்க மனிதர், நல்ல நிர்வாகி
இது அனைத்தும் உண்மைதான்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விசயமுள்ள விஜயகாந்த்...! படித்து பாருங்கள் அசந்து போவீர்கள்...!
நடிகரும், தே.மு.தி.க.தலைவருமான விஜயகாந்தை கோபக்காரர், அரசியல் நகரிகமில்லாதவர், குடிப்பவர் என்றும் பொதுவாக விமர்சிக்கின்றனர். ஆனால் விஜயகாந்த், நிஜத்தில் அடுத்தவருக்கு உதவி செய்பவர், மனிதநேயமிக்க மனிதர், நல்ல நிர்வாகி என்று எத்தனை பேருக்கு தெரியும்...!


சமூக வலை தளங்களிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் விஜயகாந்தின் மற்றொரு முகத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் வாட்ஸ் அப்பில் வலம் வரும் அலசல் இது.
சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகர் விஜயகாந்த் ஆனார். சினிமாவிற்கே உண்டான
சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.



இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி
திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்கள்) தான் ரஜினியும், கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு
முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன்,

ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும்.
அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள்,
சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார். இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே.

இவ்வளவு ஏன்?
கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில், கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும், கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட, அமரனிடமும், கவுண்டமணியிடமும்
பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இப்படி, இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கியபோது, அவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான். இவரின் நிர்வாகத் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட, திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப் பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பை யும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களை யும்மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில், இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது. அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது.

எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்.ஜி.ஆர். போல, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது.

மற்ற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் இவரின் வெளிப்படையான, களங்கமில்லாத பேச்சு ஒரு சிலருக்கு கசப்பாக இருக்கும். இவரின் தேர்தல் வாக்குறுதியான, கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அ.தி.மு.க.வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை, கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24,000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3,000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தே.மு.தி.க. தோற்றது.

இது போல, வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10,000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன
இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களு க்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம்.

இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாடமாட்டேன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர். இவர். இவருக்கு அரசியலுக்கு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாதபோதே மக்களுக்கு பல உதவிகளை செய்து பழக்கப்பட்டவர். தினமும் அன்னதானம், தையல் மிஷின் என்று இவரை பார்த்து மற்ற நடிகர்களும் செய்கிறார்கள். எங்கு
துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும், அளிப்பதும் விஜயகாந்த் மட்டுமே. கார்கில் நிவாரண நிதி, குஜராத் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி, கும்பகோணம் தீ விபத்து என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது (10-09-2014) கூட காஷ்மீர் நிவாரண நிதி அறிவித்து இருக்கி றார். என்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித்தொகை அறிவிக்கும் மற்ற நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால்?..


அந்த கடவுளுக்கே வெளிச்சம்! உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம்  இருக்கிறது? பத்து வருடங்களுக்கு முன் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ரஜினி மட்டும் அல்ல, கமல் 12 லட்சம், விஜயகாந்த 10 லட்சம், சூர்யா, விஜய், சரத் இப்படி அனைவருமே உதவித் தொகை அறிவித்தனர்,

ஆனால், இதுவரை உள்ள விவரங்கள்படி விஜயகாந்த், சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இல்லை கொடுத்து விட்டார்கள் என்றால், தெரிந்தவர்கள் சொல்லவும்.
விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் அவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை.

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்... இதை எல்லோருக்கும் பகிருங்கள்!


விஜயகாந்த் நல்லவர்தான் அதில் சந்தேகம் வேண்டாம் -ஆனால் ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஆள்வதற்கு உரிய தகுதிகள் ஏதும் இல்லாதவர் ( அன்புமணி ராமதாஸ் மாதிரி )

விஜயகாந்த் மதுரையில் நாடக நடிகராகவே இருந்தார் -பெரும்பாலும் 1975 களில் யாரும் காசு கொடுக்க மாட்டார்கள் - இருந்தாலும் விஜயகாந்திற்கு கொஞ்சம் ரசிகர்கள் உண்டு -

காரணம் கொஞ்சம் அசைப்பில் ரஜினி மாதிரி இருப்பார் -எனவே ஏழைகள் மேல் அனுதாபமும் ,உதவி செய்யும் குணமும் 
அப்படியே இன்றும் இருக்கிறது -காசு வந்ததும் ஏழைகளை புறக்கணிப்பவர் கிடையாது இன்றும்

ஆனால் அரசியல் ..எட்டு சுரைக்காய் அல்லவே ! அதற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க சரியான ஆள் யாரும் இல்லை -காரணம் மனைவி லதாவும் ,மைத்துனன் சதீசும் தான் -இவருக்கு விழுந்த ஓட்டுக்கள் யாவும் அவரை நம்பியே !

ஆனால் ஒரு கட்டத்தில் மனைவி லதா மட்டுமே அரும்பாடுபட்டு 
விஜயகாந்தை ஜெயிக்க வைத்தார் என்பதே 100% உண்மை -விருத்தாசலத்தில் எல்லா வீடுகளுக்கும் நடந்தே சென்று வெற்றியை ஈட்டி தந்தார்

விளைவாக திமுக வென்றது -அண்ணா திமுக ஓட்டுகள் இவர் அணிக்கு தாவின - கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் அண்ணா திமுக வெற்றிவாய்ப்பை தடுத்து நிறுத்தியதன் விளைவாக 2011 இல் கூட்டு சேர்ந்தது வெற்றி பெற்று திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது

இதுவரை நன்றாக போய் கொண்டிருந்த வண்டி ,கொஞ்சம் மமதையாக , செருக்காக , போதையாக மாறத்தொடங்கியது -

லதாவும் சதீசும் வைத்ததே சட்டம் என்னும் அளவுக்கு குடியிலே குடி இருந்தார் ஜகாங்கீரைபோல- லதா நூர்ஜஹானைப்போல திறமையாக கட்சியை நடத்தவில்லை -

ஏறக்குறைய எல்லோரும் அவமானப்படுத்தப் பட்டனர் -பலர் வெளியேறினர் -கட்சி கூடாரம் தீப்பற்றி எரிந்தது - எல்லோரோலாலும் மிகவும் நம்பிக்கையுடன் வளர்ந்த கட்சி கவலைகிடமாய் கட்சி யளிக்கிறது இன்று

விஜயகாந்த் நல்லவர்தான் அதில் சந்தேகம் வேண்டாம் -ஆனால் ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஆள்வதற்கு உரிய தகுதிகள் ஏதும் இல்லாதவர் ( அன்புமணி ராமதாஸ் மாதிரி )