Showing posts with label POWER. Show all posts
Showing posts with label POWER. Show all posts

Tuesday, 16 March 2021

IMPORTANCE OF VIJAYAKANTH ON THOSE DAYS

 

IMPORTANCE OF VIJAYAKANTH

 ON THOSE DAYS 2009



மத்திய அமைச்சர் ஜவடேகர் பி.ஜே.பி சார்பில் பேச ஃபிளைட் பிடித்து வருகிறார். பொன்னாரும் தமிழிசையும் ஷிப்ட் போட்டு வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். வைகோவும் நேரில் போய் அழைப்புவிடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியே விஜயகாந்த்தின் வரவுக்குக் காத்திருக்கிறது. ‘ஸ்டன்ட் நடிகர் அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்... அவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும்... பழம் கனிந்திருக்கிறது..’ என்றெல்லாம் உருகுகிறார் கருணாநிதி. கூட்டணி முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்துக்கு முதல் ஆளாகக் கிளம்பும் ஜெயலலிதாகூடக் காத்திருக்கிறார். தே.மு.தி.க எடுக்கும் முடிவை பொறுத்தே அ.தி.மு.க கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு. இப்படி தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்குக் கிடைக்காத டிமாண்ட் இன்று விஜயகாந்த் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘தனித்துப் போட்டி’ என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பு தேர்தல் களத்தில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
2005-ம் ஆண்டுதான் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் உதயமானது. அடுத்த சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்டது. அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தனித்துக் களமிறங்கிய விஜயகாந்த், 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளைப் பெற்று 29 இடங்களில் வெற்றி பெற்றார்.
சட்டமன்ற எதிர்க் கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கூட்டணியில் இருந்து பி.ஜே.பி-யும் பா.ம.க-வும் தலா ஓர் இடங்களைப் பிடித்தன.எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஆட்சி அமைக்க முடியாது என்பது விஜயகாந்த்துக்கும் தெரியும். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளையும் அது பாதிக்கும் என்பதுதான் உண்மை. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் மூன்றாவது வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளே முக்கியத்துவம் பெறும்.
2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க எந்த அணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது. வன்னியர்கள் கோட்டையான விருத்தாசலத்தில் ‘தில்’ ஆக நின்றார் விஜயகாந்த். விருத்தாசலத்தில் மட்டுமே கட்சி ஜெயித்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க வாங்கிய வாக்குகள் அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கின. விஜயகாந்த் பெரிய சக்தியாக உருவெடுத்தார். பலரின் வெற்றி தோல்விகளுக்கு தே.மு.தி.க காரணமாக இருந்தது.
128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தே.மு.தி.க நிர்ணயித்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கிக் குவித்தது தே.மு.தி.க. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
2006 தேர்தலில் அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், ஐ.என்.டி.யு.சி கட்சிகள் இடம்பெற்று இருந்தன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் பங்கேற்றன. தே.மு.தி.க-வின் வாக்குகள் இந்த இரண்டு கூட்டணிகளையும் பாதித்தன. அ.தி.மு.க-வை 62 தொகுதிகளிலும், தி.மு.க-வை 23 தொகுதிகளிலும், பா.ம.க-வை 12 தொகுதிகளிலும், ம.தி.மு.க-வை 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகளை 6 தொகுதிகளிலும், சி.பி.எம் கட்சிக்கு 2 தொகுதிகளிலும், ஒரு இடத்தில் ஐ.என்.டி.யு.சி கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் பாதிப்பை உண்டாக்கினார்கள்.
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியையும், வட மாவட்டங்களில் தி.மு.க கூட்டணியையும் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் புரட்டிப் போட்டன. தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள்.
2001-2006 அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய அளவில் அதிருப்திகள் இல்லாத நிலையில் அ.தி.மு.க 61 தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க 96 தொகுதிகளைக் கைப்பற்றியபோதும் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் தயவில்தான் ஆட்சியை நகர்த்தியது. இப்படி மைனாரிட்டி ஆட்சி அமைவதற்கே தே.மு.தி.க-தான் காரணம். தே.மு.தி.க பிரித்த வாக்குகள்தான் அ.தி.மு.க-வை மீண்டும் அரியணை ஏறவிடமால் தடுத்தது. தே.மு.தி.க பிரித்த வாக்குகள் 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தன.
விஜயகாந்த் எப்படி பாதிப்பை உண்டாக்கினார் என்பதையும் அலசுவோம். 2006 சட்டசபைத் தேர்தலின்போது, தொகுதி மறுசீரமைக்கப் படவில்லை. அதனால் அப்போது இருந்த பல தொகுதிகள் இப்போது இல்லை.
ஆயிரம் விளக்கு தொகுதியில், மு.க.ஸ்டாலின் ஆதிராஜாராமை (அ.தி.மு.க.)விட 2,468 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 5,545. அப்போது அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.), நெல்லை தொகுதியில் 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுகள் 4,080. ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் காடுவெட்டி குரு, 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 6 ஆயிரத்து 427.
2006 தேர்தலில் பலரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். போடி தொகுதியில் லட்சுமணன் (தி.மு.க.), 898 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 4,973. தொட்டியம் தொகுதியில் ராஜசேகரன் (காங்கிரஸ்) 53 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 12,445. திருமயத்தில் அப்போது அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் 314 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுக்கள் 7,863. மேட்டுப்பாளையம் தொகுதியில் சின்னராஜ்
(அ.தி.மு.க.) 142 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கே விஜயகாந்த்தின் வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் 10,077. தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் சீமாபஷீரைவிட 410 ஓட்டுகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், தே.மு.தி.க இங்கே வாங்கிய வாக்குகள் 4,781. மைலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. வேட்பாளர் நடிகர் நெப்போலியனை தோற்கடித்தார். ஓட்டு வித்தியாசம் 1,667-தான். தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 7,441. கும்மிடிப்பூண்டியில் விஜயகுமார் (அ.தி.மு.க.), பா.ம.க வேட்பாளர் ஜெயவேலுவைவிட 229 ஓட்டுகளே அதிகம் பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 21,738. மதுரை மத்தி தொகுதியில் சி.பி.எம் நன்மாறன் ம.தி.மு.க பூமிநாதனை 51 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுக்கள் 18,632. சிங்காநல்லூர் தொகுதியில் சின்னசாமி (அ.தி.மு.க.)யை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் செளந்திரராஜன் வெறும் 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 31,268 ஓட்டுகள் வாங்கினார்.
2009 நாடாளுமன்றத் தேர்தல்!
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகளைப் பார்ப்போம். 2006 சட்டசபைத் தேர்தலைப் போலவே 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தே.மு.தி.க பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நின்றபோது தனித்து 40 தொகுதிகளிலும் களமிறங்கியது தே.மு.தி.க. பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து மூன்றாம் இடம்பிடித்தது. மொத்தமாக 31.26 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் 1,32,223, விழுப்புரத்தில் கணபதி 1,27,476, விருதுநகரில் பாண்டியராஜன் 1,25,229 வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளையே கலகலக்க வைத்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், விருதுநகர், ஆரணி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய 9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரி குவித்தது.
வைகோ, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான், பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோரின் வெற்றியைத் தட்டிப்பறித்ததோடு, தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது தே.முதி.க. அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளை வாரிச் சுருட்டியதால் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க மாறியது.
தே.மு.தி.க வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. இதில், அதிகபட்சமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஓர் இடத்திலும், பா.ம.க 2 இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் தி.மு.க வேட்பாளர்கள் 3 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர் 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் இடத்திலும் தோற்றுப்போனார்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டசபை தொகுதி வாரியாகப் பிரித்துக் கணக்கிட்டபோது 234 சட்டசபைத் தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியில்தான் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளை தே.மு.தி.க பெற்றிருந்தது. மிகக் குறைந்த வாக்குகள் வாங்கி கடைசி இடத்தில் அதாவது 234-வது இடத்தில் இருந்த தொகுதி வால்பாறை. அந்தத் தொகுதியில் 4,065 ஓட்டுகளைப் பெற்றது.
அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளும் குறைந்த பட்சமாக 4,065 வாக்குகளையும் பெற்றிருந்தது. 27 தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தே.மு.தி.க வேட்பாளர்கள் பெற்றிருந்தார்கள். 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையில் ஓட்டுகள் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 142. பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 65.
இந்தத் தேர்தலில் என்ன ஆச்சர்யங்களை தே.மு.தி.க. விதைக்கப் போகிறதோ?
2009 தேர்தல் ஹைலைட்ஸ்கள்!
* வாங்கிய வாக்குகள் 31.26 லட்சம்.
* வாக்கு சதவிகிதம் 10.08.
* 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 27.
* 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 142.
* 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 65.
* உளுந்தூர்பேட்டை சட்டசபைத் தொகுதியில் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகள்.
* வால்பாறை சட்டசபைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 4,065 ஓட்டுகள்.
* 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 1,32,126 வாக்குகள்.
*9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.









Friday, 9 November 2018

FRANCE ,THE EUROBIAN POWER





FRANCE  ,THE EUROPIAN POWER 


During the Iron Age, what is now metropolitan France was inhabited by the Gauls, a Celtic people. Rome annexed the area in 51 BC, holding it until the arrival of Germanic Franks in 476, who formed the Kingdom of France.

Charles IV the Fair died without an heir in 1328.[46] Under the rules of the Salic law the crown of France could not pass to a woman nor could the line of kingship pass through the female line.[46] Accordingly, the crown passed to Philip of Valois, a cousin of Charles, rather than through the female line to Charles' nephew, Edward, who would soon become Edward III of England. During the reign of Philip of Valois, the French monarchy reached the height of its medieval power.[46] Philip's seat on the throne was contested by Edward III of England and in 1337, on the eve of the first wave of the Black Death,[47] England and France went to war in what would become known as the Hundred Years' War.[48]

The exact boundaries changed greatly with time, but French landholdings of the English Kings remained extensive for decades. With charismatic leaders, such as Joan of Arc and La Hire, strong French counterattacks won back English continental territories


HENRY x 111
1574-89

The French Renaissance saw a spectacular cultural development and the first standardisation of the French language, which would become the official language of France and the language of Europe's aristocracy. It also saw a long set of wars, known as the Italian Wars, between France, Spain, and the Holy Roman Empire. Refusing to accept the Spanish-Portuguese claims of supremacy in the New World, King Francis I ordered his privateers to sail against his Spanish rival, King Charles V, who ruled as Holy Roman Emperor from 1519 until 1556. The Emperor's realm extended from Spain to parts of what are now Italy, Austria, Germany, Belgium and the Netherlands. French explorers, such as Jacques Cartier or Samuel de Champlain, claimed lands in the Americas for France, paving the way for the expansion of the First French colonial empire. The rise of Protestantism in Europe led France to a civil war known as the French Wars of Religion, where, in the most notorious incident, thousands of Huguenots were murdered in the St. Bartholomew's Day massacre of 1572.[51] The Wars of Religion were ended by Henry IV's Edict of Nantes, which granted some freedom of religion to the Huguenots.

Under Louis XIII,
 the energetic Cardinal Richelieu promoted the centralisation of the state and reinforced the royal power by disarming domestic power holders in the 1620s.
 He systematically destroyed castles of defiant lords and denounced the use of private violence (dueling, carrying weapons, and maintaining private army)
Louis XIV



The monarchy reached its peak during the 17th century and the reign of Louis XIV. By turning powerful feudal lords into courtiers at the Palace of Versailles, Louis XIV's personal power became unchallenged. Remembered for his numerous wars, he made France the leading European power. France obtained many overseas possessions in the Americas, Africa and Asia. Louis XIV also revoked the Edict of Nantes, forcing thousands of Huguenots into exile.

 Louis XV,

, France lost New France and most of its Indian possessions after its defeat in the Seven Years' War, which ended in 1763. . An unpopular king, Louis XV's weak rule, his ill-advised financial, political and military decisions – as well as the debauchery of his court– discredited the monarchy, which arguably paved the way for the French Revolution 15 years after his death

Louis XVI,

, actively supported the Americans, who were seeking their independence from Great Britain (realised in the Treaty of Paris (1783)). The financial crisis that followed France's involvement in the American Revolutionary War was one of many contributing factors to the French Revolution.  major scientific breakthroughs and inventions, such as the discovery of oxygen (1778) and the first hot air balloon carrying passengers (1783),

In early August 1789, the National Constituent Assembly abolished the privileges of the nobility such as personal serfdom and exclusive hunting rights. Through the Declaration of the Rights of Man and of the Citizen (27 August 1789) France established fundamental rights for men.  Fearing that the king would suppress the newly created National Assembly, insurgents stormed the Bastille on 14 July 1789,In November 1789, the Assembly decided to nationalize and sell all property of the Roman Catholic Church which had been the largest landowner in the country. In July 1790, a Civil Constitution of the Clergy reorganised the French Catholic Church, cancelling the authority of the Church to levy taxes, et cetera.. proclaimed freedom and equal rights for all men, as well as access to public office based on talent rather than birth.
FRANCE OCCUPIED CHINA

In November 1789, the Assembly decided to nationalize and sell all property of the Roman Catholic Church which had been the largest landowner in the country. In July 1790, a Civil Constitution of the Clergy reorganised the French Catholic Church, cancelling the authority of the Church to levy taxes, et cetera. This fueled much discontent in parts of France, which would contribute to the civil war breaking out some years later. While King Louis XVI still enjoyed popularity among the population, his disastrous flight to Varennes (June 1791) seemed to justify rumours he had tied his hopes of political salvation to the prospects of foreign invasion. His credibility was so deeply undermined that the abolition of the monarchy and establishment of a republic became an increasing possibility.

In August 1791, the Emperor of Austria and the King of Prussia in the Declaration of Pillnitz threatened revolutionary France to intervene by force of arms to restore the French absolute monarchy. In September 1791, the National Constituent Assembly forced King Louis XVI to accept the French Constitution of 1791, thus turning the French absolute monarchy into a constitutional monarchy.


On 10 August 1792, an angry crowd threatened the palace of King Louis XVI, who took refuge in the Legislative Assembly.
on 20 September 1792 succeeded the Legislative Assembly and on 21 September abolished the monarchy by proclaiming the French First Republic. Ex-King Louis XVI was convicted of treason and guillotined in January 1793. France had declared war on England and the Dutch Republic in November 1792 and did the same on Spain in March 1793; in the spring of 1793, Austria, Great Britain and the Dutch Republic invaded France; in March,


Napoleon, Emperor of the French, and his Grande Armée built a vast Empire across Europe. His conquests spread the French revolutionary ideals across much of Europe, such as popular sovereignty, legal equality, republicanism, and administrative reorganization while his legal reforms had a major impact worldwide. Nationalism, especially in Germany, emerged in reaction against him.[61]

Napoleon Bonaparte seized control of the Republic in 1799 becoming First Consul and later Emperor of the French Empire (1804–1814; 1815). As a continuation of the wars sparked by the European monarchies against the French Republic, changing sets of European Coalitions declared wars on Napoleon's Empire
 After the catastrophic Russian campaign, and the ensuing uprising of European monarchies against his rule, Napoleon was defeated and the Bourbon monarchy restored. About a million Frenchmen died during the Napoleonic Wars.
After his brief return from exile, Napoleon was finally defeated in 1815 at the Battle of Waterloo, the monarchy was re-established (1815–1830),















WW I

France was a member of the Triple Entente when World War I broke out. A small part of Northern France was occupied, but France and its allies emerged victorious against the Central Powers at a tremendous human and material cost. World War I left 1.4 million French soldiers dead, 4% of its populatio

WW II

In 1940, France was invaded and occupied by Nazi Germany. Metropolitan France was divided into a German occupation zone in the north and Vichy France, a newly established authoritarian regime collaborating with Germany, in the south, while Free France, the government-in-exile led by Charles de Gaulle, was set up in London.[67] From 1942 to 1944, about 160,000 French citizens, including around 75,000 Jews,[68][69][70] were deported to death camps and concentration camps in Germany and occupied Poland.

On 8 May 1945, while Liberation was celebrated in Francep


BASTILE BROKE OUT -
FRENCH REVOLUTION1789-92

England and France went to war in what would become known as the Hundred Years' War.[48] The exact boundaries changed greatly with time, but French landholdings of the English Kings remained extensive for decades. With charismatic leaders, such as Joan of Arc and La Hire, strong French counterattacks won back English continental territories

Friday, 18 May 2018

R.M.VEERAPPAN -HOW TO CAPTURE POWER






R.M.VEERAPPAN -HOW TO CAPTURE POWER




ஆர்.எம்.வீ.யின் திருவிளையாடல்

எம்,ஜி.ஆர் நாடக மன்றம்” தொடங்கிய காலத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருவர் ரவீந்தர். மற்றொருவர் ஆர்.எம்.வீரப்பன். ரவீந்தர் கடந்து வந்து சினிமா பாதையை எழுதும்போது ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி எழுதாமல் தவிர்க்க முடியாது. அப்படி எழுதாமல் விட்டால் அது முழுமை பெறாது.

ஆர்.எம்.வீ. அவர்கள் சினிமாத்துறையில் கோலோச்சிவிட்டு, அரசியலில் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர். அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அவரைப்பற்றி நான் கண்டதும், கேட்டதும்,எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் மற்றும் சினிமாத்துறையில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் பகிர்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவரைப் பற்றி சேகரித்த தகவலின் பேரிலும், இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்.

“Your freedom ends where my Nose begins” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒருவரது தனிப்பட்ட குணாதிசயம் எப்பொழுது மற்றவருடைய வாழ்க்கையில் இடையூறாக அமைகிறதோ அப்போது அந்த மனிதனை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

காஜா மெய்தீன் என்கிற ரவீந்தரை திரையுலகில் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்” என்றால்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எம்.ஜி.ஆருடைய நிறுவனத்தில் முதல் பணியாளராக வேலைக்கு அமர்ந்ததும் நாகூர் ரவீந்தர்தான். அந்த நிறுவனத்தில் எல்லோரையும்விட சீனியரும் அவரேதான். அதன் பிறகு வந்து பணிக்கு அமர்ந்தவர்தான் ஆர்.எம்.வீரப்பன்.

ஆர்.எம்.வீ. சைக்கிள் கேப்பில் ஆட்டோவை நுழைக்கத் தெரிந்தவர். எம்.ஜி.ஆரையை தன்வசப்படுத்த தெரிந்த ஆர்.எம்வீக்கு ரவீந்தரை ஓவர்டேக் செய்வது அப்படியொன்றும் கம்பச் சித்திரமாக இருக்கவில்லை.

எம்.ஜி.ஆரிடம் 500 ரூபாய் கைநீட்டி சம்பளம் வாங்கிய இவர் பிற்காலத்தில் எம்.ஜி.ஆரையே தன்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலைக்கு கொண்டு வந்தார் என்றால் இவர் எப்படிப்பட்ட ‘எம்டன்’ என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இவர் இருந்தார். சில சமயங்களில் எம்.ஜி.ஆரிடமும் சக்கரபாணியிடமும் துணிச்சலாக கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்வார். ‘கணக்கு விஷயத்தில் இவ்வளவு கறாராக இருக்கிறாரே, இவரைப் போன்ற ஒரு சிறந்த நிர்வாகி வேறு யாரும் இருக்க முடியாது’ என்ற நம்பிக்கையில் நிர்வாகப் பொறுப்பு அனைத்தையும் ஆர்,எம்.வீ.யிடமே ஒப்படைத்திருந்தார் எம்.ஜி,ஆர். இவர் வைத்ததுதான் சட்டம், இவர் சொல்வதுதான் வேதவாக்கு என்ற நிலை நாளடைவில் ஏற்பட்டது.

சாதாரண பணியாளராக வந்துச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் நிர்வாக இயக்குனராகவும், 1963-ஆம் ஆண்டு சத்யா மூவீஸின் அதிபராகவும் எப்படி ஆனார் என்பது எல்லோரையும் பிரமிக்க வைக்கும். அது அவரது உழைப்பின் பலனாலா அல்லது அவரது சாணக்கியத் தந்திரத்தாலா என்ற உண்மையை இதைப் படித்தபின் வாசகர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

எம்.ஜி.ஆர். பிக்சர்சை பொறுத்தவரை ரவீந்தரின் வாழ்க்கையில் பலவிதமான முட்டுக்கட்டைகள் ஆர்.எம்.வீ போட்டிருக்கிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் ரவீந்தரைப்போல் இன்னும் பலர் இருக்கின்றனர். அவை அத்தனையும் இங்கு விவரிக்க இயலாது.

எம்.ஜி.ஆரின் சொந்த நிறுவனத்தை ஆர்.எம்.வீ . எப்படி முழுவதுமாகவே தன் வசம் கொண்டு வந்து மற்றவர்களை கைப்பாவையாக்கினார் என்பதை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சில சம்பவங்களிலிருந்து நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்ததற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு “வசூல் மன்னன்” என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. எதிர்பார்த்ததைவிட மிகுந்த இலாபம் கிடைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு திரை மறைவிலிருந்து கடுமையாக உழைத்த ரவீந்தருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக குடிகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். நாகூரிலிருக்கும் ரவீந்தருடைய இல்லத்திற்கு வருகை தந்ததும் இச்சமயத்தில்தான்.

அடையாறு பகுதியில் ஒரு நல்ல இடம் விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி அப்படியே ரவீந்தருக்கு கொடுத்து விடுவது என்று எம்,ஜி.ஆர். முடிவு செய்கிறார். தன் எண்ணத்தை எம்.ஜி.சக்கரபாணியிடம் சொன்னபோது அவரும் மனமகிழ்கிறார். எம்.ஜி.சக்கரபாணிக்கு தொடக்க முதலே ரவீந்தர் மீது தனிப்பட்ட பிரியம் இருந்து வந்தது. அவர்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தவர் அவர். ஆனால் ஆர்.எம்.வீரப்பனுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. எந்தக் காலத்திலும் ரவீந்தருக்கு தன்னை விட முக்கியத்துவம் எம்.ஜி.ஆர். கொடுத்து விடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீ. படுதீவிரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் தனிமையில் இருந்தபோது ரவீந்தரைப் பற்றி என்ன போட்டுக் கொடுத்தாரோ தெரியாது.

ஒருநாள் ரவீந்தரை தனியே அழைத்த எம்.ஜி.ஆர். அவருக்காக அடையாறு பகுதியில் ஒரு இடம் வாங்கித்தர விரும்புவதாக கூறிவிட்டு அதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். அதாவது, அந்த இடத்தை அவர் பெயரில் இல்லாமல் அவருடைய மனைவி பெயரிலேயே ரிஜிஸ்டர் செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்..

ரவீந்தருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றுவிடுகிறார். ஒருபக்கம் சந்தோஷம். இன்னொருபக்கம் வேதனை. எதற்காக தன்பெயரில் ரிஜிஸ்டர் செய்ய எம்.ஜி.ஆர். தயக்கம் காட்ட வேண்டும்? புரியாமல் ரவீந்தர் தவிக்கிறார்.

யாரோ ஒருவர் எம்.ஜி.ஆரிடம் உண்மைக்கு மாறான விஷயங்களை விஷமத்தனமாக காதில் ஓதி, தன்னைப் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை உண்டாக்கி, அவர் மனதை கலைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் திட்டவட்டமாகத் தெரிந்தது.

ரவீந்தர் அப்படியொன்றும் ஊதாரித்தனமாகச் செலவு செய்பவர் அல்ல. எந்தவித அனாவசியமான செலவுகளும். அடாவடிப் பழக்கங்களும் இல்லாத மனிதரவர். குணத்தில் குன்றாகத் திகழ்ந்தவர். அப்படிப்பட்டவரிடம் “நான் உன் பெயரில் இடத்தை வாங்கித்தர மாட்டேன். வேண்டுமென்றால் உன் மனைவியின் பெயரில் நான் வாங்கித் தருகிறேன்” என்று சூசகமாக எம்.ஜி.ஆர் சொன்னது ரவீந்தருக்கு பெரிய அவமானமாக இருந்தது.

தன்மானமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டான். அல்லும் பகலும் விசுவாசமாக உழைக்கின்ற நம்மையே நம் முதலாளி சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறாரே என்று மனம் நொந்து போன ரவீந்தர் எம்.ஜி.ஆரிடமே நேரடியாக வேண்டாம் என மறுத்து விடுகிறார்.அவரும் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறார். யாருடைய உபகாரத்தையும் எதிர்பார்த்து நிற்கும் பழக்கமில்லாத மனிதர் ரவீந்தர். அதனைத் தொடர்ந்து, தன் வாழ்நாள் முழுதும் வாடகை வீட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. அதற்காக அவர் ஒருபோதும் மனம் வருந்தியதில்லை.

எம்.ஜி.ஆர். மிகப்பெரிய தயாள மனப்பான்மைகொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவர் மனம் புண்படும் வகையில் ஒருக்காலும் பேசக்கூடியவரல்ல அவர். ரவீந்தரைப் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை எம்.ஜி.ஆரின் மனதில் உண்டாக்கியவர் ஆர்.எம்.வீ.தான் என்று நாம் அடித்துக் கூற முடியவில்லை என்றாலும் எம்.ஜி.ஆரிடம் துணிச்சலாகச் சென்று மற்றவர்களைப் பற்றி ‘போட்டுக் கொடுக்கும்’ தைரியம் ஆர்.எம்.வீ.யைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது என்கிறார்கள் ரவீந்தருக்கு சினிமாத்துறையில் நெருக்கமானவர்கள்.

நாடோடி மன்னன் பணச்சிக்கல்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் ரவீந்தர் வசனம் எழுதிய இப்படத்தை “கண்ணதாசன்” என்று பெயர் போட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை
தனது பண சேமிப்பு அத்தனையும் முதலீடு செய்து, சொத்து யாவற்றையும் அடமானம் வைத்து முடக்கி “நாடோடி மன்னன்” படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தார். “இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையெனில் நான் நாடோடி” என்றுகூட அறிவித்தார். படத்தை எடுத்து முடிந்த தறுவாயில் பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை. அக்காலத்தில் அது ஒரு பெரிய தொகை. யாரிடமாவது கடன் வாங்கி பணத்தை புரட்டி படத்தை வெளியிடவேண்டிய நிலைக்கு எம்.ஜி.ஆர் தள்ளப்படுகிறார் . வாரி வாரி வழங்கிய அந்த வள்ளலுக்கு இப்படியொரு எதிர்பாராத பணச்சிக்கல்.

‘கெயிட்டி’ திரையரங்கத்தை நடத்தி வந்த ராமச்சந்திர ஐயர் ஏ.வி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித் தருவதாக உறுதி யளிக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் பேச எம்.கே.சீனிவாசன் முன்வந்தபோது எம்.ஜி.ஆர். சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்..

“கடன் பத்திரத்தில் கையெழுத்து நீங்கள் போட வேண்டாம் அது பின்னர் உங்கள் சொத்துக்கே பிரச்சனையாக வந்துவிடும். நிலைமையை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்” என்று ஆர்.எம்,வீரப்பன் சொன்னதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் ஆறுதல். தன்னுடைய “இமேஜ்” எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீ. இந்த அளவுக்கு தன் மீது கரிசனமாக இருக்கிறாரே என்று எம்.ஜி.ஆர். அப்படியே மனம் குளிர்ந்து போகிறார்.

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பதை அவர் அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை போலும்.

ஆர்.எம்.வீ.யின் ஆலோசனை எம்.ஜி.சக்கரபாணியின் மனதிலும் சரியாகவே படுகிறது. இக்கட்டான இச்சூழ்நிலையில் கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தன் அருமை தம்பி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் அவரும் முன்ஜாக்கிரதையாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு தருணத்தைத்தான் ஆர்.எம்.வீ. ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்கிறார். அது எப்படிப்பட்ட திட்டம் என்பது சற்று நேரத்திற்குள் உங்களுக்குத் தெரிய வரும்

இதற்கிடையில், ஏ.வி.எம். நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய எ,ம்.கே.சீனிவாசன் எம்.ஜி.ஆரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை விளக்குகிறார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தரப்பினருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படம் வெளியாவது தாமதமானால் பலவிதத்தில் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிவருமே என்று எம்.ஜி.ஆர். கலங்குகிறார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இலங்கைங்கான வெளியீட்டு உரிமையை “சினிமாஸ் லிமிடெட்” என்ற கம்பெனிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தைக் “Surity”யாக காண்பித்து அந்த நிறுவனத்திலிருந்து வரவிருக்கும் தொகையை அப்படியே ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொடுத்து விடுவது என்றும், அந்த கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை அவர்களிடமே அடமானம் வைத்து விடுவது என்றும் முடிவாகிறது. இந்த திட்டத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் முன்மொழிகிறார். இந்தப் பிரச்சினையை சுலபமாக தீர்க்கும் வகையில் புத்திசாலித்தனமாக இப்படியொரு அற்புதமான ஆலோசனையை வழங்கிய அவரை எம்.ஜி.சகோதரரர்கள் இருவரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.

ஒப்பந்தத்தில் ஆர்.எம்.வீரப்பனும் எம்,.ஜி.சக்கரபாணியும் கையெழுத்துப் போடுவது என்றும் அதுதான் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பு என்றும் வீரப்பன் எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்கிறார். எம்.கே.சீனிவாசனும் இந்த முறையான திட்டத்திற்கு ஏ.வி.எம்.நிறுவனம் நிச்சயம் சம்மதம் கிடைத்துவிடும் என உறுதியளிக்கிறார்.

பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது. படச்சுருள் வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே எம்.ஜி.ஆர். ஆரம்பித்து விடுகிறார். பட வெளியீட்டுக்கான தேதியும் அறிவிக்கப்படுகிறது.

ஏ.வி.எம். நிறுவனத்திற்கு பணம் வாங்கச் சென்றபோது எதிர்பாராத வேறொரு சிக்கல் முளைக்கிறது. காரணம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் இலங்கையின் “சினிமாஸ் லிமிடேட்” நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்துதான் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த கடன் பத்திரத்திலும் எம்.ஜி.ஆர்.தான் கையெழுத்திட்டாக வேண்டும் என்று ஏ.வி.எம்.நிறுவனத்தினர் கறாராகச் சொல்லிவிடுகின்றனர்.

வேறுவழியின்றி எம்.ஜி.ஆரும் ஒப்பந்தத்தில் தானே கையெழுத்துப் போட தயார் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். பெரும் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கும் நாடோடி மன்னன் படத்தை உரிய காலத்தில் வெளியிட்டாக வேண்டுமே என்ன செய்வது?

ஊஹும். ஆர்.எம்வீ. தன் நிலைபாட்டில் உறுதியாக இருப்பதோடல்லாமல் மீண்டும் எம்.ஜி.ஆரை உரிமையுடன் தடுத்துவிடுகிறார். “பணம் திருப்பிக் கொடுப்பதில் ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால் உங்களுடைய எதிர்காலமே பாழாகிவிடும். உங்களுக்கு ஏதாவதொன்று என்றால் அதை நான் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பிரச்சினையை நானே சமாளித்துக் கொள்கிறேன். கவலையை விடுங்கள். நீங்கள் ஒருபோதும் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஆர்.எம்.வீ. கூறியதும் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போய் விடுகிறார். “இப்படி ஒரு விசுவாசியை அடைவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று அவர் மனதிற்குள் நினைத்திருக்க வேண்டும்,

இப்பொழுதுதான் ஆர்.எம்.வீரப்பனின் கிரிமினல் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது, சாணக்கியத்தனமாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்.

“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் என்றிருக்கும் கம்பேனியின் பெயரை உடனே ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர் மாற்றுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று எம்.ஜி.சக்கரபாணிக்கு ஆலோசனை வழங்குகிறார். பெரியவரிடம் கலந்தாலோசித்த பிறகு “இவ்விஷயத்தில் எது நல்லதோ அதன்படி செய்யுங்கள்” என்று கூறி முழு அதிகாரத்தையும் எம்.ஜி.ஆர். அவருக்கே அளித்து விடுகிறார்.

இந்த தருணத்தை எப்படி அவர் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார் என்பதைப் பாருங்கள். “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்ற புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தன் பெயரை இணைத்துக்கொண்டதோடு மற்றொரு இயக்குனராக எம்.ஜி.சக்ரபாணியின் பெயரை முறைப்படி பதிவு செய்துக் கொள்கிறார்.

“இலங்கையைச் சேர்ந்த ‘சினிமாஸ் லிலிடேட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்றிருந்தது. அச்சமயத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால்தான் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து இடம்பெற்றிருந்தது. இப்போது கம்பெனியின் பெயர் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் நிர்வாக இயக்குநராக நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் இருக்கிறோம் எனவே நாங்கள் இருவரும் கையெழுத்துப் போட்டாலே சட்டப்படி இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்” என்று ஏ.வி.எம்.நிறுவனத்தாரிடம் வாதிட்டு அதில் வெற்றியும் காண்கிறார்.. கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான அத்தனை கோப்புகளையும் ஒப்படைக்கிறார். ஆர்.எம்.வீ. எடுத்து வைக்கும் வாதம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. அவர்களால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை

ஒப்பந்தம் கையெழுத்தாகி பணம் கைமாறியபின் ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சிரித்துக் கொண்டே சொல்கிறார். “கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சித்தோம். கடைசியில் நீங்கள்தான் ஜெயித்தீர்கள்” என்று ஆர்.எம்.வீ.யின் முதுகில் செல்லமாகத் தட்டி ‘சபாஷ்’ சொல்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸின் முழு அதிகாரமும் ஆர்.எம்.வீ.யின் கைக்கு வந்து விடுகிறது. “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை” ஓட்டியது போல் நாளடைவில் எம்.ஜி.சக்கரபாணியையும் நிர்வாகத்தில் தலையிடாதவண்ணம் ஒதுக்கி வைத்து விடுகிறார்.

இத்தனை சாணக்கியத்தனம் நிறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை பெட்டிப் பாம்பாக ஆக்கி, அடக்கி ஆளத் தெரியாதா என்ன? ரவீந்தரை இவர் மட்டம் தட்டி வைத்திருக்கின்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இல்லை. நிர்வாகம் அனைத்தும் ஆர்.எம்.வீயின் கைகளில் இருந்ததால் அவர் பேச்சை கேட்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு.

அரசியல் தகிடுதத்தம்

எம்.ஜி.ஆர். - கருணாநிதி

2010-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கருணாநிதி மேடையில் சொன்ன செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945-ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்”

எம்.ஜி.ஆருக்கு விசுவாசியாக வேஷம் போட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீ. அதேசமயத்தில் அவருடைய அரசியல் எதிரியாக விளங்கிய எதிரணி தலைவரிடத்திலும் எப்படி விசுவாசமாக இருந்தார் என்பதை அறிந்து வியந்து போகிறோம். “கள்ளக்காதல்” என்று சரியான சொற்பதத்தை பயன்படுத்தியிருக்கும் கலைஞரின் மொழித்திறமையையும் நாம் போற்றுகிறோம்.

எம்.ஜி.ஆர் - வீரப்பன்

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய மற்றொரு விசுவாசியான ரவீந்தரிடம் இப்படியொரு இரட்டை வேடத்தை நம்மால் காண இயலாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி கபட நாடகம் ஆடித்திரியும் மனிதர்களுக்குத்தான் யோகம் போலும். இது எம்.ஜி.ஆருக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் என்றே நான் நினைக்கிறேன்.

1981-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.

அப்போது ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய துறை அமைச்சராக பதவி வகித்தார். கோவில் அதிகாரி பணத்தை திருடி மாட்டிக் கொண்டதாகவும், அதனால் அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார் எனவும் ஆர்.எம்.வீ. அறிவித்தார்.

அப்போது திமுக தரப்பில் விடுத்த அறிக்கை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் பகிரங்கமாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ஆர்.எம்.வீக்கு எதிராக போர்கொடி தூக்கி, நீதி கேட்டு நெடும் பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் நியாயம் கேட்டதும் நம்ம கருணாநிதிதான்.

இப்பொழுது ஆர்.எம்.வீ.யின் நட்பைப் பாராட்டி கருணாநிதி நற்சான்றிதழ் வழங்குவது நகைப்பிற்கிடமாகத் திகழ்கிறது. கள்ளக்காதல் நற்குணமெல்லாம் பார்க்காது போலும்.

பகுத்தறிவாதியாக, பெரியாரின் சீடராகத் திகழ்ந்த சுயமரியாதைச் சீலர் ஆர்.எம்.வீ “ஆழ்வார்கள் ஆய்வு மைய”த்தின் தலைவராக பதவி வகித்தார். எந்த இராமனை கடுமையாக விமர்சித்து “கம்ப ரசம்” எழுதினாரோ அந்த அண்ணாவின் அன்புத் தம்பி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட ஆர்.எம்.வீ.தான் பிற்காலத்தில் நாகூர் மு.மு.இஸ்மாயிலுக்குப் பிறகு கம்பன் கழகத் தலைவராக பதவியில் அமர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருணையே வடிவான (?) அவரை இப்பொழுது எல்லோரும் “அருளானந்தர்” என்றுதான் அழைக்கிறார்கள். நாளை சுவாமி அருளானந்தாவாகக் கூட அழைக்கப்படலாம்.

1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகையில், கட்சிக்காரர்களைத் ஒன்று திரட்டி தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்துக் கொண்டு தந்திரமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தையே கையில் எடுத்துக்கொண்ட ‘ராஜகுரு’தான் இந்த ஆர்.எம்.வீ.

1981-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது “காவிரி தந்த கலைசெல்வி” என்னும் நாட்டிய நாடகத்தில் நடிக்க சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்து அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்டவர் அப்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன்தான். வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான் என் ஞாபகத்திற்கு வந்தது.

அதேசமயம் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாத வண்ணம் அவரை விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ததும் ஆர்.எம்.வீரப்பன்தான்.

1996-ஆம் ஆண்டு “பாட்சா படத்தின் வெள்ளி விழாவின்போது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்துவிட்டது என்று ரஜினி பேசியதை மறுப்பேதும் கூறாமல் ரசித்துக் கொண்டிருந்தார் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தையும் நம்மால் மறக்க இயலாது.

ஆர்.எம்.வீ.யைப் பொறுத்தவரை அவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார் அல்லது கொள்கைப் பிடிப்போடு இருந்தார் என்று யாரும் கூறிட முடியாது. ‘பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவன் நான்’, ‘அண்ணாவின் அன்புத்தம்பி நான்’ என்று பறைசாற்றிக் கொண்ட அவர் எப்படியெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார் என்பதை நாடறியும்